புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2013



 
         ""ஹலோ தலைவரே... ராஜ்யசபா தேர்தலில் 6-வது சீட் யாருக்குங்கிறதுதான் இப்ப லேட்டஸ்ட் அண்ட் ஹாட்டஸ்ட் டாபிக்.''


"நக்கீரன் "5 சீட்டுகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளரை அறிவித்த ஜெ., 6-வது இடத்தில் போட்டியிடும் படி டெல்லியில் கம்யூனிஸ்ட் தலைவர் பரதன் கிட்டே சொன்னதை போனமுறையே நாம பேசினோம். அப்ப போட்டிப்போடத் தயங்குன கம்யூனிஸ்ட், இப்ப களத்தில் குதித்துவிட்டதே.. சி.பி.ஐ. டி.ராஜா விஜயகாந்த் என்னை ஆதரிப்பார்னு பிடிவாதமாக போட்டியிடுகிறாரே.. ஓட்டுக் கணக்கு சரியாக வருமா?''

""தலைவரே… தி.மு.க.வும் சரி, அ.தி.மு.க. அணியும் சரி இப்ப தே.மு. தி.க. எம்.எல்.ஏ.க்களை நம்பித்தான் 6-வது சீட்டை ஜெயித்தாகவேண்டிய நிலைமை. விவரமா சொல்றேன்.… தமிழக சட்டமன்றத்தில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 234. தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள் 6 பேர். அந்த எண்ணிக் கையுடன் 1 சேர்த்து, மொத்த எம்.எல்.ஏ.க் களின் எண்ணிக்கையை 7-ல் 7-ஆல் வகுத் தால் வரும் தொகை 33.42, இதை ரவுண்டு செய்தால் 34 வரும். எனவே 34 ஓட்டுகள் வாங்கும் வேட்பாளர்கள் வெற்றி பெறு வார்கள். இதுதான் ராஜ்யசபா தேர் தல் கணக்கு. 6 சீட்டுக்கு 6 பேர் மட்டுமே நின்றால், இருக்கிற எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் படி, 5 சீட்டு அ.தி.மு.க.வுக்கு கிடைக் கும். 6-வது சீட்டு எதிர்க்கட்சிக்கு கிடைக்கும். ஆனால், 6 சீட்டுக்கு 7 பேரோ அதற்கு மேலோ போட்டியிட்டால், வாக்களிக்க வேண்டிய நிலைமை உருவாகும்.'' 

""அப்படியொரு நிலைமை வந்தால், முடிவுகள் எப்படி இருக்கும்?''


""34 ஓட்டுகள் என்பதுதான் வெற்றிக் கணக்கு. ஆனால், 7 பேர், 8 பேர் எனப் போட்டியிடும்போது ஓட்டுகள் சிதறும். 34 என்ற எண்ணிக்கையைத் தொடமுடியாமல் போகும். அந்த சமயத்தில் எந்த 6 வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளை வாங்கியிருக் கிறார்களோ அவர்கள் வெற்றிபெறு வார்கள். அப்படியும்கூட 34 என்ற எண்ணைத் தொட்டாகவேண்டும். அதாவது, ஓட்டுமுறையில் ஒவ்வொரு எம்.எல். ஏ.வுக்கும் இரண்டாவது ஓட்டு என ஒன்று உண்டு. அந்த இரண்டாவது ஓட்டுக்கென மதிப்பும் உண்டு. ஒரு வேட்பாளர் பெறும் முதல் ஓட்டு களின் எண்ணிக்கையுடன், அவருக் குக் கிடைத்திருக்கும் இரண்டாவது ஓட்டு களின் மதிப்பும் சேர்க்கப்பட்டு, அது 34-ஐத் தொட்டாலோ அதைக் கடந்திருந்தாலோ தான் வெற்றி என அறிவிக்கப்படும். இதனடிப்படையில் அதிக ஓட்டுகள் வாங்கும் முதல் 6 பேர் ஜெயித்துவிடுவார்கள்.'' 

""இந்தக் கணக்கின்படி சி.பி.ஐ. வேட் பாளர் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறதா? ஏனென்றால் அ.தி.மு.க.வின் 5-வது வேட்பாளருக்கே கூட்டணிக் கட்சிகளின் தயவு தேவைப்படும்போது, சி.பி.ஐ. வேட்பாளர் என்ன கணக்குப் போட்டிருக்கிறார்?''


""தலைவரே.. அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்த எம்.எல்.ஏ.க்கள் 151 பேர். இதில் முதல் ஓட்டாக ஒவ்வொரு வேட்பாள ருக்கும்  30 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தால் போதும் என்றும், இரண்டாவது ஓட்டுகளின் மதிப்பை வைத்து அவர்கள் 34 என்ற எண்ணைத் தொட்டு விடமுடியும் என்றும் அ.தி.மு.க. தலைமை கணக் கிடுகிறதாம். முதல் ஓட்டு தலா 30 போதும் என் றால், அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 5 வேட் பாளர்களுக்குத் தேவை 150 ஓட்டுகள்தான். ஜெ. தன்னுடைய எம்.எல்.ஏ.க்களை முப்பது முப்பது பேராகப் பிரித்து, நீங்கள் இந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்கள், நீங்கள் இந்த  வேட்பாளருக்கு ஓட்டுப்போடுங்கள் என 5 வேட்பாளருக்கும் தலா 30 எம்.எல்.ஏ.க்களை ஒதுக்கிவிடுவார். இரண்டாவது ஓட்டு யாருக்குப் போடவேண்டும் என்றும் சொல்லிவிடுவார். எனவே, 150 போக மீதி 1 எம்.எல்.ஏ. அ.தி.மு.க. வசம் இருப்பார்.. அவரது ஆதரவு சி.பி.ஐ. வேட்பாளருக்குக் கிடைக்கும். அத்துடன் சி.பி.எம். 10, சி.பி.ஐ. 8, ஃபார்வர்டு ப்ளாக் 1 என  19 ஓட்டுகள் இடதுசாரிகள் வசம் இருக்குது. மொத்தம் 20 ஓட்டுகள். மாஃபா பாண்டியராஜனோடு சேர்த்து தே.மு.தி.க.விலிருந்து கழன்று வந்திருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண் ணிக்கை 7. ஆக மொத்தம் 27 ஆயிடிச்சா. வியாழக் கிழமையன்னைக்கு மதியம் தி.நகரில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் தா.பா. லஞ்ச் சாப்பிட்டாராம். அடிஷனல் இரண்டு ஓட்டையும் சேர்த்தால் 29.'' 

""மிச்சம்?''


""மனிதநேய மக்கள் கட்சியின் 2 ஓட்டுகளைப் பெறுவதற்காக அக்கட்சியினரிடம் ஓ.பி.எஸ். பேசியிருக்கிறார். லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டி என்ற ஜெ.வின் அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பிய ம.ம.க.வினர், எங்களுக்கு அப்போது சீட் ஒதுக்குவதாக இருந்தால் இப்போது ஆதரிக்கிறோம் எனச் சொன்னாங்களாம். அவங்களை கன்வின்ஸ் பண்ணிடலாம்னு அ.தி.மு.க. நினைக்குது. ஆக, 31 பேர் எங்க பக்கம் இருக்காங்கன்னும், அ.தி.மு.க.வுக் கும் அதன் கூட்டணிக்கும் இன்னும் ஓட்டு தேவைப்பட்டால் தே.மு.தி.க.விலிருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுவரும் வேலைகளும் ராஜ்யசபா தேர்தலுக்கு முன்னாடி நிறைவேறிடும்னு பேச்சு அடிபடுது. தா.பாவுடன் லஞ்ச் சாப்பிட்ட வர்களில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ஒருத்தரும் உண்டாம். இந்தக் கணக்கெல்லாம் தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி அமையாவிட்டால்தான் ஒர்க் அவுட் ஆகும்னும், அவங்க கூட்டணி அமைத்தால் தி.மு.க. நிறுத்தும் வேட் பாளர்தான் ஜெயிப்பார்னும் ராஜ்யசபா தேர்தல் ஓட்டுவிவரங்களை அலசி ஆராயும் சட்டமன்ற அலுவலர்கள் சொல்றாங்க.''

""தி.மு.க.வில் யாரை நிறுத்தப்போறாங்க? தே.மு.தி.க.வின் ஆதரவைப் பெற தி.மு.க.வில் முயற்சிகள் நடக்குதா?'' 


""தலைவரே.. 5-வது சீட்டுக்கே அ.தி.மு.க.வுக்கு இன்னும் எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுற நிலையில், 6 பேரில் யாரும் 34 ஓட்டுகளுக்கு குறையாமல் ஜெயிக்க முடியா துங்கிறதுதான் தி.மு.க. தரப்போட கணக்காக இருக்குது. தி.மு.க.கிட்டே இருப்பது 23 எம்.எல்.ஏ.க்களே. அதனால்தான், ராஜ்யசபா தேர்தலில் கலந்துக்க வேண்டாம்ங்கிற முடிவில் கலைஞர் இருந்தாரு.  லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் நிற்கப் போறதா சொல்லிக்கிட்டிருந்த  கனிமொழி, 2ஜி வழக்கு விசாரணையைக் காரணம் காட்டி, திடீர்னு ராஜ்யசபா சீட் கேட்டு கலைஞரை நெருக்க ஆரம்பிச்சிருப்பதைப் பற்றி போனமுறையே நாம விரிவா பேசி அது நம்ம நக்கீரனிலும் டீடெய்லா வந்திருந்தது.'' 

""கனிமொழி சார்பில் செஞ்சி ராமச் சந்திரன், தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி  ராமச்சந்திரன்கிட்டே பேசுனது பற்றியும் சொல்லியிருந்தோமே...''


""அந்த சந்திப்பில், தே.மு.தி.க.வுக்கு இருப்பது 10 சதவீத வாக்குகள்தான்னும், அந்த வாக்குவங்கியிலும் சேதாரம் ஏற்படுற அளவுக்கு எம்.எல். ஏ.க்கள் கழன்றுகொண்டி ருப்பதையும் பண்ருட்டிக் கிட்டே சுட்டிக்காட்டிய செஞ்சி, அதனால யதார்த்த நிலைமையைப் புரிஞ்சிக் கிட்டு, தி.மு.க.வோடு கூட் டணி வாங்கன்னு பேசியிருந் தாரு. ஆனா அது சம்பந்தமா தன்னால எந்த முடிவும் எடுக்க முடியாதுன்னும் கட்சி மேலிடத்தில் சொல்வ தாகவும் பண்ருட்டி சொல் லிட்டாரு. இதுவரை தே.மு.தி.க.விலிருந்து கூட்டணி பற்றி எந்த  மூவ்வும் இல்லை. தி.மு.க. விலும் கலைஞ ரோ ஸ்டாலி னோ விஜயகாந்த் தரப்பிடம் பேசலை. தே.மு.தி.க.விடம் இறங்கிப்போய் பேசுவது, தி.மு.க.வின் சுயமரியா தைக்கு சங்கடம்னு நினைக்கிறாங்களாம்.'' 

""சி.பி.எம். தரப்பிடம் தி.மு.க மூவ் பண்ணியதா செய்திகள் வந்ததே?''

""தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் மூலமா சி.பி.எம். எம்.பி. டி.கே.ரங்கராஜன்கிட்டே  பேசப்பட்டது. சி.பி.எம்.முக்கு கம்யூனிஸ்ட்டுகளை ஜெ. தொடர்ந்து புறக்கணிப்பதிலும் அவமானப் படுத்தும் விதத்திலும் செம கடுப்புதான். இவ்வளவு அவமானங்களோடு சி.பி.ஐ. தலைமை அ.தி. மு.க.வுடன் நெருக்கமாக இருப்பதிலும் அதிருப்தி தான். ஆனாலும், தேசிய அளவில் சி.பி.ஐ.- சி.பி.எம். கூட்டணி நீடிப்பதால், இங்கே தனியாக ஒரு நிலை எடுத்து, தி.மு.க.வை ஆதரிக்க முடியாத நிலை. அதைத்தான் டி.கே.எஸ்.கிட்டே டி.கே.ஆர்., அத்தை மகள் கறுப்பா இருந்தாலும் அவளைத் தான் கட்டிக்கணும்னு ஊர்ப்பக்கம் சொல்லு வாங்களே.. அதுபோலத்தான் சி.பி.ஐ.யோடு சேர்ந்து போகவேண்டிய நிலைமைன்னு சொல்லியிருக்காரு. அப்படியும்கூட, டி.ஆர்.பாலு மூலமா சி.பி.எம்.மின் டெல்லித் தலைமையோடு பேசப்பட்டிருக்கு.''



""ஏற்கனவே டெல்லியில் டி.ஆர்.பாலு வீட்டில் நடந்த ஒரு விருந்தில் சி.பி.எம்.மின் மூத்த எம்.பி.யான சீதாராம் யெச்சூரி கலந்துக் கிட்டதைப் பற்றி நாம ஏற்கனவே பேசி அது நம்ம நக்கீரன் 8.5.13 தேதியிட்ட இதழிலும் வெளியாகியிருக்கே.''…

""இப்பவும் டெல்லியில் பிரகாஷ்காரத்தையும் யெச்சூரியையும் சந்திச்சி பாலு பேசியிருக்காரு. அப்ப யெச்சூரி சொன்னமாதிரியே, எங்களுக்கு ஜெ.வின் நடவடிக்கைகளில் அதிருப்திதான். ஆனா கட்சியின் மாநிலத் தலைமை அ.தி.மு.க. கூட் டணியைத்தான் விரும்புதுன்னு காரத்தும் பாலு கிட்டே சொல்லியிருக்காரு. சி.பி.எம்.  மட்டும் வெளியே வந்தால், அ.தி.மு.க அணியில் சி.பி.ஐ. தன்னோட பலத்தை அதிகரிக்கச் செய்துவிடும்னு தமிழக சி.பி.எம். நினைக்குதாம். அதே நேரத்தில் 40 தொகுதி யிலும் அ.தி.மு.க. போட்டியிடும்னு டெல்லியில் ஜெ.. பேட்டிகொடுத்தது சி.பி.எம்.மை ரொம் பவே குழப்பியிருக்குது. ஏப்ரல் மாதத்தில் சி.பி.எம். ராஜ்யசபா எம்.பி. டி.கே.ரங்க ராஜனின் பதவி காலியாகுது. இப்ப சி.பி.ஐ.க்கு ஏற்பட்ட நெருக்கடி தங்க ளுக்கு ஏற்படுமோங்கிற தயக்கமும் சி.பி.எம். தலைமைகிட்டே இருக்குது. அதனால தி.மு.க.வோடு இப்பவே கூட் டணி அமைத்தால் ராஜ்யசபா சீட்டும் திரும்பக் கிடைக்கும். லோக்சபாவிலும் சீட் கிடைக்கும்னு நினைக்கிறாங்களாம்.''

""சி.பி.ஐ.யை விட்டுவிட்டு சி.பி.எம். மட்டும் இந்த முடிவை எடுக்க முடியுமா?''


""அதுதான் சிக்கலே.. வியாழக் கிழமையன்னைக்கு சென்னையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களோட அவசரக் கூட்டத்தை கலைஞர் கூட்டினாரு. டெல்லியில் பிரகாஷ்காரத்கிட்டே டி.ஆர்.பாலு பேசியதையும், சி.பி.ஐ.யில் டி.ராஜாவை நிறுத்துவதைத் தவிர்க்கும் படி பரதன்கிட்டே காரத் பேசியதாக வும், அங்கிருந்து வந்த தகவல்களை யெல்லாம் கலைஞர் சொன்னதோடு, ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க. போட்டி யிடுவது பற்றியும் எம்.எல்.ஏக்கள்கிட்டே கருத்து கேட்டிருக்காரு. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர், நம்மோடுதான் விஜயகாந்த் கூட்டணி வைப்பார்னு தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் சொல்றாருன்னும், சுதீஷும் தி.மு.க. கூட்டணியைத்தான் விரும்புறாருன்னும் சொல்லியிருக்காங்க. நாம நாமினேஷன் பண்ணிடுவோம்னு ஸ்டாலின் சொல்ல, அவசரப்படவேண்டாம், கணக்குகளைப் பார்த்துட்டு போடுவோம்னு துரை முருகன் சொல்லியிருக்காரு. கூட்டம் முடிந்ததும், ராஜ்யசபா தேர்தல் பற்றி முடிவு எதுவும் எடுக்கலை. எல்லாக் கட்சிகளிடமும் பேசுவோம்னு மீடியாக் கள்கிட்டே கலைஞர் சொன்னார். தி.மு.க சார்பில் எ.வ.வேலு நாமினேஷன் ஃபாரம் வாங்கிட்டு வந்திருக்காரு. சி.பி.எம்., சி.பி.ஐ. ராஜாகிட்ட போட்டியிட சொன்னதாக கோபாலபுரத்துக்கு மாலையில் தகவல் வர அவர்களுக்கு எண்ணிக்கை இல்லை  யேன்னு ஆலோசனை நடத்தப்பட்டிருக்கு. அதே நேரத்தில் தே.மு.தி.க. பக்கம் என்ன நடக்குதுன்னு தி.மு.க. பார்வையை திருப்பியது.'' 

""தே.மு.தி.க. இந்தத் தேர்தலையே புறக்கணிக்கும்ங்கிற எதிர்பார்ப்பும் இருக்குதே.''…


""அந்தப் பேச்சும் ஓடிக் கிட்டிருக்குங்க தலைவரே.. அப்படி ஒரு நிலை  வந்தால் தி.மு.க. தன்னோட பழைய கூட்டாளி களான காங்கிரசின் 5 எம்.எல்.ஏ.க் களையும் பா.ம.க.வின் 3 எம்.எல். ஏ.க்களையும் நாடவேண்டியிருக்கும். அதோடு ம.ம.க., புதிய தமிழகம் தரப்பிலும் மூவ் ஆகிக் கொண் டிருப்பதை போன முறையே பேசினோம். இத்தனை கட்சிகளையும் ஒன்றாக இழுத்துக் கொண்டு வரமுடியுமாங்கிறது கேள்விக்குறிதான். அப்படி ஒரு  நிலை வந்தால், 6-வது இடத்துக்கான போட்டி கடுமையாகத்தான் இருக்கும். அதே நேரத்தில் தி.மு.க. தரப்போ, அ.தி.மு.க. தன்னோட 5-வது வேட்பாளருக்கே போதுமான எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையில், சி.பி.ஐ. வேட்பாளரை எப்படி ஜெயிக்க வைக்கும்னு கேட்குது.  தே.மு.தி.க.வின் ஆதரவுதான் இப்போதைய நிலையில் எளிதான வெற்றியைத் தரும்னு அரசியல் வட்டாரத்தில் சொல்றாங்க. 

தே.மு.தி.க. நிர்வாகிகள்கூட இது பற்றி விஜயகாந்த்கிட்டே பேசுனப்ப, எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாராமே.''…

""கலைஞரோ ஸ்டாலினோ தன்கிட்டே பேசட்டும்ங்கிறதுதான் விஜய காந்த்தோட நிலையாம். அப்படி பேசி னால் இந்த முறை தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்குங்கன்னு கேட்க நினைக்கிறாராம். ஒருவேளை, கலைஞர் காம்ப்ரமைஸ் பண்ணினாருன்னா அதையும் ஏத்துக்கிட்டு, தி.மு.க.வை ஆதரிப்பதுங்கிற முடிவில் இருக்காராம். வியாழக்கிழமையன்னைக்கு தே.மு.தி.க.வின் கிச்சன் கேபினட் கூடி ராஜ்யசபா தேர்தல் பற்றி விவாதித்திருக்குது. சி.பி.எம்.மோடு பேசி சுதீஷை எம்.பி.யாக்க லாம்னு அடுத்த மூவை ஆரம்பிச்சிருக்காரு விஜயகாந்த். இது கஷ்டம்தான். இதனால தே.மு.தி.க. இந்தத் தேர்தலை புறக்கணிக்காமல் இருக்குமா? தி.மு.க. தலைமை விஜயகாந்த் கிட்டே பேசுமா? ராஜ்யசபா சீட்டை போட்டியில்லாமல் ஜெயிக்குமா? அல்லது சி.பி.ஐ.யின் கை ஓங்குமா? இந்தக் கேள்விகள்தான் ராஜ்யசபா தேர்தலை எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப் பாக்கியிருக்குங்க தலைவரே.''…

""அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்னாலே நிச்சயம் மாற்றம் இருக்கும். இந்த முறையும் தூத்துக்குடி சரவணப்பெருமாளைத்  தூக்கிட்டு தஞ்சாவூர் கு.தங்கமுத்துவை வேட்பாளராக்கிட்டாரே ஜெ..!''


""மந்திரிகள், மா.செ.க்கள், வேட்பாளர்கள் இவங்களையெல்லாம் அடிக்கடி மாற்றுவதால் கெட்டபெயர்தான் ஏற்படுதுன்னு ஜெ.வுக்கு அறிக்கை போனதால, இந்த முறை மாற்றம் இருக்கக்கூடாதுங்கிற கவனத்தோடுதான் வேட்பாளர் பட்டியலைத் தயாரிச்சிருக்காரு. சரவணப் பெருமாள் மேலே கடத்தல் வழக்குக்காக காஃபிபோசா சட்டம் பாய்ந்த பழைய விவகாரத்தையெல்லாம் ஏற்கனவே அவரே ஜெ. கிட்டே சொன்னது தானாம். ஆனா, பழைய வழக்கு ஒன்றில் கடந்த 7-ந் தேதி விசாரணை ஆர்டர் போட்டி ருக்காங்க. இதை சரவணப் பெருமாளோட வக்கீலே அவர்கிட்டே சொல்லலையாம். அதனால அவரும் மேலிடத்துக்கு இதை சொல்ல  முடியலை. இதை மோப்பம் பிடித்து, லோக்கல் ஆட்கள் உளவுத் துறைக்குப் போட்டுக்கொடுக்க, அது ஜெ. கவனத் துக்குப்போக, கடுப்பாயிட்டாரு ஜெ. வேட்பாளர் பட்டியலிலிருந்து சரவணப்பெருமாளைத் தூக்கிய தோடு அவரிடமிருந்த மாணவரணிச் செயலாளர் பதவியையும் பறிச்சிட்டாரு. ஏற்கனவே ஜெ.வின் பரிசீலனை லிஸ்ட்டில் இருந்த கு.தங்க முத்துக்கு இம்முறை அதிர்ஷ்டம் அடிச்சிருக்குது.''

""விவசாயிகளுக்கு நிவாரணம் தரணும்னு வைகோ வெளியிட்ட அறிக்கைக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரன் மறுப்பறிக்கை கொடுத்திருப்ப தோடு, விரக்தியின் விளிம்பில் உள்ள வைகோ, விவசாயிகள் வாழ்வில் விரக்தின்னு அறிக்கை விட்டிருப்பது, காமாலை கண் ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்ங்கிற பழமொழியைத்தான் நினைவுபடுத்துதுன்னு சொல்லி யிருக்காரே.. அ.தி.மு.க அரசின் மனசு நோகா மல் தன் கால் நோக நடைபயணம் செல்லும் வைகோ மேலே ஏன் இந்த தாக்குதல்?''

""அதைப் பற்றி நான் சொல்றேன்.. .. 40 இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடும்னு ஜெ. சொன்னதில் வைகோவுக்கு பலத்த ஷாக். அவர் 5 சீட்டுகளை எதிர்பார்த்திருந்தார். அவருக்கு விருதுநகர், கணேசமூர்த்திக்கு ஈரோடு, மல்லை சத்யாவுக்கு காஞ்சிபுரம், மாசிலாமணிக்கு விழுப்புரம், டாக்டர் ரொக்கையாவுக்கு திருச்சிங்கிறதுதான் அவர் கணக்கு. செப்டம்பரில் தஞ்சையில் ம.தி.மு.க. வின் மாநாடு நடத்தவும் ப்ளான் பண்ணி யிருந்தாரு. அப்ப ஓ.பி.எஸ். தொடர்பு கொண்டு, உங்களுக்கு தஞ்சாவூர்ல இன்ன்ட்ரஸ்ட்டுன்னா அதை எடுத்துக்குங் கன்னு சொல்ல, இது என்ன புது வம்பா இருக்குதுன்னு, விருதுநகரில் மாநாடுன்னு அறிவிச்சிட்டாரு வைகோ. 5 சீட்டுகளைத் தவிர்க்கத்தான் ஓ.பி.எஸ். இப்படி சொல்லி யிருக்காரோன்னு வைகோ குழம்பிக்கிட்டி ருந்த நேரத்தில், அமைச்சர் தாமோதரனும் சூடா அறிக்கைக் கொடுத்து வைகோவை மேலும் அதிர்ச்சியடைய வச்சிருக்காரு.''

படங்கள் : ஸ்டாலிôன் & அசோக்




 லாஸ்ட் புல்லட்!

சுதாகரன் மீதான ஹெராயின் வழக்கை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி தீர்ப்பளிக்கவிருந்த நாளில் மிரட்டல் கடிதம் வந்ததால், நீதிபதி சின்னப்பன் கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது. 12-ந்தேதி விசாரணை நடக்கவேண்டிய நாளில் அவருக்கும் மன்னார்குடியிலிருந்து மிரட்டல் கடிதம் வந்ததால், அதனை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்காக அனுப்பி, விசாரணையை ஒத்திவைத்துவிட்டார் நீதிபதி. ஒவ்வொரு முறையும் இப்படி மிரட்டல் கடிதங்கள் வருவதும், அதனால் வழக்கு ஒத்திவைக்கப்படுவதும் சட்டத்தையும் நீதியையும் கேள்விக்குறியாக்குவதால் சீனியர் வழக்கறிஞர்கள் இதுகுறித்து தலைமை நீதிபதியையும் பதிவாளரையும் நேரில் சந்தித்து முறையிட இருக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க மா.செ.செந்தில்நாதன், மேலிடத்துக்கு அனுப்பிய புகாரில், தேவகோட்டை ந.செ. ராமச்சந்திரனை மாற்றுவதற்கு அரசு டாக்டர் சங்கரன் பணம் வாங்கியிருக்கிறார் என்றும் இவர் எம்.நடராஜனுக்கு வேண்டியவர் என்றும், கொடைக்கானலில் நடராஜன் தங்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் டாக்டர் சங்கரன்தான் மருந்துகளை பரிந்துரைப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் சங்கரனின் மாமனார் காரை செழியன் 3 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியிருப்பது பற்றியும் புகார் தெரிவிக்க, லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தி, டாக்டர் சங்கரனை விசாரித்துள்ளனர். அதில் தனக்கும் எம்.நடராஜனுக்குமான தொடர்புகள் பற்றி தெரிவித்திருக்கிறாராம் டாக்டர்.

ஜி.கே வாசனுக்கு எதிராக,  ஆக்ஷன் எடுப்பதை விட்டுவிடவில்லை ராகுல்காந்தி.  இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த வாசனின் ஆதரவாளர் யுவராஜாவை அப்பதவியிலிருந்து நீக்கினார் ராகுல்.  நீக்கப்பட்ட யுவராஜாவை தூத்துக்குடி துறைமுகக் கழகத்தின் ட்ரஸ்டியாக சமீபத்தில் வாசன் நியமித்தார்.  இந்த விஷயம் அறிந்து வாசனிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் ராகுல்காந்தி.  இதனை தொடர்ந்து, ட்ரஸ்டி பொறுப்பிலிருந்து  ராஜினாமா செய்யச்சொல்லி யுவராஜாவுக்கு கட்டளையிட்டுள்ளார் வாசன்.

ad

ad