இராணுவம் நிறுத்திய வேட்பாளர்களுடன் ஹத்துருசிங்க வல்லிபுரக் கோயிலில் வழிபாடு!- ஆதாரப் புகைப்படங்கள் கசிந்தன
வடமாகாண சபைத் தேர்தலில் அரசாங்க கட்சியில் இராணுவத்தினரால் சில வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்துவது போல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வெற்றிலையில் போட்டியிடும் வேட்பாளர்களான அகிலன், சர்வா ஆகிய இருவருமே வல்லிபுரக் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழிபாட்டில் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் புகைப்படங்கள் வெளியாகியதால் இராணுவ வேட்பாளர்கள் தங்கள் குட்டு வெளிப்பட்டதென்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.