புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013

தம்புள்ளை அம்மன் கோவிலிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும்!- இனாமலுவ தேரர்
தம்­புள்ளை அம்மன் கோவில் அமைந்­துள்ள இடத்தில் குளம் ஒன்று நிர்­மா­ணிக்கும் பணி முன்­னெ­டுக்­கப்­பட்­டு­  வரும் நிலையில் தம்­புள்ளை விகா­ரா­தி­பதி இனாம­லுவ தேர­ரினால் அப்­ப­கு­தி­யி­லுள்ள மக்கள் இன்று வெள்­ளிக்­கி­ழமை அங்­கி­ருந்து வெளி­யே­ற வேண்டு­மென காலக்­கெடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. 
அம்மன் கோவிலைச் சுற்­றி­வர அகழ்வுப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­துடன் கோவில் முன்­னா­லி­ருந்த மரங்­களும் அகற்றப்­பட்­டுள்­ளன.
அண்­மையில் அம்மன் சிலை தகர்க்­கப்­பட்ட போது நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்ட பிர­த­மரும் மத விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­ரு­மான டி.எம்.ஜய­ரத்ன அம்மன் கோவில் அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றப்ப­டு­வ­தற்கு முன்பு மாற்­றி­டத்தில் கோவில் நிர்­மா­ணித்து வழங்­கப்­படும் என உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.
பிர­த­மரின் உத்­த­ர­வி­னையும் மீறி பௌத்த தேரர் கோவிலை அகற்றும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக கோவி­லுக்குப் பொறுப்­பா­ன­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.
இந்நிலையில் கோவிலுக்கும் அப்பகுதி தமிழ் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தம்புள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ad

ad