-

20 மே, 2014


இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் தமிழ்நாட்டு அரசுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை அமைக்கவுள்ள நிலையில், தமிழக அரசாங்தின் ஆதரவு தேவை இல்லை என்ற நிலை காணப்படுகிறது.
ஆனாலும் இலங்கை தமிழர் விடயம் என்பது, தமிழ் நாட்டு அரசியலிலும், மக்கள் மத்தியிலும் முக்கியத்துவம் பெற்ற விடயமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக அரசாங்கத்தின் ஊடாகவே இலங்கை விவகாரத்தை கையாளும் வகையிலான வெளிவிவகார கொள்கை ஒன்றை பாரதீய ஜனதா கட்சி உருவாக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ad

ad