ஒரே மேடையில் மன்மோகன் சிங், நரேந்திர மோடி பங்கேற்பு
இந்த விழாவில் பேசிய மோடி, படேலை பற்றியும் அவரது கொள்கைகளை
பற்றியும் அறிந்து கொள்ள அருங்காட்சியகம் உதவும். அருங்காட்சியகம் அமைக்க பல கோடி மதிப்புள்ள நிலத்தை குஜராத் மாநில அரசு குறைந்த விலைக்கு கொடுத்தது. சிறந்த நிர்வாகத்திற்கான விருது வழங்க ஆரம்பித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வருடம்தோறும் சிறந்த நிர்வாகத்திற்கான விருதை குஜராத் மாநிலம் பெற்று வருகிறது. குஜராத் மாநில அரசு செய்த பணிகளுக்கு மதிப்பளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்