புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2013


பாலியல் புகார் கொடுத்ததால் ஆசிரியை உயிரோடு எரிப்பு:குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என முதல்வர் உறுதி
ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டம் காசிபூர் அரசு ஆரம்ப பள்ளியில் பணிபுரியும் 27 வயது ஆசிரியையிடம் கல்வித்துறை ஆய்வாளர் தந்தசேனா தவறாக நடந்துள்ளார். 


இதுகுறித்து திர்க்கி போலீஸ் நிலையத்தில் ஆய்வாளர் தந்தசேனா மீது ஆசிரியை பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரை வாபஸ் பெறுமாறு ஆசிரியை, பள்ளி விடுதி அறையில் அடைத்து சித்ரவதை செய்யப்பட்டார். இதனை ஆசிரியை மறுத்து வந்தார்.
இந்தநிலையில் ஆசிரியை மீது அடையாளம் தெரியாத சிலர், மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். உடல் கருகிய ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தப்பிஓடிய தந்தசேனாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன்பட்நாயக், ஆசிரியை மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். ஆசிரியைக்கான மருத்துவ செலவை அரசு ஏற்கும் என்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். 
இந்த சம்பவத்தை சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினர் கண்டித்துள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ad

ad