புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2013

சுயாட்சி மூல­மான தீர்­வுக்கு இந்­தியா உதவ வேண்டும்

இந்திய அரசுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், அதேபோன்று சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளும் இலங்கையினால் நிறைவேற்றப்படவில்லை என்ற கருத்து பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் இந்தியா இதுபற்றி கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரம் தமிழகம் சென்றிருந்தார். அங்கு ஜெயா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:-
வட­மா­காண சபையை நாம் கைப்­பற்றி விட்டோம் என்­ப­தனால் தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னைகள் தீர்ந்­து­விட்­டன என்று இந்­தியா அர்த்தம் கொள்­ளக்­கூ­டாது.
நாட்­டுக்கு எவ்­வித பிளவும் ஏற்­ப­டாமல் ஒரு­மித்த நாட்­டுக்குள் அர­சியல் ரீதி­யான அபி­லா­சை­களை நாம் அடைந்­து­ கொள்ள போதிய சுயாட்சி மூல­மான அதி­கா­ரங்­களை பெற்­றுக்­ கொள்­ளவும் பூர­ண­மான அதி­காரம் கொண்ட ஆட்சிப் பகிர்வு முறையை எமக்கு பெற்­றுத்­ த­ரவும் இந்­தியா கால­தா­ம­த­மின்றி உதவ வேண்­டு­மென கேட்டுக் கொள்­கின்றேன்.
பொது­ந­ல­வாய நாடு­களின் உச்­சி­மா­நாடு அடுத்த மாதம் இலங்­கையில் நடை­பெ­ற­வி­ருக்­கின்­றது. இந்த மகா­நாடு இலங்­கையில் நடை­பெறக் கூடா­தென்று பலர் கருத்துக் கூறி­யி­ருக்­கின்­றார்கள்.
முதல் அமைச்சர் செல்வி ஜெய­ல­லிதா உட்­பட எல்­லோரும் இந்தக் கருத்தைக் கூறி ­வந்­தி­ருக்­கின்­றார்கள். சில நாடுகள் பகி­ரங்­க­மாக இந்த மகா­நாட்டை பகிஷ்­க­ரிக்கப் போவ­தாகக் கூறிக் கொண்­டி­ருக்­கி­ன்றன.
விஷே­ட­மாக கன­டாவின் பிர­தமர் ஸ்டீபன் ­ஹார்ப்பர் தனது கருத்தை வெளிப்­ப­டை­யாக கூறி­வந்­தி­ருக்­கின்றார்.
இக் கருத்தை தெரி­விப்­ப­தற்கு அடிப்­படைக் கார­ணங்கள் இருக்­கின்­றன. பொது­ந­ல­வா­யத்தில் ஒரு­நாடு உறுப்பு நாடாக இருந்தால் அவர்கள் சில கோட்­பா­டு­களை பின்­பற்ற வேண்டும்.
தங்­க­ளு­டைய நாட்டில் நடை­பெ­று­கின்ற ஆட்­சி­ மு­றையில் சில தத்­து­வங்­களை மதித்து நடப்­ப­துடன் அந்த நாட்டில் நல்­லாட்சி நடை­பெ­ற ­வேண்டும். மனித உரி­மைகள் மதிக்­கப்­பட வேண்டும்.
ஜன­நா­யகம் உண்­மை­யாக நில­வ­வேண்டும். நீதி­மன்­றங்­களின் சுதந்­திரம் உறுதி செய்­யப்­ப­ட­வேண்டும். சட்டம், ஒழுங்கு முறை­யாக பாது­காக்­கப்­பட வேண்டும். சட்டம் நீதி, நியா­யத்தின் அடிப்­ப­டையில் ஆட்சி இடம்பெற வேண்டும்.
இவ்­வி­த­மான கோட்­பா­டு­களின் அடிப்­ப­டையில் ஆட்சி நடை­பெ­றாமல் இருக்­கு­மாக இருந்தால் அந்த நாடு இந்த பொது­ந­ல­வாய நாடு­களால் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட அடிப்­ப­டை­யான தத்­து­வங்­களை மீறி நடப்­ப­தாக கருத இட­முண்டு.
இவ்­வி­த­மாக மீறி நடந்­ததன் கார­ண­மாக இதற்கு முன்­ப­தாக பல நாடுகள் பொது நல­வா­யத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. பல நாடுகள் தமது உறுப்­பு­ரி­மையைப் பொறுத்தவரை இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. சில­நா­டு­களில் இது நடை­பெ­றா­மலும் இருந்­தி­ருக்­கலாம்.
ஆன­ப­டியால் இலங்­கையைப் பொறுத்­த­வரை நாட்­டுக்­குள்­ளேயே மாத்­தி­ர­மல்ல, சர்­வ­தேச ரீதி­யா­கவும் பாரிய குற்­றங்கள் இலங்கை அரசு மீது சுமத்­தப்­பட்டு பொது­ந­ல­வாய கோட்­பா­டுகள் மதிக்­கப்­ப­ட­வில்லை, மீறப்­பட்­டி­ருக்­கின்­றன என்ற அடிப்­ப­டையில் ஐ. நா. சபையின் மனித உரிமைப் பேர­வையில் கூட 2012, 2013 ஆகிய ஆண்­டு­களில் எதி­ரான தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்டு இலங்­கையில் முன்­னேற்­றங்கள் ஏற்­பட வேண்­டு­மென்ற கருத்­துக்கள் கூறப்­பட்­டுள்­ளன என்ற அடிப்­ப­டையில் இந்த முடிவை பல நாடுகள் எடுத்­துள்­ளன என்­பதை இல­கு­வாக புரிந்­து­கொள்ள முடியும்.
முதல் அமைச்சர் ஜெய­ல­லி­தாவைப் பொறுத்­த­வரை அவர் சமீ­பத்தில் விட்ட அறிக்­கையில் ஏன் இந்த மகா­நாட்டை பகிஷ்­க­ரிக்க வேண்­டு­மென்ற கருத்தை அவர் பகி­ரங்­க­மாகக் கூறி­யி­ருக்­கின்றார். தனது விளக்­கத்தை தெளி­வாக எடுத்துக் காட்­டி­யுள்ளார்.
அந்­த­வ­கையில் தான் தமிழ் நாட்­டி­லுள்ள ஏனைய தலை­வர்­களும் தமது கருத்­து­க்களை கூறி வரு­கின்­றார்கள்.குறிப்­பி­டக்­கூ­டிய அள­வுக்கு இலங்­கையில் எவ்­வித முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை.
யுத்தம் நடை­பெற்­ற­ போது இரா­ணுவ தேவையின் அடிப்­ப­டையில் இரா­ணு­வத்தால் கைப்­பற்­றப்­பட்ட மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் அந்த மக்­க­ளுக்கு பெரிய அளவில் கொடுக்­கப்­ப­ட­வில்லை. விசே­ட­மாக யாழ்ப்­பா­ணத்தில் வலி­காமம் என்ற இடத்­திலும் திரு­கோ­ண­ம­லையில் சம்­பூ­ரிலும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணிகள் அந்த மக்­க­ளுக்கு கொடுக்­க­ப்ப­ட­வில்லை.
அக்­கா­ணிகள் ஒரு காலத்தில் அதி உயர்­பா­து­காப்பு வல­யங்­க­ளாக பிர­க­ட­னப்படுத்தப்­பட்­டி­ருந்த கார­ணத்­தினால் இரா­ணுவக் கட்­டுப்­பாட்டின் கீழ் அக்­கா­ணிகள் கொண்­டு­வ­ரப்­பட்­டன.மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டார்கள்.
ஆனால்,தற்­போது யுத்தம் முடி­வ­டைந்­து­ விட்­ட­மையால் மக்கள் தமது சொந்தக் காணி­க­ளுக்கு திரு­ம்பிச் செல்ல வேண்டும். தங்கள் வாழ்­வா­தா­ரத்தை தொடங்க வேண்டும். இதற்கு எவ்­வி­த­மான தடையும் இருக்க வேண்­டிய தேவை­யில்லை. அப்­ப­டி­யி­ருந்தும் அக்­கா­ணிகள் மக்­க­ளுக்கு மீள­ளிக்­கப்­ப­ட­வில்லை.
அது மாத்­தி­ர­மல்ல, யுத்தம் முடிந்த பிறகு மேல­தி­க­மான காணி­களை அர­சாங்கம் கைப்­பற்­றி­யி­ருக்­கின்­றது. தமது தேவைக்­காக சில இடங்­களில் இரா­ணு­வத்­துக்கு வீடு கட்­டு­கின்­றார்கள். இரா­ணு­வத்­தினர் மக்­களின் காணி­களில் விவ­சாயம் செய்­கின்­றார்கள்.தோட்டம் செய்­கின்­றார்கள்.இவ்­வி­த­மாக பல தொழில்­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள். வியா­பா­ரத்தில் ஈடு­ப­டு­கின்­றார்கள்.
இவ்­வி­த­மான இரா­ணு­வத்தின் நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக மக்­களின் வாழ்க்­கையில் பல்­வேறு இடை­யூ­றுகள் ஏற்­பட்டு வரு­கின்­றன. இவற்றை நிவர்த்தி செய்­வ­தற்­காக அர­சாங்­கத்­துக்கு போதிய தக­வல்­களைக் கொடுத்து பாரா­ளு­மன்­றத்­தில்­கூட இது சம்­பந்­த­மாக கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாங்கள் எடுத்துக் கூறி­யுள்ளோம்.
அவ்­வாறு கூறி­ய ­போதும் தேவை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. நிவா­ர­ணங்கள் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. உரிய ஒழுங்­குகள் மேற்­கொள்­ளப்­பட்டு நிலை­மை முன்­னே­ற­வில்லை.
மக்கள் இன்­று­வரை இரண்டாந் தர பிர­ஜை­க­ளாக கணிக்­கப்­பட்டு பல நூற்­றாண்­டு­க­ளாக பரம்­ப­ரை­யாக சுய­ம­ரி­யா­தை­யுடன் வாழ்ந்து வந்த பிர­தே­சங்­களில் வாழ­மு­டி­யாத கட்­டாய நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.
மனித உரிமை சட்­டங்கள் மீறப்­பட்ட விட­யங்கள் சம்­பந்­த­மாக சுதந்­தி­ர­மான விசா­ரணை நடை­பெற்று உண்மை அறி­யப்­படும் என்ற வாக்­கு­று­தியை இந்­தி­யா­வுக்கு மாத்­தி­ர­மல்ல சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் ஐ. நா. சபை­யி­னு­டைய செய­லாளர் நாய­கத்­துக்கும் கொடுக்­கப்­பட்­டி­ருந்த போதி­லும்­கூட இவ்­வி­த­மான வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டவில்லை.
பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் காணாமற் போயி­ருக்­கின்­றார்கள். அவர்கள் விட­ய­மாக உண்­மையை அறி­வ­தற்கு கூட இன்னும் முறை­யான விசா­ரணை நடை­பெ­ற­வில்லை.
அவர்கள் குடும்­பங்கள், பெற்­றோர்கள், மனை­விமார், பிள்­ளைகள், இனத்­த­வர்கள், உற­வி­னர்கள் அலைந்து திரிந்து தேடியும் உண்மை இன்னும் வெளி­வ­ர­வில்லை. உண்­மையை தெரி­விக்க எவ்­வி­த­மான முயற்­சி­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை.
ஆகையால் யுத்தம் முடி­வ­டைந்­தது உண்­மைதான். ஆனால், அதற்கு பின்­பு­கூட எமது மக்கள் வாழ்வில் அமை­தியும் நிம்­ம­தியும் இன்­னமும் ஏற்­ப­ட­வில்­லை­யென்றே கூற வேண்டும்.
இந்­திய அர­சுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களும் அதே போன்று சர்­வ­தேச சமூ­கத்­துக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களும் இலங்­கை­ய­ர­சாங்­கத்தால் நிறை­வேற்­றப்­ப­ட­வில்­லை­யென்ற கருத்து பொது­வாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட கருத்­தாகக் காணப்­ப­டு­கி­றது.
அதே சம­யத்தில் இவ்­வி­த­மான வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாமல் இருக்­கின்ற நிலையில் இந்­தியா இது பற்றி கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ் மக்­க­ளு­டைய இன விகி­தா­சா­ரத்தை மாற்றி அமைக்­கக்­கூ­டிய வகையில் எமது பிர­தே­சங்­களில் கலா­சார ரீதி­யான, இன ரீதி­யான, மொழி ரீதி­யான அடை­யா­ளங்­களை மாற்­றி­ய­மைத்து பெரும்­பான்மை இனத்­த­வரைக் குடி­யேற்ற பெரும்­பான்மை இனத்தின் மதத்தை, கலா­சா­ரத்தை பரப்­பு­வ­தற்கு முயற்சி செய்து தமிழ் மக்­களின் அடை­யா­ளங்­களை இல்­லாமல் செய்து நிரந்­த­ர­மான பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டிய வகையில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.
எங்கள் பிர­தே­சங்­களில் இவற்றைப் பார்க்­கின்ற போது நடை­பெற வேண்­டி­யது நடை­பெ­றாமல் இருப்­பது மாத்­தி­ர­மல்ல, நடை­பெறக் கூடாத விட­யங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதன் கார­ண­மாக மக்­க­ளுக்கு வச­தி­யீனம் மாத்­தி­ர­மல்ல, நிரந்­த­ர­மாக பாதிப்பு ஏற்­படக் கூடிய வகையில் அங்கே கரு­மங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.
இதைப் பார்க்­கின்ற போது இந்­திய அரசின் செயற்­பாடு இனி வருங்­கா­லங்­களில் முழு­மை­யாக இருக்க வேண்டும். திட­மாக இருக்க வேண்டும். இலங்­கை­ய­ர­சாங்­கத்தை செயற்­பட வைக்­கக்­கூ­டிய வகையில் இந்­திய அரசின் செயற்­பாடு அமைய வேண்டும் என்று கூறு­வதைத் தவிர நாம் வேறு எதையும் கூற முடி­யாது.
சுயாட்சி வேண்டும்
மாகாண சபை முறை 1987 ஆம் ஆண்டு செய்து கொண்ட இலங்கை- – இந்­திய ஒப்­பந்­தத்­துக்கு அமை­வாக 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூல­மாக உரு­வாக்­கப்­பட்ட ஒரு ஆட்சி ஒழுங்கு ஒப்­பந்­தத்தில் உள்ள முக்­கி­ய­மா­ன­வி­ட­யங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.
இலங்­கையில் வெவ்­வேறு மக்கள் வாழ்ந்து வரு­கின்­றார்கள். மூவின மக்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். அம்­மக்கள் தங்கள் தனித்­து­வத்­தையும் கலா­சா­ரத்­தையும் பேணி பாது­காக்­கக்­கூ­டிய வகையில் நாட்டில் ஒழுங்கு இருக்க வேண்டும்.
சுயாட்சி நாட்டில் இருக்க வேண்டும்.வட, கிழக்கு பிர­தே­சங்­களில் தமிழ் மக்கள் சரித்­திர ரீதி­யாக வாழ்ந்து வந்­தி­ருக்­கின்­றார்கள். அந்த அடிப்­ப­டையில் அப்­பி­ர­தே­சங்கள் ஒன்­றாக சேர்க்­கப்­பட்டு (வடக்கு, கிழக்கு) அதி­கார அலகு அப்­பி­ர­தே­சத்தில் உரு­வாக்­கப்­பட வேண்டும் என பல விட­யங்கள் ஒப்­பந்­தத்தில் கூறப்­பட்­டி­ருந்­தன.
ஆனால், 13வது திருத்தம் இலங்­கை­ய­ரசால் நிறைவேற்­றப்­பட்­டது. ஆனால், ஒப்­பந்­தத்தில் கூறப்­பட்ட விட­யங்­களை முழு­மை­யாக உள்­வாங்­கக்­கூ­டிய வகையில் அந்தத் திருத்தம் அமை­ய­வில்லை.
இருந்த போதி­லும்­கூட தற்­பொ­ழுது வட மாகாண சபை தேர்தல் நீண்ட காலத்­துக்குப் பிறகு நடை­பெற்ற போது அதில் கூட்­ட­மைப்பு போட்­டி­யிட்­டது.
அர­சாங்கம் மாகாண சபையை தங்கள் சார்­பாக உட்­ப­டுத்தி தமிழ் மக்­க­ளுக்கு வர வேண்­டிய உரி­மை­களை அரசு மறுக்க இட­ம­ளிக்­காமல் போட்­டி­யிட்டு நாங்கள் கைப்­பற்றி பெற வேண்­டி­யதைத் தொடர்ந்து பெற வேண்­டு­மென்ற கார­ணத்­துக்­காக போட்­டி­யிட்டு பெரும் வெற்றி கண்­டி­ருக்­கிறோம்.
எமது முயற்­சிகள் தற்­பொ­ழுது இரண்டு கோணங்­களில் அமையும். ஒன்று இம் மாகா­ண­சபை முறை­மையைப் பயன்­ப­டுத்தி, அதில் உள்ள அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி எமது மக்­க­ளுக்கு விமோ­ச­னத்தை பெற்றுக் கொடுக்­கலாம் என்றும் அதைப் பெற்றுக் கொடுக்க முயற்சி எடுப்போம் என்­ப­தற்­கா­கவும், அதே சம­யத்தில் நியா­ய­மான அர­சியல் தீர்வை பெறக் கூடிய வகையில் ஒரு­மித்த நாட்­டுக்குள் நாட்­டுக்கு எவ்­வி­த­மான பிளவும் ஏற்­ப­டாமல் எமது அர­சியல் ரீதி­யான, பொரு­ளா­தார ரீதி­யான, சமூக ரீதி­யான, கலா­சார ரீதி­யான அபி­லா­ஷை­களை போதி­ய­ள­வான சுயாட்­சியின் மூல­மாக பெற்றுக் கொள்­வ­தற்கு அதி­காரம் கொண்ட ஒரு ஆட்சிப் பகிர்வு முறையை கொண்டு வர பாடு­ப­டுவோம்.
இறைமை பகி­ரப்­பட வேண்டும்
இறைமை பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும். இறைமை ஒரு இனத்தைச் சார்ந்த மக்­க­ளுக்கு உரித்­தாக இருக்க முடி­யாது. ஒரு நாட்டின் இறைமை அந்த நாட்டில் வாழு­கின்ற மக்கள் மத்­தியில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும். அந்த இறை­மையை மக்கள் அனை­வரும் பயன்­ப­டுத்தக் கூடிய வகையில் ஆட்சி ஒழுங்கு அமைய வேண்டும் அந்த அடிப்­ப­டையில் ஆட்சி முறை­யொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு எங்­களால் இயன்ற அத்­தனை முயற்­சி­க­ளையும் நாம் மேற்­கொள்வோம்.
ஆனால், இக்­க­ரு­மத்தை நிறை­வேற்­று­வதில் இந்­தி­யா­வுக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் பாரிய பங்கு இருக்­கின்­றது.
இலங்­கையில் நீதி நியாயம் நிலவி தமிழ் மக்கள் சமத்­து­வ­மாக வாழ இந்­தி­யாவும் சர்­வ­தே­சமும் உதவி செய்ய வேண்­டு­மென வலி­யு­றுத்த வேண்­டி­யது எனது கட­மை­யென்று கரு­து­கிறேன்.
சரித்­திர ரீதி­யான தொடர்பு
சரித்­திர ரீதி­யாக நாங்கள் பார்த்தால் இந்­தி­யா­வி­லி­ருந்து தான் சிங்­கள மக்­க­ளா­யினும் சரி, தமிழ் மக்­க­ளா­யினும் சரி, இல்லை முஸ்லிம் மக்­க­ளா­யினும் சரி வந்­தி­ருக்­கி­றார்கள்.
இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டையில் உள்ள தொடர்பு சரித்­திர கலா­சார, சமய, மொழி­ரீ­தி­யாக இருப்­ப­துபோல் வேறு எந்த நாட்­டுக்கும் இல்லை.
இலங்கை இந்­தி­யாவின் அண்­டைய நாடு. ஒரு பிராந்­திய வல்­ல­ரசு. தமிழ் மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வு வழங்­கப்­பட வேண்­டு­மென்ற கரு­மத்தில் ஈடு­பட்­டி­ருக்­கி­றது. அதைத் தீர்த்து வைப்­ப­தற்கு முயற்­சிகள் எடுத்­துள்­ளது.
அம்­மு­யற்சி தொடர்ந்து கொண்டு செல்­லப்­பட வேண்டும். ஒரு நியா­ய­மான நீதி­யான தீர்வை இலங்கை தமிழ் மக்­க­ளுக்கு பெற்­றுத்­தர வேண்­டிய தார்­மீகப் பொறுப்­பொன்று இந்­தி­யா­வுக்கு உள்­ளது என நாம் கரு­து­கின்றோம்.
ஒப்­பந்­தங்கள் நிறை­வே­ற­வில்லை
தமிழ் மக்கள் திருப்தி அடை­யக்­கூ­டி­ய ­வ­கையில் கரு­மங்கள் இலங்­கையில் நடை­பெ­று­மாக இருந்தால் எமது பிரச்­சினை சர்­வ­தேச மய­மாக்­கப்­பட வேண்­டிய விட­ய­மல்ல. நாங்­களே பேசித் தீர்த்து முடிவு கண்டிருப்போம்.
ஆனால், எமது தலைவர்கள் இலங்கையரசுடன் செய்து கொண்ட எந்த ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவின் கடும் முயற்சியின் காரணமாகத்தான் மாகாண ஒழுங்குமுறை உருவாக்கப்பட்டது.
ஆனால், அதுவும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் வாக்குறுதி கொடுத்து நாங்கள் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவோம். அதற்கு மேலாக அதைக் கட்டியெழுப்பி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்குவோம். அதன் மூலமாக தமிழ் மக்களுக்கு கணிசமான சுயாட்சி கிடைக்கும் என்ற வாக்குறுதியை வழங்கியிருந்தது.
அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு மாறாக 13வது ஷரத்தை இல்லாமல் செய்வதற்கும் அதிகாரங்களை குறைப்பதற்கும் மாற்றுவதற்கும் பல முயற்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இது இந்திய அரசாங்கத்துக்கு நன்றாகத் தெரியும்.
நாங்கள் பாரதப் பிரதமரைச் சந்தித்து இவ்விடயங்கள் தொடர்பாக விளக்கியிருக்கிறோம். எமது சந்திப்பிற்கு பிறகு இந்தியாவால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக அவ்வித முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் கைவிடப்படவில்லை.
இன்னுமொரு ஆபத்து இருக்கின்றது. இன்னும் எது நடக்குமென்று கூற முடியாது ஆனால், இவையெல்லாவற்றையும் கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. ஒரு மாகாண சபை அமைக்கப்பட்டதன் நிமித்தம் பிரச்சினை தீர்ந்துவிட்டது என எண்ணக்கூடாது.

ad

ad