புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2013

வடக்குத் தேர்தல் வர­லாற்று திருப்­பு­முனை வெற்­றி­யாக அமைய வேண்டும் : சம்பந்தன் எம்.பி. 
news
 சர்வதேசத்தின் நிலைப்பாட்டை அறிந்தே தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பின் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் வேட்­பாளர் தெரிவு இடம்­பெற்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கே சர்­வ­தே­சத்தின் ஆத­ரவும் மக்­களின் அங்­கீ­கா­ரமும் கிடைத்துள்­ளன. எனவே, எந்த விலை கொடுத்­தா­வது கூட்­ட­மைப்பை பாது­காக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். வட மாகாண சபைத் தேர்தல் வர­லாற்று திருப்­பு­முனை வெற்­றி­யாக அமைய வேண்டும்.

 
நாம் அனை­வரும் இணைந்து இதற்­காக பாடு­ப­ட­வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரி­யுள்ளார்.
 
இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் நேற்று முன்­தினம் வவு­னியா நக­ரி­லுள்ள வசந்தம் ஹோட்­டலில் இடம்­பெற்­றது. இக்­கூட்­டத்­துக்கு தலைமை வகித்து உரை­யாற்­று­கை­யி­லேயே சம்­பந்தன் எம்.பி. மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.
 
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
 
இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சி­யினை எவரும் அழித்­து­விட முடி­யாது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கே சர்­வ­தேச ரீதி­யிலும் மக்கள் மத்­தி­யிலும் அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஐக்­கி­யத்தை பேண வேண்­டி­யது எம் அனை­வ­ரதும் கட­மை­யாகும்.
 
வட­மா­காண சபைத் தேர்­தலில் வர­லாற்றுத் திருப்­பு­மு­னை­யான வெற்­றி­யினை நாம் பெற­வேண்டும் வட­மா­காண சபையில் உள்ள 36 உறுப்­பி­னர்­களில் 30 உறுப்­பி­னர்­க­ளை­யா­வது நாம் பெற வேண்டும். சர்­வ­தேச ரீதியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த தேர்தல் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்தத் தேர்­தலில் நாம் வர­லாற்றுத் திருப்­பு­மு­னை­யான வெற்­றி­யினை பெற்­றால்தான் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து தீர்­மா­னிக்க முடியும்.
 
வட­மா­காண சபை தேர்­த­லுக்­கான முத­ல­மைச்சர் வேட்­பா­ளரில் ஜன­நா­யகம் பேணப்­ப­ட­வில்லை என்று யாரும் குற்றம்சாட்ட முடி­யாது. முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிய­மிக்­கு­மாறு கட்­சியின் செய­லாளர் மாவை சேனா­தி­ராஜா கோரிக்கை விடுக்­க­வில்லை. ஆனாலும் அவரும் இணைந்து நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வ­ரனை வேட்­பா­ள­ராக தெரிவுசெய்துள்ளார். இங்கு பல­வந்­த­மாக முத­ல­மைச்சர் வேட்­பாளர் திணிக்­கப்­ப­ட­வில்லை. ஜன­நா­யக ரீதி­யி­லேயே தெரிவு இடம்­பெற்­றுள்­ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சர்வதேசம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே கூட்டமைப்பை பேணிப் பாதுகாப்பதற்கு எந்தவிலை கொடுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். வடக்கு மாகாணசபைக்கான வேட்பாளர் தெரிவில் விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு நாம் செயற்படவேண்டும் என்று தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=409072190923237265#sthash.q9tm2h1L.dpuf

ad

ad