புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2013



            ""ஹலோ தலைவரே...… இன்னும் நான் அந்த அதிர்ச்சியி லிருந்து விலகலை..''

""நானுந்தாப்பா.. ஒரு பச்சிளம் பாலகனை இப்படியா சுட்டுக் கொல்லு வானுங்க.. இவனுங்களெல்லாம் மனுசனுங் களா.. த்தூ.''…nakeeran

""சேனல் 4 வெளியிட்ட படங்களால தமிழ்நாட் டில் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல வெளி நாடுகளிலும்கூட விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் பிடித்துவைக்கப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்ட படம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்குது. ஐ.நா.மனித உரிமை அவையில் இது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தும்னு சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் சொல்றாங்க.''

""அப்படின்னா இந்தியாவிலும் இது தாக்கத்தை ஏற்படுத்துமே.. எம்.பி. தேர்தல் நெருங்கிக்கிட்டிருக்குதே.''…

""இலங்கை அரசாங்கம் நடத்துன யுத்தத்துக்கு இந்தியா உள்பட சுற்றியிருக்கிற நாடுகள் செய்த உதவி உலகம் அறிந்த ரகசியம்தான். அதிலும் இந்தியா இன்றைக்கு வரைக்கும் இலங்கையை நட்பு நாடாக மதித்து எல்லாவித உதவிகளையும் செய்து வருது. அதனால, சிறுவன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக தமிழகத்தில் புதிய எழுச்சி ஏற்படுமா, ஆர்ப்பாட்டம்-வன்முறை சூழல்கள் உருவாகுமா, தீக்குளிப்பு சம்பவங்கள் நடக்குமா என்றும் எம்.பி. தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா என்றும் காங்கிரஸ் தரப்பில் ரிப்போர்ட் எடுக்கப்படுதாம்.''

""இவ்வளவு கொடூரங்கள் நடந்த பிறகும், தேர்தல் கணக்குத்தானா? துணை நின்ற பாவத்துக்கு பரிகாரம் தேடுற வழி கிடையாதா?''


""இலங்கை விஷயத்தில் இந்தியா வோட நிலை மாறியாகணும்னு தமிழகத் தில் உள்ளவர்கள் மட்டுமல்ல, வெளிநாடு களில் உள்ளவங்களும் சொல்றாங்க. இந்த நிலையில்தான் மார்ச் 7-ந் தேதி டெல்லி யில் டெசோ அமைப்பின் சார்பில் அகில இந்திய அளவிலான கருத்தரங்கம் நடக் குது. சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் கலந்துகொண்ட ராம்விலாஸ் பாஸ்வான்தான் அப்பவே இந்த ஐடியா வைக் கொடுத்தார். அதனால டெல்லியில் உள்ள கட்சிகளை கருத்தரங்கத்திற்கு அழைக்கும் வேலையில் தி.மு.க மும்முரமா இருக்குது.''

""யார்  யாரைக் கூப்பிட்டிருக்காங் களாம்?''

""பா.ஜ.க அத்வானி, சி.பி.எம். பிரகாஷ்காரத், சி.பி.ஐ. டி.ராஜா அப்புறம் முலாயம்சிங் யாதவ், லாலுபிரசாத் யாதவ் இவங்களையெல்லாம் கூப்பிட்டிருக்காங்க. காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டி ருக்குது. கனிமொழிதான் இவர்களையெல்லாம் தொடர்புகொண்டு அழைப்பு விடுக்கிறார். அத்தோடு, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான படங்களை பவர்பாயிண்ட் மூலமா அந்தத் தலைவர்களுக்கெல்லாம் விளக்கியிருக்கிறார். இலங்கைப் பிரச்சினையான்னு தேசிய தலைவர்கள் ஆரம்பத்தில் யோசிச்சிருக் காங்க. ஆனா, இப்ப சேனல் 4 வெளியிட்ட ஃபோட்டோக்களுக்குப் பிறகு, டெசோ கருத்தரங்கத்தில் கலந்துகொள்ளும் முடிவில் இருக்காங்களாம்.''

""நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்க நாளில்கூட தி.மு.க., அ.தி.மு.க. எம்.பி.க்கள் சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விவகாரத்தை எழுப்பியிருக்காங்களே..'' 

""ஆமாங்க தலைவரே.. ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்ங்கிற குரல் தமிழகத்தில் அதி கரித்துக்கொண்டே இருக்குதே.. ஹிட்லர் ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்துவதா ஜெ. பேட்டி கொடுத்திருக்கிறார். மத்திய அரசு இனியும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கக் கூடாதுன்னு கலைஞர் சொல்லியிருக்கிறார். வைகோ, போராட்ட அறிவிப்பை வெளி யிட்டிருக்கிறார். விஜயகாந்த், ஜி.ராமகிருஷ் ணன், ராமதாஸ், திருமாவளவன் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவிச்சிருக் காங்க. இதை அப்படியே தேர்தல் வரைக்கும் கொண்டுபோனால் என்னென்ன லாபம் கிடைக்கும்ங்கிற கணக்குகளும் போடப்படுது.''

""யார் போடுறா?''

""ஒரு சம்பவம் சொல்றேங்க தலைவரே.. ஜூலையில் சென்னையில் நடக்கும் ஆசிய தடகள விளையாட்டுப்போட்டியில் இலங்கை பங்கேற்கக்கூடாதுன்னும் அப்ப டிப் பங்கேற்றால் வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்ளவும்னும் ஜெ. அறிவித்திருக்கிறார். இலங்கை அரசின் போர்க்குற்ற செயல்களை வைத்துதான் இதை சொல்லியிருக் கிறார். ஆனா, சென்னையில் இந்தப் போட்டியை நடத்தணும்னு கேட்டு வாங்கியதே ஜெ. அரசுதான்..''

""விவரமா சொல்லுப்பா?''

""ஒலிம்பிக் அசோசியேஷன்தான் இந்தப் போட்டிகளுக்கு அத்தாரிட்டி. அவங்க இந்திய தடகள சம்மேளனத் துக்கிட்டே இந்த முறை இந்தியாவில் ஆசிய தடகள போட்டியை நடத்தும் பொறுப்பைக் கொடுத்தாங்க. அதை சென்னையில் நடத்துறோம்னு ஜெ.அரசுதான் கேட்டு வாங்கியது. 100 கோடி செலவில் ஏற்பாடுகள் நடக்குது. இப்ப ஜெ. திடீர்னு இலங்கை அணி வரக்கூடாதுன்னு சொன்ன தால, இந்திய தடகள சம்மேளனத்துக்கு நெருக்கடி. இனி மேல், இந்தியாவுக்கு எந்தப் போட்டியையும் நடத்தும் பொறுப்பைக் கொடுக்க மாட்டோம்னு ஒலிம்பிக் அசோசி யேஷன் சொல்லுதாம். இந்திய  தடகள சம்மேளன அதி காரிகளோ, இலங்கையில இப்பதான் திடீர்னு போர்க்குற்றம் நடந்ததா? அது ஜெ.வுக்கு திடீர்னுதான் தெரியுமா? சென்னையில் போட்டிகளை நடத்துறோம்னு கேட்டு வாங்குனாங்களே அப்பவே தெரியாதான்னு கேட்குறாங்க.''

""விளையாட்டு முக்கியமா? தேர்தல் வெற்றி முக்கியமா?ன்னு அதிகாரிகளுக்குத் தெரியலைப்பா.. புதிய தலைமைச் செயலகத்தில் மருத்துவமனை செயல்பட தடையில் லைன்னு பசுமைத் தீர்ப்பாயம் கொடுத்த உத்தரவு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியானது எல்லாம் தனக்குக் கிடைத்த பிறந்தநாள் பரிசுன்னு ஜெ. சொல்றாரே…!''

""இறுதித் தீர்ப்பை  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒருவழியா அரசிதழில் வெளியிட்டுவிட்டது. இது தனக்குக் கிடைத்த பிறந்தநாள் பரிசுன்னும் தன்னோட அரசியல்  வாழ்க்கையின் பெரிய வெற்றின் னும் இதற்கு நான்தான் காரணம்னும் ஜெ., தானே பெருமை கொண்டாடுவதும் தேர்தல் கணக்குத்தான். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அறுவடை பொய்த்துப் போனாலும், அவங்ககிட் டேயிருந்து ஓட்டுகளை அறுவடை பண்ணிடணும்ங்கிறதில் அ.தி.மு.க. தலைமை தீவிரமா இருக்குது.'' 


""காவிரி பிரச்சினையில் தமிழக உரிமை பாதுகாக்கப் பட்டதற்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெ.ன்னு எல்லாரும் உரிமை  கொண்டாடலாம். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றத்தை அமைக்கணும்னு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதா தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வச்சவர் கலைஞர். அப்ப பிரதமரா இருந்த வி.பி.சிங் உடனடியா நடுவர் மன்றத்தை அமைச்சார். அந்த நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை  அரசிதழில் வெளியிட முயற்சி எடுத்து வெற்றி பெற்றது கலைஞர் அரசு. அப்பவெல்லாம் நடுவர் மன்றத்துக்குப் பவர் இல்லைன்னு விமர்சித்தவர்தான் ஜெ.''

""அதுதாங்க தலைவரே அரசியல்..  உங்களுக்கு நான் விளக்கம் சொல்லணுமா? ஜெ. ஆட்சிக்கு வந்ததும் காவிரி பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தார். காவிரி ஆணையத்தை பல் இல்லாத ஆணையம்னு சொன்னார். நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பால்கூட தமிழகத்துக்குப் பயனில்லை என்றார். ஆனால், இந்த முறை ஆட்சிக்கு வந்ததும் அதே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைத் துருப்புச் சீட்டு ஆக்கிட்டார். அதை அரசிதழில் வெளியிடக் கோரி உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு போனது. இப்ப மத்திய அரசு அதை வெளியிட்டிருக்கு. இதன் மூலமா காவிரியில் தமிழகத்திற்கான உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கு. இதற்கப்புறம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கணும். அதுதான் தண்ணீர் பங்கீட்டைக் கவனிக்கணும். அதற்கு முன்னாடி உச்சநீதிமன்றத் தில் தமிழகம், கர்நாடகா, கேரள மாநில அரசுகள் போட்டி ருக்கிற வழக்குகள் முடிவுக்கு வரணும். அதை உச்சநீதிமன்றமே விசாரிக்குமா, நடுவர் மன்றம் விசாரிக்குமான்னு தெரியலை. நடுவர் மன்றத்துக்கு 2012ஆம் ஆண்டிலிருந்து தலைவர் இல்லை. அவரை நியமிச்சி, வழக்குகளை விசாரிச்சி, பிரச்சினைகளை முடிச்சி, வாரியத்தை  உருவாக்கி காவிரியில் தண்ணீர் திறந்துவிடணும்.''

""இம்புட்டு வேலைகள் இருக்குதா.. அதற்குள்ளே இங்கே வெற்றி முழக்கம். கர்நாடகாவில் எதிர்ப்பு முழக்கம்.. தண்ணீரில்கூட அரசியல்.''

""அந்த அரசியலைத் தேர்தலுக்கு சரியா பயன்படுத்தணும்ங்கிறதுதான் ஜெ.வின் கணக்கு. எம்.பி. தேர்தலுக்கு இதெல்லாம் நிச்சயமா உதவும்னு அவர் சந் தோஷமா இருக்காராம். 19-ந்தேதியன் னைக்கு நடைபயணத்தில் வந்த வைகோ வை சிறுதாவூரில் ஜெ. தன் கான்வாயை நிறுத்தி சந்திச்சதை, திடீர் சந்திப்புன்னு தான் எல்லோரும் சொல்றாங்க. ஆனா கோட்டை வட்டாரமும் தாயகத்தின் உள்வட்டாரமும் இது திட்டமிட்ட சந்திப்புதான்னு சொல்லுது.'' 

""ஓ''…

""வழக்கமா மதியம் 2.30 மணிக்கு சிறுதாவூருக்கு ஜெ. சாப்பிடப் போய்விடு வார். ஆனா, அன்னைக்கு கோட்டையி லேயே மதிய சாப்பாட்டை முடித்து விட்டுத்தான் ஜெ. லேட்டா கிளம்பினார். அதுபோல பையனூரில் மதிய சாப்பாட் டை முடிக்க வேண்டிய வைகோ, அதற்கு முன்னாடி ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுப்பதுங்கிற பேரில் நடு ரோட்டிலேயே பயணத்தை லேட் பண்ணிக் கிட்டிருந்தார். கொட்டிவாக்கம் பக்கத்திலே ஜெ. கான்வாய் வருதுங்கிற தகவல் வைகோ தரப்புக்கு வர, அதன்பிறகுதான் அவரோட நடைபயணம் தொடர்ந்தது. வழக்கமா தொண்டரணிதான் முன் னாடி போகும். அதைத்தாண்டி வேகவேகமா நடை போட்டு முன்னாடி வந்தார் வைகோ. கரெக்ட்டா ஜெ. கான்வாயும் அந்த ஏரியாவுக்கு வந்தது.'' 

""திடீர் சந்திப்பு இப்படித்தான் நடந்ததா?''

""ரோட்டில் உள்ள டிவைடர் பக்கத்தில் ஜெ.வின் கார் நிற்க, கதவைத் திறந்து இறங்கினார் ஜெ. பின்னாடி வந்த செக்யூரிட்டிகளெல்லாம் என்னவோ ஏதோவெனப் பதறிப்போய் இறங்கினாங்க. காஞ்சிபுரம் எஸ்.பி.க்கு வியர்வையில் யூனி ஃபார்மே நனைந்துவிட்டது. திருப்போரூர் எஸ்.ஐக்கு மயக்கமே வந்திடிச்சி. ஜெ.வும் வைகோ வும் பரஸ்பர நலம் விசாரிச்சி 5 நிமிடம் பேசினாங்க. ஜெ.வுக்கு வைகோ பிறந்தநாள் வாழ்த்து சொன் னார். எங்க ஊருக்கு வந்திருக்கீங்களே, என்ன கோரிக்கைக்காக நடைபயணம்னு ஜெ. கேட்க, பூரண மதுவிலக்குன்னு கோரிக்கையை சொன்னார் வைகோ. உடனே ஜெ., உங்கம்மா நல்லா இருக் காங்களான்னு கேட்டுட்டுக் கிளம்பிட்டார்.'' 

""தேர்தலுக்கான நிஜ கோரிக்கைதான் என்னவாம்?''

""ம.தி.மு.க தரப்பில் விசாரித்தேங்க தலைவரே.. … உங்க நக்கீரன்தான் அ.தி.மு.க.-ம.தி.மு.க. கூட்டணி பற்றி ஆரம்பத்திலிருந்தே சொல்லிக்கிட்டிருக்கு. அ.தி.மு.க. எங்களுக்கு 2 சீட் ஒதுக்க நினைக்குது. அதை 4ஆக ஆக்க ணும்ங்கிறதுதான் வைகோ வின் முயற்சி. அவருக்கு விருதுநகர், சிட்டிங் எம்.பி. கணேசமூர்த்திக்கு ஈரோடு, தலித் தொகுதியான காஞ்சிபுரம் மல்லை சத்யா வுக்கு, பெண் டாக்டர் ரொகையாவுக்கு திருச்சிங் கிறதுதான் வைகோ கணக்குன்னு சொல்றாங்க.'' 

""தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகளில் ஒருவர் நிரபராதிங்கிறதை பாதிரியா ரின் வாக்குமூலம் மூலமா கர்நாடக போலீசே உறுதிப் படுத்தியதை நம்ம நக்கீரன் எக்ஸ்க்ளூசிவ்வா வெளி யிட்டதைப் பார்த்திருப்பீங்க. அதுதான் இப்ப மனித உரிமை ஆர்வலர்களிடம் லேட்டஸ்ட்-ஹாட்டஸ்ட் டாப்பிக்.''

""அதைப் பற்றி நானே சொல்றேன்.. அந்தக் கடித விவரத்தை முறைப்படி பெற்று, அவர்களின் தூக்குத் தண்டனைக்கு எதிராக சட்டப்படியாப் போராடுவதற்கு மனித உரிமை அமைப்புகள் தீவிர முயற்சி எடுத்துக்கிட்டி ருக்கு. சுப்ரீம் கோர்ட்டும், இதேபோன்ற நிலைமை உள்ள பஞ்சாபின் புல்லார் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலே வீரப்பன் கூட்டாளிகளுக்குத் தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைப்பதா உத்தரவிட்டு, வழக்கை 6 வார காலத்துக்கு ஒத்திவச்சிட்டாங்க. சட்டப்போராட்டத்தின் மூலம், வீரப்பன் கூட்டாளிகளைத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றிட முடியும்னு வழக்கறிஞர்கள் நம்பிக்கையோடு சொல்றாங்க.''

 லாஸ்ட் புல்லட்!

ஆந்திராவின் இரட்டை நகரங்களான ஹைதராபாத்-செகந்திராபாத் எல்லையில் உள்ள தில்சுக்நகரின் வணிகப்பகுதியில் இரண்டு திரையரங்குகள் நடுவே வியாழன் மாலை நடந்த சக்தி வாய்ந்த இரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15ஐக் கடந்தது. காயம்பட்டவர்கள் 50-க்கும் மேல். அப்சல் குருவைத் தூக்கிலிட்டதன் எதிர்வினையாக இது இருக்கலாம் என போலீஸ் விசாரணை நகர, பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தொழிற்சங்கங்கள் அறிவித்த இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்றாலும் வங்கிப்பணிகள் உள்ளிட்ட முக்கிய பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் டெல்லியை அடுத்த நொய்டா, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலப் பகுதிகளில் பெரும்பாதிப்பையும் தாக்குதலையும் உண்டாக்கின. நொய்டாவில் ஒரு கார் கம்பெனி யில் தீ வைப்பு சம்பவமும் பல இடங்களில் கல்வீச்சுத் தாக்குதலும் நடந்தது. மத்திய அரசு தனது கொள்கைகளை மாற்றியாக வேண்டிய கட்டம் நெருங்கிவிட்டது என்கிறார்கள் தொழிற்சங்கத்தினர்.

இலங்கை எம்.பி. கருணா ரத்தன் ஜெயசூர்யா தன் குடும்பத்துடன் திருக்கடையூருக்கு வந்த தகவலறிந்த ம.தி.மு.க., விடுதலைசிறுத்தைகள், நாம் தமிழர்  கட்சியினர் அவர் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்த, போலீசார் அவர்களைப் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பினர். புலிகளுக்கு துரோகம் செய்த கருணா வருகிறார் என நினைத்து திருச்சி விமானநிலையத்தில் உணர்வாளர்கள் திரண்டு நிற்க, எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு எம்.பி.யும் குடும்பத்தினரும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஓட்டல் வாசலில் முட்டைகளை வீசி உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய பரபரப்பு அதிகமானது.

ad

ad