புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2013


கடைசிக் கட்டப்போரில் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்த கண்ணன்!
 ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு சேனல் 4 வெளியிட்ட ‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களும், புகைப்படங்களும் ஆதாரமாக உள்ளது.  ‘நோ பயர் ஸோன்’ தொகுப்பில் இடம்பெற்ற வீடியோக்கள் பலவற்றைக் கொடுத்து
உதவியவர் இலங்கையைச் சேர்ந்த கண்ணன். கடைசிக் கட்டப்போரில் பிரபாகர னுடன் தொடர்பில் இருந்தவர்களில் கண்ணனும் ஒருவர்.

இந்த நூற்றாண்டின் மிகக்கொடிய இன அழிப்பின் சோகம் இது. மிகச்சிறிய பரப்பளவு கொண்ட பகுதி முள்ளிவாய்க்கால். அந்தப் பகுதிக்குள் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டிருந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான். பாதிப்பேர் உணவு இல்லாமல் கடல் நீரைக் குடித்தே செத்துப்போனார்கள். 
தமிழ் மக்கள் கூட்டம் ராணுவத்திடம் சரணடைய வந்தனர். ‘நாங்கள் உங்களைச் சுட மாட்டோம். நீங்கள் அனைவரும் துணிகள் இல்லாமல், நிர்வாண நிலையில்தான் எங்களிடம் வரவேண்டும்’ என்று கட்டளை இட்டது ராணுவம். வேறு வழி இல்லாமல் அப்பா முன் மகளும், மகனின் முன் தாயும், அண்ணனின் முன் தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர். 
வவுனியாவில் இருக்கும் மெனிக் பார்ம் முகாமிலும், வெலிகந்தையில் இருக்கும் மறைமுக முகாமிலும் தினமும் இரவு நேரங்களில் பெண்களின் கதறல் சப்தம் கேட்டபடியே இருக்கும். இதுவரை இலங்கையில் கொல்லப்பட்ட மக்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் இருப்பார்கள்.
போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பலவற்றையும் இலங்கை ராணுவம் பயன்படுத்தியது. கொத்தணி குண்டு 500 சிறிய குண்டுகளாகப் பிரிந்து சென்று தாக்கும். உலக நாடுகள் எதுவும் அந்த குண்டுகளைப் பயன்படுத்தாது.

ஒயிட் பாஸ்பரஸ் அதைவிடக் கொடூரமானது. ஒரே ஷாட்டில் 100க்கு மேற்பட்ட குண்டுகளை உமிழும். அந்த குண்டுகள் சுற்றியிருக்கும் எல்லா ஆக்ஸிஜனையும் உறிஞ்சிக் கொண்ட பிறகுதான் வெடிக்கும். அதனால் குண்டு பாதிப்பையும் தாண்டி பலர் மூச்சுத் திணறியே இறந்தனர். சானல் 4 வெளியிட்டு இருக்கும் ஆதாரங்கள் அத்தனையும் உதாரணங்கள் மட்டும்தான். ஒட்டு மொத்தமும் வெளிவந்தால், இலங்கை தாங்காது.

ad

ad