புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2013


விநெகும தமிழ் மக்கள் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்தும்

தமிழ் மக்களின் வாழ்வை தடுக்க முயல்கிறது தமிழ் கூட்டமைப்பு
வாழ்வின் எழுச்சித் திட்டம் தமிழ் மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். ஆனால் எமது மக்களின் வாழ்வில் எழுச்சி ஏற் படுவதை தடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது என ஈ. பி. டி. பி. தலைவர் அமை ச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வாழ்வின் எழுச்சித் திட்டத்தினூடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படாது என்று கூறிய அவர் த. தே. கூட்டமைப்பை மக்கள் முழுமையாக நிரா கரிக்கும் காலம் நெருங்கி விட்டதாகவும் கூறினார்.
'திவிநெகும' சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது : எமது மக்கள் வாழ்வில் எழுச்சி பெறும் அவாவுடன் உள்ளனர். 13 ஆவது திருத்தம் குறித்து சில தமிழ் கட்சிகள் பேசுவது அரசியல் நாடகமாகும்.
நாம் எதிர்நீச்சலிட்டு போராடியதாலேயே இன்று 13 ஆவது திருத்தத்தை காக்க முடிந்துள்ளது. 13 ஆவது திருத்தத்தை பிணம் என்று தமிழ் கட்சிகள் ஒதுக்கின.
அரசியல் தீர்விற்கான ஆரம்பம் 13 ஆவது திருத்தமேயாகும். த. தே. கூட்ட மைப்பு உண்மையாக தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்து அக்கறை உள்ளவர்களல்ல. சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சியில் முன்வைக்கப்பட்ட 13ஆவது திருத்தத்தை விட சிறந்த தீர்வுத் திட்ட த்தை த. தே. கூட்டமைப்பினர் அன்று எரித்தனர். தமிழ் கூட்டமைப்பு நல்ல சந்தர்ப்பங்களை கைவிட்டதால் பிரச்சி னைக்கு தீர்வு எட்ட முடியாமல் போனது. இந்தப் பிரச்சினையை தீராப் பிரச்சினையாக்கி த. தே. கூ. அரசியல் செய்து வருகிறது.
எமது மக்களின் அரசியல் உரிமைக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறோம். சிதைவடைந்த மக்களின் வாழ்வை உயர்த்த பாடுபட்டு வருகிறோம். சகலதுறைகளிலும் எமது மக்கள் விடிவுபெற வேண்டும்.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங் களில் ஒரு பங்காகவே ‘திவிநெகும’ திட்டம் காணப்படுகிறது. மாகாணங்களின் அதிகாரங்களை பறிக்கும் திட்டம் எது வும் இதில் கிடையாது.
அரசாங்கம் அதற்கு எத்தகைய நடவ டிக்கையும் எடுக்காது.
அப்பாவி மக்களின் பிணத்தை வைத்து அரசியல் நடத்திய த. தே. கூட்டமைப்பினர் மாணவர்களை வன்முறையில் தூண்டி வருகின்றனர். மீண்டும் வன்முறையை ஏற்படுத்தி அரசியல் தீர்வு தருவதாக கூறி வருகின்றனர்.
புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு விட்டது. தமிழ் மக்களின் பிரச்சினையும் முடிந்துவிட்டதாக கருத முடியாது. த. தே. கூட்டமைப்பின் பிரச்சினை வேறு, தமிழ் மக்களின் பிரச்சினை வேறாகும். த. தே. கூட்டமைப்பை மக்கள் முழுமையாக ஒதுக்கும் காலம் நெருங்கி வருகிறது.
அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையி லான பேச்சுவார்த்தைகள் சரியாக பயன்படுத்தப்படவில்லை. நிறைவேற்ற முடியாத நிபந்தனையிட்டு பேச்சுக்களை குழப்பி வந்தனர்.
தமிழ் கட்சித் தலைமைகள் விட்ட தவறுகளை தமிழ் மக்கள் மீது சுமத்த முடியாது.
எமது மக்களுக்கு வாழ்வின் எழுச்சி கிடைக்கக்கூடாது என்பதே த. தே. கூட்டமைப்பின் கபட எண்ணமாகும். பொய்க் காரணங்களை கூறி ‘திவிநெகும’ திட்டத்தை தடுக்க முயற்சி மேற்கொள் ளப்பட்டது. வாழ்வின் எழுச்சித் திட்டம் எமது மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

ad

ad