புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2014

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்! லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையமாக கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நாளான மே12 அன்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாப் பிரதமர் அலுவலகம் முன் தொடங்கிய கவனயீர்ப்பு போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றது. 
மே-16 வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவிருக்கின்ற இந்த கவனயீர்ப்பு நிகழ்வில், ஈழத்தமிழினத்துக்கு நடந்தேறிய இனப்படுகொலைக்கு பரிகாரி நீதி கோரி கண்காட்சி, சிறிலங்கா புறக்கணிப்பு விழிப்பூட்டல் பரப்புரை, துண்டுப்பிரசுர விநியோகம், கவிதை, உரை என பல்வேறு விடயங்கள் உள்ளக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சிறிலங்கா அரசு தனது அச்சத்தினையும் விசனத்தினையும் வெளிப்படுத்திய சிறிலங்கா புறக்கணிப்பு லண்டன் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைத்துள்ளதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் மாநாட்டு ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மாநாடு மே-17ம் நாள் சனிக்கிழமை மத்திய லண்டனில் இடம்பெறவுள்ள நிலையில், கிரிக்கெட் புறக்கணிப்பு அவுஸ்றேலிய செயல்வீரர் Trevor Grant அவர்கள் லண்டன் வந்தடைந்துள்ளார்.
இந்த மாநாட்டில் பலஸ்தீனத்தினை மையப்படுத்திய இஸ்றேல் புறக்கணிப்பு BDS அமைப்பின் பிரதிநிதி Omar Barghouti, தென்ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் பிரதிநிதிகள் Krish Govender, Roy Chetty, முன்னாள் ஐரோப்பிய பாராளுமன்ற பிரித்தானிய உறுப்பினர் Robert Evans உட்பட பல்வேறு அனைத்துலக பிரமுகர்கள் பங்கெடுக்கின்றனர்.
சிறிலங்காவைப் புறக்கணிப்போம் ' எனும் இச்செயல்முனைப்பினை, பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சியாகவும், இத் திட்டத்தை சிறப்புறச் செயற்படுத்துவதற்காகவும், இதற்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான புதுமையான அரசியல், சட்டவியல் ரீதியான தந்திரோபாயங்களைக் கண்டறிவதற்காகவும் இந்த மாநாடு இடம்பெறுகின்றது.

ad

ad