புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2013

பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்போவதாக ராஜபக்சே அரசு அறிவித்துள்ளது. அதேசமயம்
தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13-வது அரசியல் சட்டத்திருத்தத்தை மாற்றியமைக்க புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றவும் முயற்சி செய்து வருகிறது. ஒருவேளை அரசு கொண்டு வர உள்ள புதிய மசோதாவிற்கு ஆதரவு இல்லை என்றாலும், தேர்தலை நடத்துவதில் உறுதியாக உள்ளது. இதற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க மறுக்கும் இலங்கை அரசின் செயல்பாடு களை தொடர்ந்து கண்டித்து வரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தமிழ் எம்.பி.க்கள் இன்று இந்தியா வந்தனர். சம்பந்தன் தலைமையில் அவர்கள் இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்தை சந்தித்து இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கினர்.
13-வது அரசியல் சட்டத்திருத்தத்தை பலவீனமாக்க இலங்கை அரசு முயற்சி செய்கிறது என்றும், இதனை இந்தியா அனுமதிக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ad

ad