புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

சாதாரணதர பெறுபேறு! 175 வருட கல்லூரி வரலாற்றில் இதுவே மிகப்பெரும் சாதனை!- அதிபர் புகழாரம்
175 ம் ஆண்டு நிறைவிலே இதுவரை காலத்திலும் இல்லாத இந்த வெற்றி எமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என வேம்படி பெண்கள் உயர் தர பாடசாலை அதிபர் வேணுகா சண்முகரட்ணம் தெரிவித்தார்.
வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ் மாவட்ட பாடசாலைகளில் எமது மாணவிகளே முன்னிலை பெற்றுள்ளனர் என்பது விசேட அம்சமாகும்.
கடந்த 2013 ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 28 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
8 ஏ சித்தியை 80 மாணவர்களும் 7 ஏ சித்தியை 60 வீதமான மாணவிகளும் பெற்றுள்ளனர்.
இதேவேளை கடந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றிய சகல மாணவர்களும் சாதாரண தரத்தில் சித்தி பெற்று உயர் தரத்தை தொடரவுள்ளனர்.
ஆகவே 100 சதவீதம் மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்பது சிறப்பான விடயம்.
இவர்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் பல்வேறு உந்துதல்களாகும். கடந்த வருடம் ஆளுநரால் சகல பாடத்திலும் ஏ பெற்ற சகல மாணவர்களையும் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் சமய பாடஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அதை விட 9 ஏ சித்தி பெற்ற மாணவிகள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
எமது பாடசாலையில் குறைந்த சித்தி பெறும் மாணவிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பாட ஆசிரியரும் இந்த விசேட வகுப்புக்களை நடத்தியிருந்தனர்.
எமது மாணவிகள் முழுமையாக எல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்துள்ளமைக்கு மேற்குறித்த விடயங்கள் பிரதான காரணியாக அமைகின்றன.
கடந்த வருடம் எமது பாடசாலை தேசிய ரீதியில் 10 ஆவது இடத்தில் இருந்தது. இந்த வருடம் அதற்கு முன் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ் வெற்றிக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. பெற்றோர் தமது பிள்ளைகளை விசேட வகுப்புக்களுக்கு அனுப்பி மிகுந்த ஒத்துழைப்பு வழங்கினர்.
175 ம் ஆண்டு நிறைவிலே இதுவரை காலத்திலும் இல்லாத இந்த வெற்றி எமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்த வெற்றிக்கு அரும்பாடுபட்ட ஆசிரியர்களை நான் மனதார பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.

ad

ad