புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2014


காணாமல் போன மலேசிய விமானம் அமெரிக்க இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? பரபரப்பு தகவல்
 காணாமல் போன மலேசிய விமானம் அமெரிக்க இராணுவ பயிற்சியின் போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளதால் சர்வதேச ரீதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி ஐந்து இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது.
மாயமான அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், விபத்துக்கான காரணமோ அல்லது விபத்தில் சிக்கிய விமானத்தின் பாகங்களோ இதுவரை சிக்கவில்லை.
இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொருங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில், ‘புளுபின்-21' என்ற நீர்மூழ்கி ‘ரோபோ'வை கொண்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால், அதிலும் பலன் இல்லை.
மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் காணமல் போன மலேசிய விமானம் அமெரிக்க இராணுவ பயிற்சியின் போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ad

ad