புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2014

மோடி விசா விவகாரம்: அமெரிக்கா விளக்கம்
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மூண்ட இனக்கல வரங்களை முதல்வர் நரேந்திர மோடி கட்டுப்படுத்த தவறி விட்டார்,
இது மனித உரிமை மீறல் என கூறி அமெரிக்கா அவருக்கான விசாவை 2005-ம் ஆண்டு ரத்து செய்தது. 

இந்த நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜென் பசாகி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், இந்தியாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என கூறியுள்ளனவே, மோடிக்கு விசா வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஜென் பசாகி, நாடுகளின் தலைவர்கள், அரசு தலைவர்கள் ஏ-1விசா பெறுவதற்கு குடியுரிமை மற்றும் தேசியத்துவ சட்டத்தின்படி தகுதி படைத்தவர்கள். (ஏ1 விசா, ராஜ்ய ரீதியில் வழங்கப்படுவதாகும்.) எந்த ஒரு தனி நபரும் தாமாகவே அமெரிக்க விசாவுக்கு தகுதி பெற்று விட முடியாது’’என பதில் அளித்தார்.
மோடியின் விசா குறித்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிப்பதை அவர் தவிர்த்து விட்டார்.

ad

ad