புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2013

ஒருநாள் சர்வதேச போட்டி அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன கடந்துள்ளார்.

ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத் தொடரில் நேற்று அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட்டமிழப்பின்றி 84 ஓட்டங்களைக்குவித்த அவர் அதில் 62 ஆவது ஓட்டத்தினைப்பெற்ற
போதே 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற இலக்கை அடைந்தார்.

இதுவரை 394 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மஹேல 15 சதம், 69 அரைச்சதம் உட்பட 11,022 ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 3 ஆவது இலங்கை வீரர் மற்றும் 8 ஆவது சர்வதேச வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

முன்னதாக சச்சின் (18,426), பொண்டிங் (13,704), ஜெயசூர்யா (13,430), இன்சமாம் (11,739), ஜக் கலீஸ் (11,498), கங்குலி (11,363), குமார் சங்ககரா (11,231) ஆகியோர் இந்த இலக்கை எட்டியிருந்தனர்.

ad

ad