புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2014





று மாதங்களுக்குள் அகோரமாக மனித இழப்பைச் சந்தித்து இருக்கிறது, மலேசிய விமானம்! 

கடந்த மார்ச்சில் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்குக்கு 239 பேர் பயணித்த எம்.எச்.370 வகை மலேசிய விமானம் மாயமாகி, அதன் சோகம் மறையவில்லை; அதற்குள் இன்னொரு துயரமாக, நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்ற மலேசிய எம்.எச்.17 விமானம், உக்ரைன் நாட்டு வான் பகுதியில் ஏவுகணையால் தாக்கப்பட்டு, முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. அதில் பயணித்த 298 பேரும் படுகோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே, அந்தப் பகுதி வழியாக விமானப் போக்குவரத்தைத் தவிர்ப்பது என பிரிட்டன் முதலிய சில நாடுகள் முடிவுசெய்திருந்தன. உக்ரைன் வழியாக பாதுகாப்பான விமானப் போக்குவரத்துக்கு உறுதியில்லை என முடிவுசெய்யும் அளவுக்கு, அந்த நாட்டில் உள் நாட்டுப் போர் மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. 

தாக்கப்பட்ட விமானம் விழுந்த இடம், ரசிய எல்லையை ஒட்டிய கிராபோவோ என்ற கிராமம். இது, கிழக்கு உக்ரைனில் செயல்படும் ரசிய ஆதரவுப் போராளி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்த தாக்குதல் என்பதால், அவர்கள்தான் இதைச் செய்திருக்கிறார்கள் என உறுதியாகக் குற்றம்சாட்டுகிறது, உக்ரைன் அரசு. "இது அப்பட்டமான பயங்கரவாதச் செயல்' எனச் சாடுகிறார், உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொசென்கோ. 


கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ஆயுத உதவியும் செய்து, ஆதரவு தருவதாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரசியா மீது குற்றம்சாட்டுகின்றன. தொடர்ந்து, அமெரிக்க அரசுச் செயலாளர் ஜான்கெர்ரி, "இது குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும்' என அறிக்கை விட்டுள்ளார். 


ஆனால், ’’"இந்த சம்பவத்தோடு ரசியாவுக்கும் தொடர்பு உண்டு எனக் கூறப்படும் எந்தக் குற்றச்சாட்டும் முட்டாள்தனமானது' என ரொம்பவும் சூடாக பதிலளித்துள்ளார், ரசிய அதிபர் புத்தினின் செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ். புத்தினோ, "எந்த நாட்டின் வான்பரப்பில் சம்பவம் நிகழ்ந்ததோ, அந்த அரசாங்கம்தான் முழுப் பொறுப்பும் ஏற்கவேண்டும்' என்று பின்னர் கூறினார். ஆனால், கிழக்கு உக்ரைன் போராளிகள் இயக்கத்துக்கு ஆதர வளிப்பதைப் பற்றி ரசியத் தரப்பிலிருந்து உறுதியான மறுப்பு ஏதும் தெரிவிக்கப்படவே இல்லை. 

"நாசமாக்கப்பட்ட அந்த மலேசிய விமானமானது, தடைசெய்யப்பட்ட அளவு(ஆயிரம் அடி)க்கு மேலேதான் பறந்துகொண்டு இருந்திருக்கிறது' என்கிறார்கள், ஐரோப்பிய விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள். 

எந்த இடத்திலிருந்து விமானத்தின் மீது ஏவுகணை ஏவப்பட்டது என்பதைக் கண்டறிய, அமெரிக்க உளவு நிறுவனங்கள் முழுமூச்சாக இறக்கிவிடப் பட்டுள்ளன. என்ன விசாரணை செய்து என்ன பயன்? 

கொல்லப்பட்டவர்கள் உக்ரைனுக்கோ ரசியாவுக்கோ எதிராக ராணுவ ரீதியாகப் போராடியவர்களா என்ன? அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு உலக ஒழுங்குப்படி பறந்துசெல்லும் ஒரு பயணியர் விமானத்தில், பயணம் செய்தது அவர்கள் குற்றமா? என மனசாட்சியுள்ள அனைவரிடமும் எழும்பும் கேள்விகளுக்கு விடை இல்லை. 

ஏற்கனவே, உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கிரிமீயா பகுதியில், இதேபோல ரசிய ஆதரவுப் போராளிகள், உக்ரைன் அரசுக்கு எதிராகக் கலகம் செய்தனர். 54 சதவீதம் ரசியர்களைக் கொண்ட கிரிமீயா பகுதியில் மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்திய போராளிகள், முறைப்படி ரசியாவுடன் அந்தப் பிரதேசத்தை இணைத்தனர். அதற்கு முன்னதாக, உக்ரைனிலிருந்து தனியாகப் பிரிந்து கிரிமீயா தனி நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டது. 

தெற்கு உக்ரைனில் இருந்த கிரிமீயாவை அடுத்து, கிழக்கு உக்ரைனின் டானியெஸ்க், லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளிலும், ரசிய ஆதரவுப் போராளிகள் தனிநாடாக அறிவித்தனர்; அதற்கு ’டானி யெஸ்க், லுகான்ஸ்க் மக்கள் குடியரசுகள்’ எனப் புதிதாகப் பெயரையும் சூட்டிக்கொண்டனர். தொடர்ந்து உக்ரைன் அரசுக்கு எதிராகப் போர் நடத்திவருகிறார்கள். 

இப்படியான ரசிய ஆதரவு நடவடிக்கைகளுக்கு மூலகாரணம், உக்ரைனில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தொடர்ச்சியான தலையீடுதான்!

உக்ரைனில் -குறிப்பாக கிரிமீயாவின் பெட்ரோலிய வளம்தான், அந்த நாடுகளின் ஆர்வத்துக்கு முக்கிய காரணம். ரசியாவுக்கும் இந்த பெட்ரோலியப் ’பாசம்’ இல்லாமல் இல்லை. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனின் வளத்தைக் கொள்ளையடிப்பதிலும் அதைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் எல்லாவகையான காரியங்களிலும் ஈடுபட்டது. 

ஆனால், உக்ரைனின் பெட்ரோலிய வளத்தை அனுபவிக்கத் துடித்த அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரசியாவின் கனவுகளுக்குத் தடையாக நின்றன. உக்ரைனில் ரசியாவுக்கு எதிரான சக்திகளைத் தூண்டிவிட்டு, கடந்த ஆண்டின் கடைசியிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனைச் சேர்க்க முயன்றன. அப்படி சேர்ந்தால், உக்ரைன் மீதான ரசியாவின் பிடி தளர்ந்துவிடும் என்பது மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் நேட்டோ கூட்டுப் படை ராணுவமும் உக்ரைன் கடல் பகுதியில் நிறுத்தப்படலாம் என்பதுதான் ரசியாவுக்கு முக்கியப் பிரச்சினை. 

அதாவது, உக்ரைனின் தெற்குப் பகுதியான கிரிமீயாவானது, ஐரோப்பிய- ஆசியப் பகுதிகளை இணைக்கும் கரீபியன் கடல் பகுதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியும்கூட. மூன்று பக்கம் கடலும் ஒரு பக்கம் நிலப்பகுதியும் சூழ இருக்கும் கிரீமியா தன் கட்டுப்பாட்டை விட்டுப் போய்விட்டால், பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடும். அந்தப் பிரதேசத்தில் உள்ள ரசியாவின் பெட்ரோலிய நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கவேண்டும் என்றால், உக்ரைன் பகுதியில் ரசியாவின் ராணுவ ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியாக வேண்டும் என்பதுதான் இந்தப் பிரச்சினையின் பின்னால் இருக்கும் விவகாரம். 

இலங்கை இனப்பிரச்சினை உள்பட பல உலக விவகாரங்களில், நீதியைக் காக்க வந்த அவதாரங்களைப் போல, ரசியாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பு கொடுத்துவந்த நிலையில், உக்ரைன் விவகாரத்தில் வேடங்களைக் களைந்து இரு தரப்புமே நிர்வாணமாக தங்களின் ஆதிக்கத்துக்காக சமர்க்களத்தில் இறங்கின. 

உக்ரைனைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் ஆதிக்கம் தற்காலிகமாக ரசியாவால் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் அமெரிக்கா வின் இராணுவ வல்லமை, இன்னும் அப்பாவி மக்களை அன்றாடம் காவுவாங்கிக்கொண்டே இருக்கிறது. 

பாலஸ்தீனத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் மூன்று இசுரேலியர்கள் தாக்கப்பட அதுவே அமெரிக்காவின் கைப்பாவையான இஸ்ரேல் அரசுக்கு ஒரு சாக்காகிப் போனது. பாலஸ்தீன நாட்டின் மேற்குக் கரை, காசா பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் கடுமையாகத் தாக்குதலைத் தொடங்கியது. 8ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களையும் விட்டுவைக்க வில்லை. 10ஆம் தேதி நிலவரப்படி, 13 குழந்தைகள் உள்பட 90 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டனர். 500 பேர் காயம் அடைந்தனர். ஈவு இரக்கமே இல்லாமல் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. பதிலுக்கு பாலஸ்தீனத் தரப்பிலிருந்தும் ஹமாஸ் இயக்கத்தினர் இடைமறித்துத் தாக்கும் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்திவருகிறார்கள். 

இது பற்றி அமெரிக்க அறிஞரான நோம் சாம்ஸ்கி, ""நவீன ஜெட் போர் விமா னங்களையும் கடற்படைக் கலங்களைக் கொண்டும் தாக்குதல் நடத்துகிறது, இஸ்ரேல். அப்பாவி அகதி முகாம்கள், பள்ளிக்கூடங்கள், அடுக்கடுக்காக மக்கள் வசிக்கும் வீடுகள், மசூதிகள், சேரிப் பகுதிகள் ஆகியவற்றின் மீதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது. தாக்கப்படும் மக்களிடம் எந்தவித ஆயுதமோ ஏவுகணையோ இயந்திரக் கருவியோ விமா னப் படையோ தரைப் படையோ கடற்படையோ தளபதிகளோ இல்லை; ஆனால் அவர்கள் மீதான தாக்குதலை போர் என்று (இஸ்ரேல்) இவர்கள் சொல்கிறார்கள்''’ எனக் குறிப் பிடுவது, பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்பதை யதார்த்தமாக எடுத்துக்காட்டுவ தாகும். இதே காலட்டத்தில், ஈராக்- சிரியாவில் புதிதாகத் தோன்றியுள்ள ஐஎஸ்ஐஎஸ் எனும் தீவிரவாத இயக்கத்துக்கும் அமெரிக்கா மறைமுகமாக பின்னால் நிற்கிறது எனக் கூறப்படுகிறது. 

ஈராக்கில் சதாம் உசேனுக்கு எதிராகக் களமிறக்கிவிடப்பட்ட இந்த இயக்கமானது, ஈராக்-சிரியா நாடுகளின் கணிசமான பகுதிகளை இணைத்து, இசுலாமிய நாடு ஒன்றையும் அறிவித்துள்ளது, ஆச்சர்யத்தை உண்டுபண்ணியுள்ளது.  அமெரிக்காவுக்கு எதிராக உலகின் எந்த மூலையிலும் தீவிரவாதமோ பயங்கரவாதமோ உருவாகிவிட முடியாத நிலையில், இந்த ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் அபரிமிதமான வளர்ச்சி சாதாரணமானது அல்ல. 

சன்னி பிரிவு முசுலிம்கள் அமைப் பாகக் கூறப்படும் இந்த அமைப்பு, ஈராக்கிலும் சிரியாவிலும் சியா பிரிவு முசுலிம்களை கண்மண் தெரியாமல் வெற்றுத்தரையில் படுக்கவைத்து கூட்டாக சுட்டுக்கொல்லும் காட்சி உலகத்தை உறையவைக்கிறது. 

சிரியாவின் எண்ணெய் வளம் மிக்க டயர் அல்சோர் மாகாணத்தை முழுவதுமாக கைப்பற்றிவிட்டதாக ஐஎஸ்ஐஎஸ் அறிவித் துள்ளது.

ஈராக், சிரியா பகுதியின் போர் நிலைமை காரணமாக, உலகப் பெட்ரோலியப் பொருள் சந்தையில் விலை அதிகரித்தப்படி இருக்கிறது. இதனால், சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கொள்ளை இலாபம் கிடைக்கிறது

ad

ad