புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014


அன்புமணி ராமதாஸ் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல்
நெஞ்சம் கொதிக்கின்ற வேதனையை ஏற்படுத்தியது: வைகோ
 
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில்,   ‘’பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய
அமைச்சரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது கொலை வெறி நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.


கற்பனை செய்வதற்குக்கூட முடியாத பெரும் பின்விளைவு பாதகங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கொடிய நோக்கத்தோடு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அவர் பயணித்த டெம்போ டிராவலர் வாகனத்தில் முன் இருக்கையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அமர்ந்திருந்த நிலையில், இரண்டு கிலோவுக்கு மேல் எடையுள்ள கூர்மையான கருங்கல் அவரைக் குறி பார்த்து வீசப்பட்டுள்ளது.
கண்ணாடியை உடைத்துக்கொண்டு கல் உள்ளே போய் விழுந்திருக்கிறது. இயற்கை அன்னையின் கருணையால் டாக்டர்அன்புமணி ராமதாஸ் உயிருக்கு ஆபத்து நேரவில்லை.
இந்தக் கொலைவெறி வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் திட்டமிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு கைது செய்து கூண்டில் நிறுத்த வேண்டும். இரணகளமும் கலவரமும் ஏற்படட்டும் என்று எண்ணி திட்டமிட்டு தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
நெஞ்சம் கொதிக்கின்ற வேதனையை இச்சம்பவம் ஏற்படுத்திய போதிலும், பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தோழர்களும், பொதுமக்களும் அமைதி காக்க அன்புடன் வேண்டுகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

ad

ad