புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2013


இந்தியாவின் உத்தரகாண்ட் வெள்ளம் :  பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்?
 

 உத்தரகாண்ட் மற்றும் இமாசலபிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றில் பலி யானவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயரும் என்று அஞ்சப்படுகிறது.


கேதர்நாத் கோவில் பகுதிதான் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. இந்த கோவிலின் ஒரு பக்க சுவர் வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. மேலும் கோவில் முழுவதும் சேறும் சகதியுமாக இருக்கிறது. 
அந்த கோவிலின் அருகே உள்ள முக்கிய இடமான ராம் பாத என்ற இடம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இங்கு இருந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதனால் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று அதிகாரி ஒருவர் தெரி வித்துள்ளார்.

ad

ad