புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2014


பிரதமராக தேர்வு: நன்றி உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்டு அழுத மோடி
 தம்மை பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்ட அழுதார் மோடி. அவர் தனது உரையில் மக்களுக்கான பிரச்னைகளுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும், பதவிக்கு அல்ல என்று   கூறினார்.


நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க நாடாளுமன்ற குழு கூட்டத்தி்ல்,  பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பேசிய மோடி, நாடாளுமன்ற குழு தலைவராக தன்னை தேர்வு செய்த கட்சிக்கும், அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங்கிற்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றம் என்பது கோயில் போன்று புதினமானது என்று கூறிய மோடி, மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக பாடுபட வேண்டும் என்றும், மக்கள் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மக்களுக்கான பிரச்னைகளுக்குதான் முக்கியத்துவம் தர வேண்டும், பதவிக்கு  அல்ல என்று தெரிவித்த அவர், வாழ்நாள் முழுவதும் பாஜக தொண்டராகவே செயல்படுவேன் என்றார்.

ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலனுக்காக பாஜக அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும், ஏழைகளின் விருப்பதைவும், நாட்டு மக்களின் கனவையும் பாஜக அரசு நிறைவேற்றும் என்றும் மோடி கூறினார்.

உலக நாடுகளிடையே இந்தியாவின் ஜனநாயகம் பிரமிப்பை தருகிறது என்று கூறிய மோடி, நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன் என்றார்.

உணர்ச்சிவசப்பட்டு அழுத மோடி
தமது உரையின் இடையே மோடி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவருக்கு அழுகை வந்தது. இருப்பினும் தம்மை தேற்றிக்கொண்டு அவர் தொடர்ந்து உரையாற்றினார். அப்போது ஓரிரு நிமிடங்களுக்கு அவரது குரல் விம்மலுடன் வெளிப்பட்டது.
வாஜ்பாயை நினைவு கூர்ந்தார்
மோடி தனது உரையின் இடையே முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நினைவு கூர்ந்ததோடு, அவர் இங்கே இருந்திருக்க வேண்டும் என்றார். 

ad

ad