புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2013


வடக்கில் தமிழ் மொழிமூல இராணுவ ஆசிரியர்களை நியமிக்க முடியுமென்றால் ஏன் தெற்கில் இராணுவ ஆசிரியர்களை நியமிக்க முடியாதென கேள்ளவியெழுப்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வடக்கிற்கு ஒரு சட்டமும் தெற்கிற்கு வோறொரு சட்டமா எனவும் கேள்வியெழுப்பினார்.

அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே சுரேஷ் எம். பி. இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிலுள்ள சிங்கள பாடசாலைகளில் 17ஆயிரம் ஆங்கிலபாட ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாகவும் வடக்கில் இராணுவத்திற்கு பயிற்சியளித்து சிங்களம், கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை கற்பிக்க முடியுமென்றால் ஏன் நாட்டிலுள்ள 2இலட்சம் இராணுவத்திற்கும் பயிற்சியளித்து அவர்களுக்கு ஏன் தென்பகுதியிலுள்ள பாடசாலைகளில் கற்பிக்க முடியாது.
இதேவேளை, பாராளுமன்றத்தில் திவிநெகும சட்மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாகாணசபைகளிலுள்ள 15 அதிகாரங்களையும் அரசாங்கம் ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவந்து ஆட்சிசெய்ய நினைக்கின்றது. மாகாணசபைக்கு உரித்தான அதிகாரங்கள் தற்போது அதற்கு இல்லை. அனைத்தையும் அரசு கையகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்றத்தில் சிரிப்புக்கொருவிடயம் இடம்பெறவுள்ளது அதுதான் பிரதம நீதியரசர் மீதான பாராளுமன்ற வாக்கெடுப்பு. பாராளுமன்ற தெரிவுக்குழு செல்லுபடியற்றது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அரசாங்கம் அதனை தட்டிக்கழித்து தன்னால் எதை அதிக பட்சமாக செய்யமுடியுமோ அதை செய்து ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாகும்.
இதேவேளை, நாட்டை பாரிய நெருக்கடிக்குள் அரசாங்கம் தள்ளுகின்ற அதேவேளை, சிவில் நிரிவாகம் ஸ்தம்பிதமடையும். எனவே நாம் இதை உடனடியாக நிறுத்தி நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்ல முற்படுவோமெனத் தெரிவித்தார்.

ad

ad