பிரித்தானியாவிலிருந்து 65 இலங்கைத் தமிழர்கள் நாளை நாடுகடத்தப்படவுள்ளனர்
பிரித்தானியாவில் புகலிடம் கோரிய 65 இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன..
பிரித்தானிய அரசால் நாடுகடத்தப்பட்ட சிலர் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியா மீண்டும் தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை அனுப்பாமல் இருக்க வாக்களிக்குமாறு சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.