புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2013

""ஹலோ தலைவரே... தி.மு.க.வில் எதிர் காலத்தில் பிரச்சினையாக மாறும்னு நினைச்ச சர்ச்சைக்கு ஜனவரி 6-ந் தேதி  கலைஞர் முற்றுப்புள்ளி வச்சிட்டாரே!''

""தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன்மொழி வேன்னு கலைஞர் பேட்டி கொடுத்ததைத்தானே சொல்றே.. முன்மொழிந்ததன் பின்னணியில் உள்ள தகவல்களைச் சொல்லுப்பா?''


""கட்சியின் மா.செ.க்கள் கூட்டம் முடிந்த பிறகுதான் கலைஞர் இப்படி பேட்டி கொடுத்தார். அந்த மா.செ.க்கள் கூட்டத்தில் என்ன நடந்தது என்று முழுசா விசாரித்தேன். கூட்டம் தொடங் கியதும் மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளை சொல்லச் சொல்லியிருக்கு மேலிடம். பல மா.செ.க் களும் மக்கள்கிட்டே  இந்த ஆட்சிக்கெதிரான மன நிலை கடுமையா இருக்குன்னும் பவர்கட், விலை வாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளால் மக்கள் நன்றி நக்கீரன் அவதிப்படுறாங்கன்னும் சொல்லியிருக்காங்க.''


""எம்.பி. தேர்தல் கூட்டணி பற்றியும் பேசப் பட்டிருக்குமே?''

""அதையும் சில தென்மாவட்ட மா.செ.க்கள் பேசுனாங்க. எம்.பி. தேர்தல்ங்கிறதால தேசியக் கட்சிங்கிற முறையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தேவைதான். ஆனா, மீனவர்களிடம் காங்கிரஸ் மேலே கடுமையான அதிருப்தி இருக்குது. இலங்கை ராணுவம் நம்ம மீனவர்களை சுட்டுக் கொல்றதை யும், அடிச்சி விரட்டுறதையும் மத்திய அரசு கண்டுக்கலைன்னு செம டென்ஷனா இருக் காங்கன்னு சொல்லியிருக்காங்க. வடமாவட்ட மா.செ.க்களும் எங்க பகுதியில் காங்கிரஸ் கூட்டணி தேவையில்லைன்னு சொல்லியிருக்காங்க. தர்மபுரி மாவட்டத்துக்காரங்க, எங்க ஏரியாவில் பா.ம.க. செல்வாக்கா இருக்கு. ஆனாலும் அவர்களோட கூட்டணி இல்லாம ஜெயிக்கலாம்னு சொல்லியிருக்காங்க. ஒரு சிலர், தே.மு.தி.க நம்ம கூட் டணியில் இருந்தால் வெற்றி எளிதுன்னும் சொல்லியிருக்காங்க. அப்ப, தென்சென்னை மா.செ. ஜெ.அன்பழகன் இன்னொரு கோணத்தில் பேசியிருக்காரு.''

""என்ன பேசினாரு?''

""கூட்டத்தில் தேர்தல் நிதியும் ஒரு அஜண் டாவா இருந்ததால, அதைப் பற்றி முதலில் பேசுன ஜெ.அன்பழகன், "என்னைப் பொறுத்த வரை நான் எங்க மாவட்டத்திற்கு என்ன இலக்கோ  அதற்கு மேலே நிதி வசூலித்துக் கொடுத்திடுவேன். ஆனா, முன்னாள் மந்திரிகளா இருந்த பல பேர் இப்ப மா.செ.வா இருக்காங்க. அவங்ககிட்டே முதலில் அதிக நிதி வாங்குங்க. மற்ற மா.செ.க்களால் அந்தளவுக்கு நிதி தர முடியாதுன்னு சொல்லிட்டு, தே.மு.தி.க கூட் டணி பற்றி பேசியிருக்காரு. அந்தக் கட்சியோடு கூட்டணி அமைப்பதில், தலைவர் அவசரப்பட வேணாம். ஏன்னா, ஜெ. கதவை மூடிட்டதால தே.மு.தி.க இப்ப வெளியிலேதான் நிற்குது. அதனால அவங்கதான் நம்மகிட்டே வரணும். நாமாக போகக்கூடாது. இப்பவும் விஜயகாந்த் மேடைக்கு மேடை நம்மை விமர்சிச்சிக்கிட்டுத் தான் இருக்காருன்னு சொல்லியிருக்கிறாரு.''

""புதுப் பார்வைதானே...''… 

""அதோடு கட்சியின் அடுத்த தலைவர் அவரா, இவரான்னு குழம்பிக்கிட்டிருந்தோம். அன்னைக்கு அந்தக் கூட்டத்திலே, உங்களுக்குப் பிறகு தளபதிதான்னு சொல்லி குழப்பத்தை தீர்த்துட்டீங்க. 15 வருஷமா தளபதிதான் அடுத்த தலைவர்னு நாங்க எதிர்பார்த்துக்கிட்டிருக் கோம்னு அன்பழகன் பேசியிருக்காரு. மதுரை புறநகர் மா.செ. மூர்த்தி பேசுறப்ப, எங்க மாவட்டத்தில் தளபதியும் அஞ்சாநெஞ்சனும் சேர்ந்து ஒரு செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி னாலே போதும். தேர்தல் நிதி, செலவுன்னு எதுவுமே இல்லாம ஜெயிச்சிடலாம்னு சொல்ல, அப்ப ஒரு கணீர்க் குரல் கேட்டது. ரோட்டுல போய் பேசு. இங்கே ஏன் பேசுற. அங்கே தலைமையை எதிர்த்துப் பேசுவீங்க. இங்கே வந்ததும் அண்ணன்மார் வந்தால் போதும்னு சொல்லுவீங்களான்னு கேட்டது. கலைஞரோட குரல்தான் அது. மா.செ.க்கள் கூட்டம் மொத்தமும் உறைந்துபோயிடிச்சி.''


""மூர்த்திக்கு ஷாக்கா இருந்திருக்குமே?''

""அவர் ஏதேதோ சொல்லி சமாளிக்கப் பாத்திருக்காரு. கலைஞர் கேட்கலை. தலைமையை பாதிக்கிற மாதிரி, பொறுப்பிலே இருக்கிறவங்க கருத்து சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு. தலைவருக்கு எதிரா எதுவும் சொல்ல லைன்னு மூர்த்தி விளக்கம் சொல்ல, மதுரையில் என்ன நடக்குதுன்னு தெரியும். உட்காருன்னு கோபமா சொல்லியிருக் காரு கலைஞர். மூர்த்தி உட்கார்ந்ததும் இரண்டு, மூணு மா.செக்கள் பேசியதோடு கூட்டம் முடிந்துவிட்டது. அப்ப மூர்த்தி, கலைஞர்கிட்டே போய், தலைவருக்கு எதிரா நாங்க .என்ன சொல்லமுடியும்னு பவ்யமா  சொல்ல, அதைப் போய் அங்கே உங்க ஊருல சொல்லுன்னு கோபம் காட்டியிருக்காரு கலைஞரு. கூட்டணி விஷயமா கலைஞர் பேசுறப்ப, அ.தி.மு.க. தனித்துப் போட்டின்னு அறிவிச்சிருக்கு. நாம அவசரப்பட வேணாம். கூட்டணிக் காக கட்சிகள் தேடி வரட்டும்னு சொல்லியிருக்காரு.''

""பா.ம.க.வினர் தி.மு.க.வில் சேர்ந்த விழாவில் கலைஞர் பேசுறப்ப, சமுதாயப் பணிகளை மேற்கொள்ள  தனக் குப்பிறகு ஸ்டாலின் இருக்காருன்னு சொல்ல, அதைப் பற்றி மீடியாக்கள் மு.க.அழகிரிகிட்டே கேட்டப்ப அவர் வழக்கமான அதிரடியா, தி.மு.க ஒன்றும் மடம் இல்லைன்னு சொன்னதுதானே கலைஞரின் இந்த கோபத்திற்கு காரணம்?''

""அதுதான்.. ஸ்டாலின் ஏதாவது சொல்லி, அதற்கு அழகிரி பதில் சொல்லியிருந்தால் அது வழக்கமான அரசியல் பரபரப்பாக மட்டும் பார்க்கப்பட்டிருக் கும். கலைஞர் பேசி யதற்கே அழகிரி அதிரடியா பதில் சொன்னால் அதை அவர் எப்படி பொ றுத்துக்குவார்? அதுதான் இந்தக் கோபத்தோட கார ணம். இந்த  அதிரடி கருத்துக்குப் பிறகு, சென்னைக்கு வந்த அழகிரி, கலைஞரைப் பார்க்க வந்தப்ப கூட, கலைஞர் தவிர்த்துட்டாராம். அவர் மனதில் இருந்த கோபமும் வேகமும்தான் மா.செ.க்கள் கூட் டம் முடிந்ததும் கொடுத்த பேட்டி யில் வெளிப்பட்டி ருக்கு.''

""அந்த பேட்டியில்கூட, பத்திரிகைகளில் வந்த விஷமத்தனத்தை நம்பிக்கொண்டு, யாராவது எதிர்க்கருத்து தெரிவித்திருந்தால், அது அவர்களுடைய புரியாமையைத்தான் குறிக்கும்னு கலைஞர் சொன்னதோடு, ஏன் ஸ்டாலின் வரக்கூடாதான்னு கேட்டு, வரக்கூடாது என்று இப்போதிருந்தே தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு வேண்டுமானால் கடுப்பு ஏற்படும்னும் அழகிரிக்கு பஞ்ச் கொடுத்திருந்தாரே..''

""தலைவரே.. கலைஞர் தன்னோட பேட்டி யில், வாய்ப்பு அமைந்தால் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன்னும், ஏற் கனவே பேராசிரியர் முன் மொழிந்திருக்கிறார்னும் சொன்னது, தி.மு.க கட்சி நிர்வாகிகள் பலருக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கு. மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள்னு எல்லோருமே கொஞ்ச காலமா குழப்பத்திலேதான் இருந்தாங்க. அதற்கு கலைஞரே முற்றுப்புள்ளி வைத்ததில் அவங்களுக்கு ரொம்ப திருப்தி.''

""ஒரு வருசத்துக்கு முன்னாடி அழகிரி பேட்டி கொடுத்தப்ப, கட்சித் தலைவர் தேர்தல் நடந்தால் நான் போட்டி போடுவேன்னு சொல்லி ஸ்டாலி னுக்கு ஷாக் கொ டுத்தாரு. அப்புறம், சென்னையில் நடந்த பொதுக் குழுவில், வீர பாண்டி ஆறுமுகம் பேசுறப்ப சென் னையைச் சேர்ந்த ஸ்டாலின் ஆதரவு பொதுக்குழு உறுப் பினர்கள் குரல் கொடுக்க உடனே கலைஞர்.. கட்சித் தேர்தலில் யாருக்கு செல்வாக்கு இருக் குதுன்னு பார்த் திடலாமான்னு ஸ்டாலின் தரப்புக்கு சவால் விடுற மாதிரி சொன்னாரு. இதெல்லாம் கட்சி நிர்வாகிகளை குழப்பத்தில்தானே வச்சிருந்தது. எந்த பக்கம் சப்போர்ட் பண்ணுறதுன்னு தெரியாம இருந்தாங்க.. இப்ப கலைஞரே ஸ்டாலினை முன்மொழிவேன்னு சொல்லிட்டதால அவங்களுக்கு நிம்மதிதானே...''…
""6-ந் தேதி கலைஞர் இதைச் சொன்னாரு. ஆனா, 5-ந் தேதியன்னைக்கு சென்னையில் தி.மு.க வட்டாரத்தில் ஒரே அலப்பரை. கனிமொழியின் பிறந்தநாள் விழாவுக்காக ஏகப்பட்ட பேனர்,  போஸ்டர், பத்திரிகை விளம்பரம்னு முதல்நாளிலிருந்தே கலக்கி எடுத்துக்கிட்டிருந்தாங்க. ஆதரவற்ற வர்களின் அன்புநாள்னு ஒரு விளம்பரம். அப்புறம், பைபிள் வாசகங்களை கோட் பண்ணி, அவர் அழிந்துவிடுவார்.. இவர் அழிந்துவிடுவார்னெல்லாம் பூடகமான விளம்பரங்கள். ஏற்பாடுகள் தாம்தூம்னு இருந்தது. சென்னையில் உள்ள சீனியர் கட்சிக் காரங்களே, என்ன நடக்குதுன்னு மிரட்சியா பார்த்தாங்க. தி.க தலைவர் வீரமணி நேரில் வந்து வாழ்த்தினாரு. அதுபோல, மு.க.ஸ்டாலினும் நேரில் வாழ்த்த, கனிமொழிக்கு ரொம்ப சந்தோஷம். ஸ்டாலின் ஆதரவு மா.செ.க்கள் பெரும்பாலோர் வரலை..''

""கனிமொழி ஆதரவு கட்சிக் காரங்க திரண்டு வந்திருப்பாங் களே..!''

""அவங்க மட்டுமில்லை.. நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவங் களும் நேரில் வந்து வாழ்த்தினாங்க. அவங்க சார்பில் வீரவாள் பரிசளிக்கப்பட்டது. தடபுடலான உணவு ஏற்பாட்டை மத்திய இணையமைச்சர் பழனிமாணிக்கம் செஞ்சிருந்தாரு. தயாநிதி மாறன் வந்து வாழ்த்தியதும் குஷ்பு, சல்மா இவங்களெல்லாம் வந்ததும் கட்சிக் காரர்கள் மத்தியில் ஆச்சரியமா பார்க்கப்பட்டது. அழகிரி சென்னையில் இருந்தாலும், சி.ஐ.டி காலனி வீட்டில் கலைஞர் இருந்த தால, நேரில் வராமல் போனில் வாழ்த்து சொல்லிட்டாராம்.''

""ஜனவரி 30-ந் தேதி அழகிரி பிறந்தநாளுக்காக கலைஞர் மதுரைக்குப் போவாருன்னு எதிர்பார்த்துக்கிட்டிருந்த நேரத் தில், ஸ்டாலினை அடுத்த தலை வர்னு கலைஞர் முன்மொழிஞ் சிருப்பது மதுரையில் என்ன எஃபெக்ட்டை ஏற்படுத்தியிருக்காம்?''

கலைஞர் பேட்டி பரபரப்பா டி.வி சேனல் களில் திரும்பத் திரும்பக் காட்டப்பட்ட நேரத்தில், மதுரையில் அழகிரியோ சேனலை மாற்றாமல் இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சை சீரி யஸா பார்த்துக்கிட்டிருந் திருக்காரு. விளம்பர இடைவேளையில் அவர் கிட்டே தகவலைச்  சொல்லி யிருக்காங்க. அதற்கு அழகிரி, கலைஞர் இருக்கும்வரை அவர்தான் தலைவர்னு நான் சொல்றேன். அவருக்குப் பிறகு ஸ்டாலின் வந்தால் நான் ஏன் குறுக்க நிற்கப் போறேன். கலைஞரும் அப்படித்தான் சொல்லி யிருக்காருனு சொன்னா ராம்.''

""அப்படியா கலைஞர் சொல்லியிருக்காரு?''

""பேட்டியின்போது பத்திரிகைகாரங்க, கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு நீங்க போட்டியிடமாட் டீங்களான்னு கலைஞர் கிட்டே கேட்டாங்க. அப்ப அவர்,  நான் அதுவரையில் இருப்பேனான்னு தெரி யாதுன்னு சென்ட்டி மென்ட்டா பதில் சொன் னாரு. பக்கத்தில் இருந்த பேராசிரியரோ, நாங்கள் முன்மொழிந்தால் மற்றவர்களும் முன்மொழிவாங்க. அதை கலைஞர் மறுக்க முடியாதுன்னு சொன்னார். இதைத்தான் கலைஞர் இருக்கும்வரை அவர்தான் தலைவர்னு அழகிரி  தரப்பு சொல்லுது.'' 

""ஸ்டாலின் ஏரியாவில் என்ன சொல்றாங்க?''

""அதை நான் சொல்றேன்.. ஸ்டாலின் தரப்புக்கு, கலைஞரின் அறிவிப்பு நிம்மதியைக் கொடுத்திருந்தாலும் பெரிய மகிழ்ச்சியெல்லாம் இல்லை. கலைஞர் காலத்திற்குப் பிறகு எப்படியும் அழகிரி குடைச்சல் கொடுப்பார். அதனால், கட்சித் தேர்தலில் கலைஞரே ஸ்டாலி னைத் தலைவரா முன்மொழி யணும்னு எதிர்பார்க்குறாங்க.''

படங்கள் : ஸ்டாலின் & அசோக்


 லாஸ்ட் புல்லட்!

ad

ad