புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2013

யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை
தரித்து நின்ற வாகனத்தை அடித்து சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவக இளைஞர் அணித் தலைவரும் மாநாகர சபையின் முன்னாள் உறுப்பினருமான நிசாந்தன் சற்றுமுன் யாழ். நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ம் திகதி இரவில் வீதியில் நின்ற வாகனத்தை அடித்து அதன் கண்ணாடிகளை உடைத்ததுடன், வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பிரகாரம் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிசாந்தன் இன்று செவ்வாய்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டது எனவும் பெய்யான முறைப்பாட்டை பொலிஸார் பதிவு செய்துள்ளதாக மன்றில் நிசாந்தன் சார்பில் சட்டத்தரணிகளான என். சிறிகாந்தா, எம். றெமிடியஸ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர.
நிசாந்தனுக்குப் பிணை வழங்கக் கூடாது எனத் தெரிவித்து யாழ்.நீதிமன்றில் யாழ்.பொலிஸ் நிலையத் தலைமைப் பெறுப்பதிகாரி சமன்சிகேரா தனது வாதத்தை முன்நிறுத்தினார.
இதனை அடுத்து யாழ்.நீதிமன்ற நீதிபதி, நிசாந்தனை 5 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ததுடன், மாதத்தில் ஒரு ஞாயிறு யாழ்.பொலிஸ் நிலையத்தில் கையேழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்துள்ளார்.

ad

ad