புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2013

சாம்பியன்ஸ் கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில்
உள்ளூர் அணியான இங்கிலாந்துடன், தென் ஆப்பிரிக்கா அணி மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன், தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார்.

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. துவக்க வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். பீட்டர்சன்(30), டுபிளெசிஸ் (26) ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியபோதிலும், அணியின் ஸ்கோர் உயரவில்லை. மாறாக விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

80 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த நிலையில், மில்லரும், லெயின்வெல்ட்டும் பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். லெயின்வெல்ட் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 38.4 ஓவர்களில் 175 ரன்களில் தென் ஆப்பிரிக்கா சுருண்டது. 51 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்த மில்லர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து தரப்பில் பிராட், டிரட்வெல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும், பின் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 

இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் குக் 6 ரன்னிலும், இயன் பெல் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த ஜோனாதன் டிராட்-ரூட் ஜோடி அபாரமாக ஆடி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 

அணியின் ஸ்கோர் 146 ஆக இருந்தபோது, ரூட் அவுட் ஆனார். அவர் 48 ரன்கள் எடுத்தார். 84 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசிய டிராட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 37.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டிரெட்வெல் ஆட்டநாயகனாகத் தேர்வு 

ad

ad