புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2014


காங்கிரஸ் படுதோல்விக்கு ஊழல்தான் காரணம் : மன்மோகன் சிங்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து உள்ளது. அக்கட்சிக்கு 50–க்கும் குறைவான இடங்களே கிடைத்தன.


சவாலான போட்டியை காங்கிரஸ் கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை எப்போதும் பெற்றி டாத தோல்வியை கண்டிருப்பது அக்கட்சியின் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தேர்தல் முடிவுகளில் காங்கிரசுக்கு சிறிது கூட சாதகமான இல்லை. தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக சோனியாவும், ராகுல் காந்தியும் கூறினார்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பதவி விலக விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அதை காரிய கமிட்டி நிராகரித்தது.  காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது "எனது ஆட்சியின் போதாமைகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்" என்று மன்மோகன் சிங் தெரிவித்தார் என்று  காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்தன் திவேதி தெரிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி படுதோல்வியடைந்ததற்கு விலைவாசி உயர்வும், ஊழலும் காரணம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார் என்று ஜனார்தன் திவேதி தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வு, மற்றும் ஊழல் குறித்து மக்களிடம் நாம் சரியான முறையில் உரையாடவில்லை. இதனால்தான் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவை பாராட்டியுள்ள மன்மோகன் சிங், சோனியா மற்றும் ராகுல் காந்தி இருவரும் செய்த பங்களிப்புகள், முயற்சிகள் மற்றும் அளித்த ஆதரவு அசாதாரணமானது என்று கூறியுள்ளார்.

ad

ad