புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2013



வடக்கு மக்களின் வாழ்வாதாரத்திற்கு தென் கொரியா உதவும்: விக்னேஸ்வரனிடம் தென் கொரியத் தூதுவர் உறுதி
இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் ஜோன் மூன் சோய் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்ததுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.
தென் கொரியத் தூதுவர் முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
வடமாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மக்களின் தொழில் வளங்களை மேம்படுத்தவும் வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் கொரிய அரசாங்கம் உதவும் என கொரிய தூதுவர் உறுதியளித்துள்ளதாக இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
அதேவேளை வடக்கு மாகாணத்தில் உள்ள மாணவர்கள் தென் கொரியாவில் உயர்கல்வி பயில விண்ணப்பிக்க வேண்டும் தூதுவர் வலியுறுத்தினார்.
அத்துடன் வடமாகாண இளைஞர்கள் கொரிய மொழியை கற்றுக்கொண்டால் தென் கொரியாவில் வேலைவாய்ப்பை வழங்குவதாகவும் கொரியத் தூதுவர் கூறியதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தென் கொரிய தூதுவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொண்டார்.

ad

ad