- தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அந்தக் கட்சியின் நாமக்கல் மக்களவைத் தொகுதி முன்னாள் வேட்பாளர் என்.மகேஷ்வரனுக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
விலகிய தேமுதிக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்
தேர்தலில் போட்டியிட மறுத்து விலகிய தேமுதிக வேட்பாளர் என்.மகேஷ்வரன், நாமக்கல்லில் வியாழக்கிழமை ஜெயலலிதா முன்னி
லையில் அதிமுகவில் இணைந்தார்.
பாஜக கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக சார்பில் வேட்பாளராக அந்தக் கட்சியின் முன்னாள் மாநில மாணவரணி துணைச் செயலர் என்.மகேஷ்வரன் (34) கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த அவர், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, தேர்தலில் போட்டியிட மறுத்ததுடன், வேறு வேட்பாளரை நிறுத்திக் கொள்ளும்படி அந்தக் கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து, தேமுதிக சார்பில், அந்தக் கட்சியின் மாநில வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலர் எஸ்.கே.வேல், நாமக்கல் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நாமக்கலுக்குப் பிரசாரம் செய்ய வந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் மகேஷ்வரன் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு ஜெயலலிதா அதிமுக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.