புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2013

ஒன்ரோறியோ மாகாண அரசியலில் முக்கிய இடத்தினைப் பிடிக்கப் போகும் கென் கிருபா

எதிர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ரோறியோ மாகாண இடைதேர்தலில் வெற்றி யாருக்கு என்ற கருத்துக் கணிப்புக்களும் , விமர்சனங்களும் கனடிய பிரதான ஊடகப் பக்கங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
ப்ரோக்ரேச்சிவ் கோன்செர்வேற்றிவ் கட்சியின் சார்பில் ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதியில் போட்டியிடும் நம்மவர் கென் கிரூபாவிற்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கத் தொடகியுள்ளதைக் காண முடிவதால் மாகாண அரசியலில் கென் கிருபா முக்கிய இடம் பிடிக்கப் போவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
பிரபல ரியல்எஸ்டேட் முகவரும், கனடிய வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான கென் கிருபாவின் தேர்தல் காரியாலயத்தில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பரப்புரைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சமூக வலைத்தளங்களிலும் கென் கிருபாவிற்கு ஆதரவுய் பெருகத் தொடங்கியுள்ளதால் ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதியின் கோன்செர்வேற்றிவ் வேட்பாளரான கென் கிருபா மாகாண அரசியலில் முக்கிய இடம் பிடிக்கப் போவதோடு மட்டுமன்றி மாகாண அரசியலில் தமிழர்களின் வலிமையை நிலைநாட்டக் கூடியவராகவும் இருப்பார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
954617_411081529004328_1418044268_n
1011437_411081139004367_126068263_n
1017504_411081885670959_1702819168_n
944495_414402422005572_1259835473_n

ad

ad