புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2014


இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
1984 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையில் சித்திரவதை தடுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று தசாப்தங்கள் கடந்துள்ள போதிலும், இலங்கை போன்ற நாடுகளில் இன்னும்
முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
சித்திரவதைகளை நிறுத்து என்ற கருப்பொருளில் மனித உரிமை கண்காணிப்பகம், நூதன உலகில் சித்திரவதைகளை ஒழிப்பது தொடர்பில் உலகம் முழுவதும் நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்திருந்தது.
எனினும் உலக நாடுகள் இதனை செயற்பாட்டு ரீதியாக அமுல்படுத்த தவறியுள்ளன எனவும் மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
சித்திரவதை ஒழிப்பு என்ற விடயத்தில் உலக நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதாக மன்னிப்புச் சபையின் செயலாளர் சலீல் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
சட்ட ரீதியாக சித்திரவதைகளை தடை செய்யவும் செயற்பாட்டு ரீதியான அவற்றை அமுல்படுத்தவும் நாடுகள் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை.
சித்திரவதைகள் தொடர்பில் இலங்கையும் பிரசித்தி பெற்றுள்ளதாகவும் 2012 ஆம் ஆண்டு பொலிஸ் தடுப்பில் இருந்த குறைந்து 5 பேராவது கொல்லப்பட்டுள்ளனர் எனவும் மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
அதுபோல் 2013 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சித்திரவதைகள் தொடர்பில் 86 முறைப்பாடுகள் கிடைத்தன எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ad

ad