புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2014




பொதுவாகவே எளிதில் உணர்ச்சிவசப்படுவார் "‘நாம் தமிழர்'’சீமான். இந்த இயல்புதான் அடிதடி, வழக்கு, கைது என அவரை அல்லோலகல்லோலப்படுத்திவிட்டது. ‘இது தேவையா? அட போங்கய்யா..’ என்று நொந்து  சிரிக்கும் அளவுக்கு சீமான் கைது விஷயத்தில் காமெடி காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. 

"ஒரு தமிழன்தான் தமிழகத்தை ஆளணும்...'’17-ஆம் தேதி காரைக்குடி பொதுக்கூட்டத்தில் இப்படி பேசிவிட்டு அன்றிரவு மதுரை திரும்பிக்கொண்டிருந்தார் சீமான். மேலூரை அடுத்துள்ள நரசிங்கம்பட்டி டோல்கேட்டில் சீமானிடம் "உங்க காருக்கு கட்டணம் செலுத்த வேண்டும்...'’என்று அங்கிருந்த டோல்கேட் ஊழியர் அமித்குமார் பணம் கேட்க,  பின்னால் இன்னொரு காரில் வந்த அவரது கட்சியினர் ஆவேசத்தோடு இறங்கியிருக்கின்றனர். "தலைவர் சீமான் டிக்கட்டெல்லாம் எடுக்க வேண்டியது இல்லை'’என்று வேகம் காட்டியிருக்கின்றனர். அவர்கள் தமிழில் பேசியதை அமித்குமாரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால், சக ஊழியர்களான பிரகாஷும், ரவியும் சீமானிடம் "நல்லா கேட்டுக்கங்க... எம்.பி., எம்.எல்.ஏ., கலெக்டர், ஜட்ஜ் போன்ற குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. மற்ற யாராக இருந்தாலும் டிக்கெட் எடுத்தே ஆக வேண்டும்'’என்று நடைமுறையை விளக்கியிருக்கின்றனர். உடனே சீமானும் ரூ.70-ஐ கட்டணமாக கொடுத்து விட்டு கிளம்பியிருக்கிறார். 

சீமான் காருக்கு பின்னால் வந்த கட்சியினர் இருவர் "எந்தலைவன்கிட்டயே ரூல்ஸ் பேசுறியா? பணமும் வாங்கிட்டியா?'’என்று  டோல்கேட் ஊழியர்கள் பிரகாஷையும் ரவியையும் அடித்திருக்கின்றனர். பதிலுக்கு  பிரகாஷும் ரவியும் டோல்கேட் ஊழியர்கள் சிலரும் சேர்ந்து கொண்டு கட்சிக்காரர்கள் இருவரையும் தாக்கியிருக்கின்றனர். அடி தாங்கமாட்டாமல் கட்சியினர் அலறித் துடிக்க.. இந்தத் தகவல் சீமான் காருக்குப் போகிறது. உடனே, சீமானும் அவரது நண்பர் வெற்றிமாறனும் காரை நிறுத்தி விட்டு இறங்கியிருக்கின்றனர்.  அங்கு கிடந்த பிளாஸ்டிக் சேரை கையில் எடுத்துக் கொண்டு சீறிப் பாய்ந்து டோல்கேட் ஊழியர்களை தாக்கி யிருக்கின்றனர். இரு தரப்பும் இப்படி கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்ட போது,  சீமானுக்கு கை மற்றும் கழுத்துப் பகுதியில் அடி விழுந் திருக்கிறது. மேலூர் காவல்நிலைய போலீஸார் ஸ்பாட்டுக்கு வந்து விடு கின்றனர். இரு தரப்பிலும் போலீ சார் விசாரித்துக் கொண்டிருந்த போதே, காரைக் கிளப்பிக் கொண்டு மதுரையில் உள்ள மாஜி சபாநாயகர் காளிமுத்துவின் ரோகிணி இல்லத் துக்கு வந்துவிட்ட சீமான், தனது மேலூர் நண்பரான ஜெகன் என்ற அ.தி.மு.க. பிரமுகரை சமாதானம் பேசச் சொல்லியிருக்கிறார்.  

"நீ ஒரு புகார் எழுதிக் கொடுப்பா, நாங்க பார்த்துக் கிறோம்'’டோல்கேட் ஊழியர் அமித்குமாரை காக்கிகள்  வற் புறுத்த... "எனக்கு புகார் எழுத தெரியாது'’என்றிருக்கிறார் அவர். உடனே காக்கிகளே புகார் எழுதி அதில் கையெழுத்து போடச் சொல்லியிருக்கின்றனர். அதை வாசித்துப் பார்த்த ஜெகன், போலீசா ரிடம் “"என்ன சார் நீங்க? நாங்க சமரசம் ஆகிட்டோம். நீங்க என்ன டான்னா ஊழியர்களை சீமான் அடிச்சாரு'ன்னு எழுதியிருக்கீங்க. உங்களுக்கு என்ன சார் ஆச்சு?'’என்று கேட்டிருக்கிறார். "எல்லாத்தையும் நாளைக்கு பேசிக்கலாம்'’எனச் சொல்லிவிட்டு காக்கிகள் கிளம்பி யிருக்கின்றனர்.  டோல்கேட்டில் இருந்த சி.சி.டி.வி.  நள்ளிரவில் நடந்த மோதலை பதிவு செய்திருந் தது. இதைப் பார்த்த மேலதிகாரி கள்... "தாமதிக்காமல் எஃப்.ஐ.ஆர். போடுங்க. உடனே சீமானை அரெஸ்ட் பண்ணுங்க' என்று உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர். 

மதுரையிலிருந்து சீமான் சென்னை சென்றுவிட்டதை அறிந்த காக்கிகள் 18-ஆம் தேதி இரவே கிளம்பினார்கள்.  

சென்னையில் கைதான சீமான், மேலூர் காவல்நிலை யத்தில் உட்கார வைக்கப்பட்டார். அங்கு அவரது அங்க அடை யாளங்களை குறித்துக் கொண்ட காக்கிகள் கையெழுத்தினையும் பெற்றனர். கோர்ட்டுக்கு கிளம்பும் நேரத்தில் அவசர அவசரமாக எஃப்.ஐ.ஆரில் ஜாமீனில் வெளிவர முடியாத உஉடக (பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல்) சட்டப் பிரிவை சேர்த் திருக்கின்றனர். மேலூர் மேஜிஸ்ட்ரேட் விடுமுறையில் இருந்ததால், மேலூரிலிருந்து போலீஸ் வேனில் சீமானை ஏற்றிக்கொண்டு  மதுரை ஜே.எம்.2 கோர்ட்டுக்குச் சென்று நீதிபதி பால்பாண்டியன் முன் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதியிடம் சீமான் "அடி வாங்கியது நானும் என் தம்பிகளும். இதோ பாருங்கள் காயத்தை...'’என்று சட்டையைக் கழற்றி காண்பித்தார். சீமான் சார்பாக மதுரை வழக்கறிஞர்கள், புகார்தாரரான டோல்கேட் ஊழியர் அமித்குமாரை ஆஜர்படுத்தினர். அவரோ "நான் சீமான் மீது புகாரே தரவில்லை. சமரசம் என்ற பெயரில் என்னிடம் வெற்று பேப்பரில் போலீஸார் கையெழுத்து வாங்கினார்கள். சீமான் மீது நான் புகார்தர விரும்பவில்லை'’என்றார். மேஜிஸ்ட்ரேட் பால் பாண்டியன் ""புகார்தாரர் அமித்குமார் இவர் தானா?'’என்று போலீ ஸாரிடம் கேட்க... அவர்களோ அசடு வழிந்த படி“"டோல்கேட்டை அடித்து நொறுக்கிவிட்டு வந்திருக்கிறார்கள். அதனால் சீமானை ஜாமீனில் விடக்கூடாது'’என்று கோரினர். மேஜிஸ்ட்ரேட்டோ “"இந்த வழக்கில் முகாந்திரம் இல்லாத காரணத்தால் சீமானை ஜாமீனில் விடுகிறேன்'’என்றார். காக்கிகளின் முகமோ வாடிப்போயின. 

ஜாமீனில் வெளிவந்த சீமான் நம்மிடம் ""என்னை கைது செய்ததற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கலாம். "தமிழன், தமிழகத்தை ஆளணும்'னு காரைக்குடியில் மட்டுமல்ல... இனி எங்கும் பேசுவேன். இது பொய் வழக்குன்னு நீதியரசரே சொல்லிட்டாரு.  2016-ல் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். அ.தி.மு.க.வையும் எதிர்ப்போம். 2021-ல் ஆட்சியை பிடிப்போம்''’என்று சீரியஸாகப் பேசினார். 

தமிழ்நாட்டில் ஆட்சி பீடத்தில் யார் இருக்க வேண்டும்? என்று ரகசியமாக பேசினாலும் சரி... பகிரங்கமாக பேசினாலும் சரி... அப்படி பேசியவர்களை ஆட்சி மேலிட உத்தரவுக்கு பணிந்து, அவசரகதியில் கைது செய்து விடுகின்றனர். இந்த வரிசையில் நேற்று நடராஜன்... இன்று சீமான்! 

ad

ad