புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2013

பூந்தமல்லி சிறப்பு முகாம் தமிழர்களை இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்த தமிழக அரச
பூந்தமல்லி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அவ்வப்போது இந்த முகாமில் உள்ள தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி பட்டினிப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக தமிழர் நலன் சார்ந்த கட்சிகளும் சிறப்பு முகாமை முற்றுகையிட்டு போராட்டம் செய்ததுடன்,சிறப்பு முகாம்களை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கையும் வைத்தன.
இந்நிலையில் இந்த முகாம்களை மூடும் நிமித்தமாக அங்குள்ள தமிழர்களை திருச்சி சிறைக்கு மாற்றும் ஆணையை நேற்று காவல் துறை முகாம் வாசிகளுக்கு கொடுத்தது.
இந்த ஆணையை ஏற்க மறுத்தனர் முகாம் வாசிகள். காரணம் தங்களை திறந்த வெளி முகாமிற்கு தான் மாற்ற வேண்டும் எனவும் சிறைச்சாலைக்கு மாற்றக் கூடாது என்று வழக்கு தொடுத்திருந்தனர் முகாம் தமிழர்கள்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே காவல்துறை இவர்களை சிறைச்சாலைக்கு சட்ட விரோதமாக மாற்ற முடிவு செய்தது. இதற்கு முகாம் தமிழர்கள் ஒத்துழைக்காத காரணத்தால் அவர்களை அடித்து, குண்டுக் கட்டுக்காக காவல்துறை வாகனத்தில் ஏற்றி திருச்சி சிறைச் சாலைக்கு கொண்டு சென்றது காவல்துறை. முகாம் வாசிகளின் வழக்கு தொடர்பான ஆவணங்களையும் காவல்துறை எடுத்துக் கொண்டதாக முகாம் வாசிகள் தெரிவித்தனர்.
காவல்துறையின் இத்தகைய செயல் நீதிமன்ற அவமதிப்பாகும். நீதிமன்றம் முகாம்வாசிகளை சிறைக்கு மாற்றும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்திருந்த நிலையில் தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது தமிழ் உணர்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் செங்கல்பட்டு பூந்தமல்லி முகாமை அரசியல் கட்சிகள் பல முறை முற்றுகை செய்து போராட்டம் செய்ததால், இப்போது இந்த முகாம்கள் நிரந்தரமாக மூடப்படும் எனத் தெரிகிறது. முகாம்கள் மூடப் பட்டாலும் ஈழத் தமிழர்களின் துயரம் மட்டும் தொடர் கதையாகவே உள்ளது.
அடித்து எழுத்து செல்லப்பட்ட ஏழு தமிழர்களின் பெயர்கள் வருமாறு,
கங்காதரன், பகீரதன், ஜெயமோகன். மகேஷ் குமார், கிருஷ்ண மூர்த்தி, உதயதாஸ் மற்றும் சுரேஷ் குமார். இதில் சுரேஷ் குமார் என்பவருக்கு இடுப்பிற்கு கீழே இயங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad