புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2013

வடமாகாண சபைத் தேர்தல்: யாழில் அரசுக்கு ஆதரவு தேடும் இராணுவத்தினர்
வடமாகாண சபைத் தேர்தல் களம் தற்போது யாழ்.குடநாட்டில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.குடாநாட்டில் வடமாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து அரசு பல அபிவிருத்தித் திட்டங்களை செய்து வருவதோடு விதி அபிவிருத்தி, புனரமைப்பு, புதிய அரச கட்டிடத்திறப்பு விழா என பல அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளது.
அத்தோடு யாழ்.நகரப் பகுதியில் வீடு வீடாக இராணுவத்தினர் சென்று குடும்ப விபரங்களைக் கேட்டு வருவதோடு மக்களை அரசுக்கு வாக்கு அளிக்குமாறு கூறிவருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அரசுடன் இயங்கும் பங்காளிக் கட்சியான ஈபிடிபி கட்சியினர் யாழ்.மக்களுக்கு தங்கள் அரசியல் கொள்ளை விளக்கங்களை இலவச பிரதிகளாக வெளியீடு செய்து அளித்து வருகின்றனர்.
தென்பகுதி அரசியல் கட்சியினர் குறிப்பாக தமிழ் மக்களின் வாக்கு வங்கியை உடைப்பதற்காக மக்கள் செல்வாக்கில் உள்ளவர்களை ஒன்றிணைத்து அவர்களை வேட்பாளர்களாக்க முயன்றுள்ளதுடன் தேடிப்பிடிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்.முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக முஸ்லிம் அரசியல் கட்சியினர் கிழக்கு மாகாணங்களில் தங்கியிருந்த முஸ்லிம் மக்கள் யாழ்.ஜந்து சந்தி, சோநகர் தெரு, நாவாந்துறை பொம்மை வெளிப்பகுதிகளில் குடியேறி வருகின்றனர்.
வடமாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழ் கட்சியினர் ஒன்றினைந்துள்ள இவ்வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்னமும் தேர்த்ல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதுடன் வேட்பாளர் தெரிவில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றனர்.
தேர்தல் களத்தில் பல அரசியல் கட்சிகள் குதித்துள்ள இவ்வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பபின் முடிவுக்காகவும் அவர்களின் பிரசார நடவடிக்கைகளை தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக வடபுல அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ad

ad