புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2013


இந்திய மக்களவையில் ஈழத்தமிழர் பிரச்சினை சூடு பிடித்த விவாதம்

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் மாநிலங்களவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இலங்கை விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வரும் நிலைப்பாடு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளன. இலங்கையில் நடைபெற்றது போர்குற்றம் என்றும் திட்டமிட்ட இனப்படுகொலை என்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள.
அரசியல் கட்சிகள் கண்டனக் குரலை பதிவு செய்துள்ள நிலையில், மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மிகவும் சூசகமான விளக்கங்களை அளித்தார்.
சல்மானின் சூசக வார்த்தைகள்.. நெருக்கடிக்கு பணியுமா மத்திய அரசு?
இலங்கையை எதிரியாக கருத முடியாது. போர் நடைபெற்றது இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான காலம். குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். தமிழர்களின் உணர்வுகளுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கிறது. ஜெனிவாவில் கொண்டு வரப்பட இருக்கும் ஐ.நா., மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. ஜெனீவா தீர்மான விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும். இலங்கை தமிழர்கள் பிரச்னைக்கு சட்டரீதியாக தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை பிரச்னை குறித்து தமிழக மக்களுக்கு மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவருக்கும் கவலை. இருந்தாலும் வேறு நாட்டின் பிரச்னையில் தலையிட முடியாது என்றார்.
அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் பேசுகையில்: இலங்கை தமிழர் உரிமையை பாதுகாக்க ஐமு கூட்டணி அரசு தவறி விட்டதாக குற்றஞ்சாட்டினார்.
இலங்கைத் தமிழர்களின் உண்மையான நிலை குறித்து மத்திய அரசுக்கு தெரியவில்லைஎன்றும் இலங்கையில் தமிழர்களின் அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.போர் முடிந்த பிறகும் தமிழர்கள் மீது அடக்குமுறை தொடர்வதாக அவர் தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா இலங்கையில் திட்டமிட்ட இன அழிப்பு நடைபெற்று வருவதாக கூறினார்.ராஜபக்ச அரசின் குற்றங்களை தட்டிக் கேட்கும் இலங்கை ஊடகங்கள் தாக்கப் படுகின்றன. ஜெனீவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
மத்திய அரசின் மீதான நம்பிக்கை இழந்து விட்டோம்- திமுக: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம் என திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசினார்.இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.
இலங்கை போர்குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இந்நிலையில் இந்தியா ஒரு கண்டனம் கூட இலங்கைக்கு எதிராக தெரிவிக்கவில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே கொண்டு வந்திருக்க வேண்டும். அதை செய்ய இந்தியா தவறி விட்ட நிலையில் அமெரிக்க தீர்மானத்தையாவது இந்தியா ஆதரிக்க வேண்டும்.
இலங்கையில் இன்றளவும் தமிழ் பெண்கள் மானம் சூறையாடப்படுகிறது. ஒவ்வொரு தமிழனும் ஒரு சிங்கள ராணுவ வீரனின் கண்காணிப்பில் இருக்கும் அவல நிலையே இருக்கிறது.பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விதம் மிகக் கொடூரமானது என்று கண்டனத்தை பதிவு செய்தார்.
“வேடிக்கை பார்க்க முடியாது”: பா.ஜ., விவாதம்இலங்கை போர்குற்றம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ., உறுப்பினர் வெங்கையா நாயுடு:இலங்கை, இந்தியாவின் நட்பு நாடாகவே இருந்தாலும், ஒரு சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும். இந்தியா, இலங்கைக்கு உதவிகள் பல செய்து வருகிறது. அந்த வகையில் ஏன் இலங்கையை தட்டிக் கேட்கக் கூடாது. இலங்கை போர்குற்றம் குறித்து நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமை, அதிகார பங்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
இலங்கையில் ஊடகம், செஞ்சிலுவைச் சங்கம் என யாருக்கும் சுதந்திரம் இல்லை. தமிழர்களை கொல்லும் இலங்கைக்கு இந்தியா எப்படி உதவி செய்தது என கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் போர்குற்றம் நடந்தது : காங்கிரஸ்
இலங்கை ராணுவம் போர்குற்றம் புரிந்ததை மறுப்பதற்கில்லை என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானதேசிகன் பேசினார்.
போர்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்திய அரசுக்கு அளித்த உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என கூறிய அவர் இலங்கை விவகாரத்தில் உணர்ச்சிவசப்படுவதை விட தீர்வு காண்பதே முக்கியம் என்றார். இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே உதவுகிறது என்றார்.
ஞானதேசிகனின் இந்த கருத்துக்கு திமுக எம்பி திருச்சி சிவா, இந்திய கம்யூ கட்சியின் ராஜா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிவசேனா கண்டனம்: இலங்கைப் பிரச்னையை தமிழர் பிரச்னையாக மட்டும் கருதக்கூடாது, தேசிய பிரச்னையாக பார்க்க வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் கூறினார்.
தெலுங்கு தேசம் கண்டனம்: இலங்கை போர்குற்றம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தேவை என தெலுங்கு தேச கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் : தமிழருக்கு அரசியல் சாசன உரிமை கிடைக்க இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறது என்றார்.
மீண்டும் அமெரிக்கா தீர்மானம்: ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வரவுள்ளது.
மேலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இலங்கை அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
இந்தியாவுக்கு நெருக்கடி: ஜெனிவாவில், கடந்த முறை இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது போல், இம்முறையும் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் இருக்க, அந்நாட்டுக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிற
- See more at: http://www.thinakkathir.com/?p=48429#sthash.Z6r5WnEJ.dpuf

ad

ad