புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2014

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 230 ஆமைகள் தாய்லாந்து விமான நிலையத்தில் பறிமுதல்
இந்தியாவிலிருந்து தாய்லாந்திற்கு கடத்தப்பட்ட 230 விலையுயுர்ந்த ஹாமில்டன் வகை ஆமைகள் அந்நாட்டு விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது.


தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் சுவர்ணபூமி விமான நிலையத்தில் நேற்று 4 சூட்கேஸ்கள் வந்தடைந் தது. நீண்ட நேரமாகியும் அந்த சூட்கேஸ்களை பெற யாரும் வராததால் சந்தேகமடைந்த சுங்கத்துறையினர் அதை வெடிகுண்டு சோதனை நிபுணர்களின் உதவியுடன் திறந்து பார்த்தனர். அப்போது அதில் 200-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த ஆமைகள் இருந்தது தெரியவந்தது.
அந்த சூட்கேஸ்கள் இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்சுக்கு சொந்தமான 6இ077 என்ற விமானத்தின் மூலம் சென்றடைந்துள்ளது. ஹசாமுத், சம்ஷாத், வாசி அக்ரம் போன்ற பெயர்களில் அவை அனுப்பப்பட்டிருந்தன. கடத்தப்பட்டுள்ள ஆமைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் என சுங்க அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சோதனையில் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்திலேயே பெட்டிகளை வாங்காமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்வதேச அளவில் அழிந்து வரும் அரிய வகை இனமாக இந்த ஹாமில்டன் ஆமைகள் வகைப்படுத் தப்பட்டுள்ளன. இந்நிலையில், இதனை கடத்துவது கடுமையான குற்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டது.

ad

ad