புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2013


நடிகை மஞ்சுளாவுக்கு திரையுலகம் அஞ்சலி
 


நடிகை மஞ்சுளா(வயது 60)  சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று(23.7.2013) மரணம் அடைந்தார்.


நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் சின்ன வயதில் இருந்தே எம்.ஜி.ஆருடன் நாயகியாக நடிக்க வேண்டும் என்கிற கனவில் இருந்தார். வளர்ந்ததும், ரிக்‌ஷாக்காரனில் எம்.ஜி.ஆருடன் நடித்தார்.
1969ல் சந்தி நிலையம் திரைப்படம் மூலம் தமிழ்திரையுலகில் அறிமுகமான மஞ்சுளா எம்.ஜி.ஆர்., சிவாஜி, விஜயகுமார் உள்ளிட்டோருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.  தெலுங்கு திரையுலகிலும் பிரபல கதாநாயகியாக திகழ்ந்தார்.
 

கடலோரம் வீசிய காற்று குளிராக இருந்தது நேற்று, அழகிய தமிழ் மகள் இவள், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து என ரிக்‌ஷாக்காரன், நினைத்ததை முடிப்பவன், உரிமைக்குரல் ஆகிய படங்களில் இவர் நடித்த பாடல்கள் மிக பிரபலம். கதாநாயகி தவிர ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரை மணந்த இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். 
 

 சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து திடீரென்று கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

மஞ்சுளாவின் இறப்பு செய்தி அறிந்ததும் திரைத்துறையினர் அவருக்கு அஞ்சலி செலுத்த புறப்பட்டுள்ளனர்.

ad

ad