புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2013




         "குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பது போல  ‘யார் யாரைச் சிக்க வைக்கலாம்?’ என பொட்டு கொலை வழக்கில் படு நேர்த்தியாக காய்கள் நகர்த்தப்படுகின்றன..'’ 

இவ்வழக்கின் போக்கு குறித்து இப்படிச் சொன்ன ஒரு சீனியர் காக்கி,

""தலைநகரத்துக்காக பொட்டுவை போட்டோம்.. என வாக்குமூலத்தில் சபாரத்தினம் உள்ளிட்ட கொலைகாரர்கள் ஏழு பேரும் முதலில் கை காட்டியது விஜயபாண்டியை.  தொடர்ந்து,  விஜயபாண்டியும் பிரபுவும் போலீஸ் காவலைச் சந்தித்த நிலையில் ’’ஆமாங்க.. தூங்கா நகரத்துக் காகத்தான் பொட்டுவை போட்டாங்களாம்..’’என எங்கிருந்தோ வந்த உத்தரவுக்கு பணிந்து விசாரணையை வேறொரு கோணத்தில் கொண்டு செல்வது,  சினிமாவில் வரும் ட்விஸ்ட்’ போலவே இருக்கிறது..'' என்று  உதட்டைச் சுளிக்க.. "கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்களேன்..?' என்றோம்.  

“""தலைநகரம் என்ற சினிமாத் தலைப்பை எப்படி அட்டாக் பாண்டிக்கு சூட்டினார்களோ? அது போலவே, தூங்கா நகரம் என்ற பெயரை அந்தப் பெயரில்  சினிமா தயாரித்த  துரை தயாநிதிக்கு வைத்திருக்கிறார்கள். "நெருப்பில் லாமலா புகையும்?' என்ற சந்தேக வளையத்துக்குள் கன கச்சிதமாகவே சிக்கியிருக்கிறார் அழகிரியின் அருமைப் புதல்வன் துரை தயாநிதி'' என்றார். 

"என்ன நெருப்பு? என்ன புகை?' என்னும் கேள்வியோடு விசாரணை நடத்திய காக்கிகள்,  மெல்ல மெல்ல முன்னேறிய ரூட்டில்  பயணித் தோம். அழகிரி, அட்டாக் பாண்டி வட்டாரங் களிலும் ஊடுருவினோம்.  நமக்கு கிடைத்த தகவல்கள் இதோ - 


சென்னை துர்க்கா பவனில் தலைமறைவு வாழ்க்கையை நகர்த்திய  அட்டாக் பாண்டி,  தாம் பரத்திலும் தனக்கு வசதியாக ஒரு வீடு பிடித்து தங்கியிருக்கிறான். செல்போன் கால் ட்ரேஸ் செய்ததில் காக்கிகளால் இதனை அறிய முடிந்திருக்கிறது. மத்திய அமைச்சர் அழகிரி எப்போது சென்னை வந்தாலும் தங்கிச் செல்லும் தி.நகர் ரெசிடென்ஸி அறையை தனது சினிமா தொடர்பான ஆலோசனைகளுக்கு துரையும் பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்தத் தளத்தில் நடந்த துரை - அட்டாக் சந்திப்பு அந்த விடுதி யின் கேமராவில் பதிவாகியிருப்பதாகச் சொல்லி, துரையின் பள்ளித் தோழரும் நண்பருமான ராமகிருஷ்ணனை அள்ளிக் கொண்டு வந்து விசாரித்த போலீஸ் "கொலை நடக்குறதுக்கு மூணு நாளைக்கு முன்னால.. உங்க நம்பர்ல இருந்து அட்டாக் நம்பருக்கு கால் போயிருக்கு.. அட்டாக்கோட கேஷியர் பிரபுவும் உங்ககிட்ட அடிக்கடி பேசியிருக்கான்.. என்ன நடந்துச்சு? உண்மைய சொன்னா   உங்கள விட்ருவோம்.. இல்லைன்னா.. மத்த ஃப்ரண்ட்ஸயும் விசாரிப் போம்.. ஒரு வேளை.. நீங்க சொல்லாதத அவங்க சொல்லிட்டா.. நடந்த சதியை மறைச்சதுக்காக..  நீங்களும் பொட்டு கொலை கேஸுல மாட்டிக்குவீங்க..' என்று மிரள வைத்திருக் கிறார்கள். ராமகிருஷ்ணனும் மறுக்காமல் "துரை நம்பருக்கு அட்டாக் போன் பண்ணுனா துரை அட்டெண்ட் பண்ண மாட்டாரு.. ஏன்னா அட்டாக்கோட பேசுறது துரைக்கு பிடிக்காது.. அதுனால.. என் நம்பருக்கு அட்டாக் போன் பண்ணி துரைகிட்ட கொடுக்கச் சொல்லுவாரு.. நான் கொடுத்தாலும் துரை பேச மாட்டாரு.. அதே நேரத்துல, என் செல்போன வாங்கி துரை யாருக்காச்சும் டயல் பண்ணிப் பேசுவாரு.. அவரு யாருகிட்ட பேசுவாருங்கிற விபரம் எனக்குத் தெரியாது.. பிரபு எனக்கு போன் பண்ணி துரையப் பத்தி நலம் விசாரிப்பான்.. அவ்வளவுதான்..' என்றிருக்கிறார்.  

போலீஸும் ராமகிருஷ்ணனிடம் "அது சரி.. நீங்கதானே துரையோட கேஷியர்..  க்ளவுட் நைன் மூவீஸ் சார்பா துரை தயாநிதி தயாரித்த  ‘"தமிழ் படம்'’ என்ற சினிமாவுக்கு 5 கோடி ரூபாய் வரை ஃபைனான்ஸுக்கு ஏற்பாடு செய்தாராமே பொட்டு..?  அது யாருடைய பணம்? எந்தக் கணக்கிலிருந்து வந்தது? அந்தப் படம் ஓடாம நஷ்டமானதுல.. பொட்டுவோட  பிரச்சினையாமே..?'’ என்று கொக்கி போட, "அதப் பத்தி எனக்கு எதுவும் தெரி     யாது..' என்று சொல்லியிருக்கிறார் ராமகிருஷ்ணன். 

துரை - அட்டாக் - பொட்டு என்ற  முக்கோண உறவு எப்படி இருந்தது?

அழகிரியின் வீட்டுக்கு காய்கறி வாங்கிக் கொடுப்பது,  அக்குடும்பத்தினர்  ஷட்டில் காக், கிரிக்கெட்  விளையாடும் போது பந்து பொறுக்கிப் போடுவது போன்ற உதவிகளைச் செய்து வந்த  முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகி வளர்ச்சி கண்ட பிறகு, அந்த இடத்துக்கு அழகிரியின் வீட்டுக்கு ஒரு பாதுகாவலனாக வந்தவன் அட்டாக் பாண்டி. துரைக்கு சிறுவயது முதற்கொண்டே     ‘ஆல்-இன்-ஆல்’ ஆக இருந்து வந்த    அட்டாக் பாண்டியுடனான  நெருக் கத்தை துண்டித்ததில் பொட்டுவின் பங்கு அதிகம். துரையின்  ‘எஸ்கார்ட்’ ஆக அட்டாக் பாண்டி சென்ற போது கார் விபத்துக்குள்ளாகி துரை சிகிச்சை பெற்ற போதே.. "எதுக்குண்ணே ரவுடிப் பசங்க சகவாசம்? இது நல்லதுக்கில்ல..' என்று எடுத்துச் சொல்லி அழகிரிக்கு புரிய வைத்தவர் பொட்டு. துரையும் இதை உணர்ந்தே அட்டாக் பாண்டியிடமிருந்து முற்றிலுமாக விலகினார். தந்தைக்கு மட்டுமல்ல.. தன்னுடைய எதிர்கால அரசியலுக்கும் நல்வழி காட்டுவார் பொட்டு என்ற நம்பிக்கை இருந்ததாலேயே, அட்டாக் பாண்டியின் உறவை முறித்தார். 

வன்முறை அரசியல் துரைக்கு பிடித்தமானதா? 

தா.கி. கொலை வழக்கில் சிக்கி மீள்வதற்குள் தந்தை பட்ட பாட்டையும், அதற்காக கோயில் கோயிலாக ஏறி இறங்கிய தாயின் பரிதவிப்பையும் அறியாதவர் அல்ல துரை.  அதற்காக சேட்டையே செய்யாதவர் என நற்சான்றெல்லாம் வழங்கி விட முடியாதுதான்.  அதே நேரத்தில், வழக்கு, போலீஸ் விசாரணை, கைது, சிறை போன்ற சமாச்சாரங் களுக்கு  பயந்தவர் என்பதை  குவாரி வழக்குக்காக அவர் ஓடிய ஓட்டமே காட்டிக் கொடுத்தது. சினிமா தயாரிப்பிலும்  விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டதாலேயே, துரை பேனரில் வந்த படங்களெல்லாம் தோல்வி கண்டன.  

இந்த அனுபவம் கற்றுத் தந்த பாடம், ‘இனி அரசியல்தான்’ என துரையை யோசிக்க வைத்தது.  ‘எம்.பி.ஆகி டெல்லி அரசியலில் கவனம் செலுத்த வேண்டும்..’ என்ற நிலைப்பாடு எடுத்தார். அதற்கு  மக்களிடம் நல்ல பெயர் எடுத்தாக வேண்டும்  என, நலத்திட்ட உதவிகள் வழங்கி ‘அன்பு நெஞ்சனாக’ தன்னை வெளிப்படுத்த ஆரம்பித்தார். 

அட்டாக்கை சந்தித்தாரா துரை?

என்ன இருந்தாலும் அழகிரிக்கு நெருக்கமானவர் பொட்டு.. துரையிடமும் சொல்லி வைப்போம்..’ என பொட்டு மீது இருந்த தன் ஆத்திரத்தை வெளிப்படுத்து வதற்காக சென்னையின் அந்த நட்சத்திர விடுதியில் துரையை சந்திக்க வந்திருக்கலாம். "500 ரூபாய் வீட்டு வாடகை கொடுக்க வழி யில்லாம இருந்த பொட்டுகிட்ட இப்ப 500 கோடி ரூபாய்க்கு மேல சொத்து இருக்கு.. அந்தப் பணத் திமிருல என்னையவே போட்டுத் தள்ள  ஆள ரெடி பண் ணிட்டான்.. இனியும் நான் விட்டு வைக்க மாட்டேன்..' என்று குமுறியிருக்கலாம். அதற்கு துரை "என்கிட்ட எதுக்கு இதச் சொல்லுற?' என்று எகிறவோ, "இதெல்லாம் வேணாம்..' என்று புத்திமதியோ சொல்லியிருக்க லாம். அந்த அறிவுரையைக் கேட்கக் கூடிய மனநிலையில் அட்டாக் இல்லாமல் இருந்திருக்கலாம்.  மிஞ்சிப் போனால், இப்படித்தான் நடந்திருக்கும். மற்றபடி, பொட்டு கொலையில் அழகிரிக்கோ துரைக்கோ எந்த சம்பந்தமும் இருக்காது என்று அடித்துச் சொல்கிறது அட்டாக் மற்றும் துரையை நன்கறிந்த அழகிரி வட்டாரம். 

போலீஸ் காவலில் விஜயபாண்டியும் பிரபுவும் தந்த வாக்குமூலம் என்ன?

சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் மூன்று நாட்கள் கஸ்டடியில் இருந்த விஜயபாண்டி மற்றும் பிரபுவை மூன்று இன்ஸ்பெக்டர்கள் விசாரித்திருக்கிறார்கள்.  சபாரத்தினம், சந்தானம் உள்ளிட்ட ஏழு பேரும் தந்த வாக்குமூலத்தையே இவ்விருவரும் வரி பிசகாமல் ஒப்பித்தார்களாம். காக்கிகளும் கடுப்பாகி "என்னடா அவிய்ங்க சொன்னதையே நீங்களும் சொல்றீங்க..' என்று வழக்கமான பாணியில் விசாரிக்க, "சேலம் ஜெயில்ல அவங்க ஏழு பேரையும் ரெண்டு செல்லுல நாலு பேரு.. மூணு பேருன்னு அடைச்சு வச்சிருந்தாங்க.. எங்க ரெண்டு பேரயும் பிரிச்சு அந்த ரெண்டு செல்லுலயும் போட்டாங்க.. அப்பத்தான் போலீசு எப்படி விசாரிச்சுச்சு.. அப்ப என்னென்ன சொன்னோம்னு ஏழு பேரும் சொன்னாங்க.. அதத்தான் நாங்களும் சொல்லுறோம்..' என்று விளக்கியிருக்கிறார்கள். பிறகு, விஜயபாண்டி “ஒரு மாசத்துக்கு முன்னாடி ரவுடி மாரிகிட்ட "எங்க மாமாவ (அட்டாக் பாண்டி) போட்டுத் தள்ளுறதுக்கு டீல் பேசிருக்கான் பொட்டு.. இதுக்கு  பொட்டு பக்கத்துலயே எப்பவும் இருக்கிற ஒரு ரவுடிதான் ஏற்பாடு பண்ணிருக்கான்.. ரவுடி மாரி தரப்புல இருந்து இந்தத் தகவல் எங்க மாமாவுக்கு பாஸ் ஆயிருச்சு.. மாமா கொதிச்சிட்டாரு.. நாம முந்திரணும்டான்னு ஏற்பாடு பண்ணச் சொன்னாரு..' என்று உண்மையை கக்கியிருக்கிறான். 


மேலும் அவன் "மூணு வருஷமா போலீஸ வச்சி மிரட்டிக் கிட்டிருந்த பொட்டு, இப்ப ரவுடிய வச்சி கொல்லப் பார்க்கிறான்னு சொல்ல வேண்டியவங்ககிட்ட சொல்லியாச்சு.. அவங்க.. "பொட்டு இப்ப எங்ககூட இல்லை'ன்னு சொல்லிட்டாங்க.. "உன் பாடு.. அவன் பாடு.. நாங்க சொன்னா நீங்க ரெண்டு பேரும் கேட்கவா போறீங்க'ன்னு  ஒதுங்கிட்டாங்க...' என்றிருக்கிறான்.  சேலம் சிறைக்குள் அந்த 7 பேரும் கூட்டாகச் சேர்ந்து இவ்விருவரிடமும் "அட்டாக் பேரை மட்டும் சொல்லிக்கிட்டிருந்தா நாம தப்பிக்க முடியாது.. அப்பாவயோ.. மகனயோ கையைக் காட்டுனாத்தான்.. வழக்குல இருந்து நம்மள காப்பாத்திக்க முடியும்.. பின்னால வளர முடியும்..'’ என்று வாக்குமூலம் தரும் விஷயத்தில் யோசனை கூறியிருக்கின்றனர்.  அப்போதைக்கு அங்கே தலையாட்டிய இருவரும்,  பொட்டு கொலையில் சம்பந்தப்படாத யார் பெயரையும் விசாரணையின் போது இழுத்து விடவில்லையாம்.

போலீஸ் கஸ்டடி முடிந்து 15 நாட்கள் ரிமான்ட் செய்யப்பட்டு சேலம் சிறைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த பிரபுவிடம் மதுரை ஜுடிசியல் கோர்ட் வளாகத்தில் பேசினோம். 

""பொட்டு கொலையில எந்த அரசியல்வாதியோட  பேரையும் நாங்க குறிப்பிட்டுச் சொல்லல.. பாண்டி பேரை மட்டும்தான் சொன்னோம்.  எங்க ட்ரெஸ்ஸ கழற்றச் சொல்லி..  நிர்வாணமாக்கிய போலீஸ்.. துப்பாக்கியக் காட்டி சுட்டு கொன்னுரு வோம்னுச்சு.. அழகிரி பேரை யும் துரை பேரையும் சொல்லச் சொல்லி அடிச்சு மிரட்டுச்சு.. ஆனா.. நாங்க சொல்லல.. அஞ்சு பக்கம் டைப் பண்ணுன தாள்ல  கையெழுத்து வாங்கினாங்க.. அதுல என்ன மேட்டர் இருந் துச்சுன்னு எங்கள படிக்க விடல.. வெத்துத் தாள்லயும் கையெழுத்து வாங்கினாங்க.. நாங்க பேசினத வீடியோவும் எடுத்தாங்க.. "அந்த ரெண்டு பேரு பேரையும் சொன்னா உங்களுக்கு ராஜ மரியாதை தான்'னாங்க.. ஆனா.. கடைசி வரைக்கும் நாங்க சொல்லவே இல்ல..'' என்றான். 

பாராளுமன்றத் தேர்தலில் மதுரை தி.மு.க.வை முடக்கிப் போடும் அளவுக்கு  மிரட்டிக் கொண்டிருக்கிறது பொட்டு கொலை வழக்கு!

-சி.என்.இராமகிருஷ்ணன் & முகில்
படங்கள் : அண்ணல்

ad

ad