புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2013


ஐ. சி. சி. தர வரிசை

துடுப்பாட்டத்தில் அம்லா; பந்து வீச்சில் அஜ்மல் முதலிடத்தில்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் முதல் இரு இடங்களையும் தென்னாபிரிக்க வீரர்கள் உள்ளனர். அதன் முழு விபரம் வருமாறு:-
ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தரவரிசையில் இந்தியக் கப்டன் மகேந்திர சிங் டோனி 4வது இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணித் தரப்பில் டோனி மட்டுமே சிறப்பாக விளையாடினார். 3 போட்டிகளில் அவர் 203 ஓட்டங்களை எடுத்தார். இதில் ஒரு சதத்தை டோனி விளாசியுள்ளார். இதனால் அவர் இரு இடங்கள் முன்னேறி 4வது இடத்தைப் பிடித்தார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திங்கட்கிழமை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெம்ஷெட் முன்னேற்றம்: பாகிஸ்தானின் தொடக்க வீரர் நkர் ஜம்ஷெட் 14 இடங்கள் முன்னேறி 31ஆவது இடத்தைப் பிடித்தார். இது அவருடைய அதிக பட்ச தரவரிசை இடமாகும்.
தென்னாபிரிக்க வீரர்கள் ஆதிக்கம்:
தரவரிசைப் பட்டியலில் முதல் இரு இடங்களையும் தென்னாபிரிக்க வீரர்கள் பகிர்ந்து கொண்டனர். முதல் இடத்தில் அம்லாவும் இரண்டாவது இடத்தில் டிவில்லியர்ஸ¤ம் உள்ளனர்.
பந்து வீச்சு:-
பந்து வீச்சுத் தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் அஸ்வின் மட்டுமே உள்ளார். அவர் 7ஆம் இடத்தில் உள்ளார். இஷாந்த் சர்மா, 24 இடங்கள் பின் தங்கி 72ஆவது இடத்தைப் பிடித்தார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களான சயிட் அஜ்மல் மற்றும் முஹம்மது ஹபீஸ் ஆகியோர் முறையே முதல் இரு இடங்களைப் பிடித்தனர்.
சகலதுறை வீரர்:
சகலதுறை வீரர் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா இரு இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்தைப் பிடித்தார். பாகிஸ்தானின் முஹம்மது ஹபீஸ் முதலிடத்துக்கு முன்னேறினார்.

ad

ad