புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2013

அண்ணா மேம்பாலத்தில் தற்கொலை செய்த பெண்ணின் காதலன் கைது

கோடம்பாக்கம் காமராஜர் கிழக்கு தெருவில் குடியிருந்தவர் அஞ்சலி (26). மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த இவர் நேற்று மாலை சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொணடார். இதையறிந்
த அவரது காதலர் புவனேஸ்வர் அங்கு வந்து கதறி துடித்தார்.


தேனாம்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் சிவபாஸ்கர், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட அஞ்சலியின் காதலன் புவனேஸ்வரிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் காதலன் தூண்டுதலால் அஞ்சலி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து புவனேஸ்வரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 306வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புவனேஸ்வர் போலீசுக்கு அளித்த வாக்குமூலத்தில், ’’அஞ்சலி திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர். அவருக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. சென்னை கொரட்டூரில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் அவரை அதே கட்டிடத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நான் சந்தித்தேன். பின்னர் கணவன்–மனைவி போல் வாழ்ந்து வந்தோம்.
இந்த நிலையில் எனக்கு ஊரில் பெண் பார்த்தார்கள். எனவே அஞ்சலி என்னை 2–வது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். நான் அதை ஏற்கவில்லை. எனக்கு திருமணம் நடந்தாலும் சென்னையில் நாம் ஒன்றாக இருப்போம் என்றேன். அதை அஞ்சலி ஏற்காமல் தற்கொலை செய்து கொண்டார்’’என்று கூறியுள் ளார்.

ad

ad