புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2013

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கோகுல இந்திரா-விஜய்-சிவபதி நீக்கம்
தமிழக அமைச்சரவையில் இருந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, சுகாதார அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆகியோர் இன்று நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குப் பதிலாக புதிய அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

காதி மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சராக டி.பி.பூனாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக டாக்டர் வைகை செல்வன், சுகாதாரத்துறை அமைச்சராக கே.சி.வீரமணி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கல்வித்துறை, தொல்லியல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் ஆகிய துறைகளை புதிய அமைச்சர் வைகை செல்வன் கவனிப்பார். ஊரகத் தொழில்துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியனுக்கு சுற்றுலாத் துறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக உள்ள கே.பி.முனுசாமிக்கு, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத்துறை ஆகியவை கூடுதல் பொறுப்புகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. 

புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்ட மூன்று பேரும் நாளை காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் பதவியேற்க உள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று, கவர்னர் ரோசய்யா இந்த மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

ad

ad