புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014


சா /த .பரீட்சையில்  யாழ் இந்துக் கல்லூரி,வேம்படி பாடசாலை மாணவர்கள் அனைவரும் சித்தி 
வேம்படி ää28 பேர் 9 A ,85 பேர் 8A ,33பேர் 7A ,இந்து --9பேர் 9A ,44பேர் 8A 
இன்று வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் 100 வீத சித்தியடைந்துள்ளனர் என்று பாடசாலை
அதிபர் வி. கணேசராஜா தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் 9 பேர் 9 ஏ சித்தி பெற்றுள்ளனர்.
இவர்களில் 4 பேர் ஆங்கில மொழி மூலமும் 5 பேர் தமிழ் மொழி மூலமும் தோற்றிச் சித்தியடைந்துள்ளனர்.
9 ஏ சித்தி பெற்றோர் விவரம் வருமாறு:-
ஆங்கில மொழி மூலம் –
ச. கோகுலன், ப.மேஷிகன், சி. சரண்யன், ஆ.வேதாகுலன்.
தமிழ் மொழி மூலம் –
க. பிரசாந், தே. ரஜிந்தன், க. சங்கீத், சி.சங்கீத்தன், யோ.சுவஸ்திகன். அத்துடன் 44 மாணவர்கள் 8 ஏ சித்தி பெற்றுள்ளனர். இவர்களில் 11 பேர் ஆங்கில மொழி மூலம் தோற்றிச் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2013 ஆம் ஆண்டில் அதிக மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் தோற்றியிருந்தமையே 9 ஏ சித்தி குறைவடையக் காரணம் என்றும் பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்தார்.யாழில் O/L பரீட்சை: 
-----------------------------------------------------------------------------------------------------வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி யாழ். மாவட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது. 28 மாணவிகள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இவர்களில் 8 மாணவிகள் ஆங்கில மொழியில் பரீட்சைக்கு தோற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கில மொழியில் பரீட்சைக்கு தோற்றியவர்களில் அபிராமி ரவிதரன், ஜனந்தினி சிவபாலன், லக்சிகா உதயகுமார் இந்துலேகா கிறிஸ்ரியன், ராகவி ராகவன், சங்கவி சதானந்தராஜா, சத்மிகா சிறிகணேசன், டிலுசியா பத்மநாதன் ஆகியோரும்,
தமிழ் மொழியில் விஸ்ணுபிரியா ரவீந்திரன், பிரியங்கா நித்தியானந்தராஜா, ரபினி சண்முகலிங்கம், அபிராமி நற்குணம், கஜேந்தினி பாலேந்திரராஜா, நிசானி பூலிங்கம், சுபேஸ்கா மோகன்ராஸ், ரவிதாரணி கோகுலாநந்தன், டிலுக்சா அன்ரன் ஜேசுதாஸ், ரக்‌ஷனா ரவீந்திரன், கௌதமி விஜயகுமார், சங்கவி திருச்செல்வம், கௌசியா சுந்தர், சுவஸ்திகா ஞானசம்பந்தன், சஜிந்தா ஜீவரட்ணராஜா, சாருகா சற்குணராஜா, மதுஷா சிவயோகன், சர்மினி ஜெயசீலன், ருக்‌ஷிகா நவரட்ணம், நிலுஜா மகாதேவன் ஆகியோர் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இவர்களில் 8 ஏ சித்தியை 85 மாணவிகளும், 7 ஏ சித்தியை 33 மாணவிகளும் பெற்றுள்ளனர்.
இதேவேளை பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள் அனைவரும் க.பொ.த உயர்தர கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad