புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2014




""ஹலோ தலைவரே.. … சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிகழ்ச்சிகளைப் பார்க்குறீங்களா?''

""சட்டமன்றத்தின் சிறப்பே எதிர்க்கட்சிகளோட சூடான கேள்விகளும் அதற்கு ஆளுங் கட்சி சொல்ற பதில்களும்தான். ஆனா பெரும்பாலான நாட்கள் வெளிநடப்பு அல்லது வெளி யேற்றும் படலமாகவே அவை நடவடிக்கைகள் இருக்குதே... பேசும் வாய்ப்புகளே குறைவா இருக்குதே...!''

""சட்டமன்றக் கூட்டத்திலே கலந்துக்கிற அ.தி.மு.க மந்திரிகளும் எம்.எல்.ஏக் களும்கூட அப்படித்தான் சொல்றாங்க தலைவரே.... 110விதியின் கீழ் அறிக்கை படிக்கும் நேரங்களில் அவைக்கு வரும் ஜெ., அந்த அறிக்கையை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆஹா…ஓஹோன்னு பாராட் டிப் பேசுவதை மட்டும் கேட்டுவிட்டு கிளம்பிடுறாரு. சில நேரங்களில் அதைக்கூட கேட்காமல் கிளம்புறதும் உண்டு. கூட்டணிக் கட்சியினரே நம்மைத் தாண்டி ஸ்கோர் பண்ணுறாங்களேன்னு அ.தி.மு.க எம்.எல்.ஏ.க் களும் மந்திரிகளும் ஜெ.வை வானளாவ புகழ்ந்து பேசுமளவுக்கு செமத்தியா ஹோம் ஒர்க் பண்ணிட்டு வர்றாங்க. சில பேர் இதற்காக ஸ்பெஷல் ஆட்களைப் போட்டு ரெடி பண்ணுறாங்க. ஆனா, அவங்க பேசுறதுக்கு முன்னாடி ஜெ. கிளம்பிடுறதால ரொம்ப அப்செட்.''

""தலைமையின் கவனத்தைக் கவரும்படி பேசினால் இப்ப இருக்கிற இடத்திலிருந்து மேலும் உயரலாம்னு சிலரும், இருப்பதை யாவது காப்பாத்திக்குவோம்னு சிலரும் பாடுபடுறாங்க. அவங்க விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஜெ.வும் சபையில் கூடுதல் நேரம் ஒதுக்கலாமே?''

""சபையில் இருக்கிற நேரம் குறைவாக இருந்தாலும் ஜெயா டி.வியில் சட்டமன்ற நிகழ்ச்சிகளை முழுமையாக ஜெ. பார்த்துவிடுவதோடு, கேமரா ஆங்கிளை எப்படி வைக் கணும், தனக்குப் பின்னாடி யார் யார் எந்தெந்த வரிசைப்படி உட்காரணும்ங்கிறதையெல்லாம் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத் திருக்கிறாராம். ஜெ.தான் கேமரா கோணத்தில் நடுநாயகமானவர். அப்புறம் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, மோகன், வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜூ, காமராஜ், தங்கமணி அப்படின்னு அமைச்சர்களின் வரிசை அமைஞ்சிருக்குது. 24வது இடத்தில் இருந்த செந்தில்பாலாஜி இப்ப அமைச்சரவையில் 13வது இடத்துக்கு வந்துட்டாரு.''

""போக்குவரத்து அமைச்சராச்சே.. எக்ஸ்பிரஸ் ஸ்பீடில் முன்னேறுறாரு!''

""சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 32வது இடத்திலே இருக்காரு. இன்னொரு ஜூனியர் அமைச்சரான உதயகுமாரும் விஜயபாஸ்கரும்தான் எம்.பி. தேர்தலில் சிவகங்கை தொகுதி அ.தி.மு.க பொறுப்பாளரா இருந்தவங்க. செலவுக்குத் தேவையான பணம் தன்வசமில்லைன்னு ஓ.பி.எஸ்கிட்டே சொன்ன உதயகுமார், விளையாட்டுத்துறை மட்டும் இருப்பதால் தனக்கு இன்னும் நல்ல துறையை அம்மாகிட்டே சொல்லி வாங்கிக்கொடுங்கன்னு கேட்டிருக்காரு. ஓ.பி.எஸ் டென்ஷனாகி, அப்படியெல்லாம் அவங்ககிட்டே கேட்க முடியாது. பொறுப்பாளரால தொகுதி செலவுகளைக் கவனிக்க முடிய லைன்னு தெரிஞ்சா கோபமாயிடுவாங்க. பதவி போயிடும்னு சொல்லியிருக்காரு. அதனால உதயகுமார் சக பொறுப்பாளரான விஜயபாஸ்கர்கிட்டே உதவி கேட்டதோடு, ஜெ.வுக்கு இது சம்பந்தமா கடிதம் எழுதி, விஜயபாஸ்கர்கிட்டே நிதி வாங்குவதைப் பற்றித் தெரிவிச்சிருக்காரு. தேர்தல் முடிவுகள் வெளியானபிறகு நடந்த அமைச்சரவை மாற்றத்தில், தேர்தல் செலவுக்கேற்ற வருமானம் இல்லைன்னு கடிதம் எழுதிய உதயகுமாருக்கு வருவாய்த்துறையை ஒதுக்கி அமைச்சரவையில் 24வது இடத்தைக்கொடுத்துட்டாரு ஜெ. அவருக்கு உதவி செஞ்ச விஜயபாஸ்கருக்கு 32வது இடம்.''

""ராட்டினம் மேலே போறதும் கீழே வருவதும் சகஜம்தானே!''

""அதுதான் மந்திரிகளோட நம்பிக்கையும். சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் எப்படியும் அமைச்சரவை மாற்றம் இருக்கும்ங்கிற எதிர்பார்ப்பு பலமா நிலவுது. அதனால இந்தக் கூட்டத் தொடரின் கடைசி இரண்டு நாளில் தங்களோட துறை தொடர்பான மானியக் கோரிக்கையின் மீது பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தால், ஜெ.வை வானளாவப் புகழ்ந்து அவர் கவனத்தைக் கவர்ந்து, அமைச்சரவை மாற்றத்தில் நல்ல துறையை வாங்கிடலாம்னு கணக்குப்போட்டு விஜயபாஸ்கர், உதயகுமார் இரண்டுபேருமே சபாநாயகர்கிட்டே அதற்கேற்ப அனுமதி வாங்கிட்டாங்களாம். ஜூனியர்களின் சாமர்த்தியத்தைப் பார்த்து சீனியர் மந்திரிகளே ஆச்சரியப்படுறாங்க.''

""அ.தி.மு.க.வில் அப்படி.. தி.மு.க.வில் சீனியர்களை அசைக் கவே முடியாது போலிருக்கேன்னு கட்சியில் உள்ள ஜூனியர்கள் யோசிக்குறாங்களாமே? நடவடிக்கை எடுக்கப்பட்ட 33 பேரில்  7 பேர் மீதான நடவடிக்கை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது. இப்ப மற்றவங்க மேலான நட வடிக்கைகளும் ரத்தாகிக்கொண் டிருக்குதே, 33 பேரில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மட்டும்தான் நிரந்தரமா நீக்கப் பட்டிருக்காரு.''

""நாமதான் இதுபற்றி அடிக்கடி பேசியிருக்கிறோமே.. .. நடவடிக்கைக்குள்ளானவர்கள் தங்களோட செயலுக்கு வருத்தம் தெரிவிச்சி கடிதம் எழுதி, இனி ஒழுங்காக இருப்பதா உத்தர வாதம் தந்தால் கட்சியில் சேர்த் துக்கலாம்னு கலைஞர் நினைக்கி றாருன்னு சொல்லியிருக்கோம். இப்ப கலைஞரும் அதையேதான் சொல்லியிருக்காரு. புகார்கள் வந்தவைகளில் ஒருசில உண்மை யாகக் கூட இருக்கலாம். அந்த ஒருசிலர், நான் மட்டுமா தவறு செய்தேன்; மற்றவர்கள் எல்லாம் தவறே செய்யவில்லையா? அவர்கள் மீது எந்த விதமான நடவடிக் கையும் இல்லை; நாங்கள் மாத்திரம் பலிகடாவா என்று நினைக்கலாம். ஓரிருவர் மீது சொல்லப் பட்ட புகார்களில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்ட நேரத்திலே கூட, என்னையும் மீறி, கடந்த காலத்தில் அவர்கள் கழகத் திற்காக உழைத்த உழைப்பு, பட்டபாடு, அனுபவித்த கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் என் நினைவிலே வரு கின்றனன்னு சொல்லியிருக் காரே!''

""அப்படின்னா இவங்க ளெல்லாம் பழைய பதவிக்கே மறுபடியும் வந் திடுவாங்களா?''

""அப்படி சொல்ல முடியாதுப்பா.. தஞ்சை மா.செவா இருந்து நட வடிக்கை எடுக்கப்பட்ட பழனி மாணிக்கம் மேல கலைஞருக்கே விமர்சனம் உண்டு. அவர் மீதான நடவடிக்கை ரத்தானாலும் பழைய பதவியைக் கொடுக் கலை. செல்வம்ங்கிறவரைப் பொறுப்பாளரா நியமிச் சிருக்காங்க. பழனிமாணிக் கத்தோட நடவடிக்கையால மு.க.ஸ்டாலின் ரொம்ப கோபமா இருந்தாரு. அதுபோல, தஞ்சாவூரில் போட்டியிட்டுத் தோற்றுப் போன டி.ஆர்.பாலுவும் நிறைய புகார்களை தலை மையிடம் சொல்லியிருந் தாரு. தலைமையே கோபமா இருப்பதால, பழனிமாணிக் கம் எப்படியும் எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்குவாருன்னும் அதைக் காரணமா வச்சி அவர் மேல நிரந்தர நடவடிக்கை எடுக்கச் செய்திட லாம்னு ஸ்டாலின் தரப்பில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனா, பழனிமாணிக்கம் அரசியலில் அனுபவஸ்தராச்சே.. தலைமைக்கு எதிரா கோபப்பட்டு எதுவும் பேசலை. விளக்கக் கடிதம் எழுதி நடவடிக்கையை ரத்து பண்ண வச்சிட்டாரு.''

""அப்படியிருந்தும் பழைய பதவி கிடைக்கலையே?''

""பழனிமாணிக்கத்தோட இடத்துக்கு மாவட்டத்தில் மற்றொரு சீனியரான துரை சந்திரசேகர் டி.ஆர்.பி.ராஜா போன்றவங்களும் ட்ரை பண்ணினாங்க. அவங்ககிட்டே அந்தப் பொறுப்பு போகாம செல்வத்துக்கு வந்திருப்பதில் பழனிமாணிக்கத்துக்கு சந்தோஷம்தானாம். கொஞ்ச காலம் போனால் மறுபடியும் மா.செவாகிடலாம்னு நினைக்கிறா ராம். புதிய மா.செக்களை நியமனம் செஞ்சிடலாம்னு கலைஞர் நினைப்பதையும், இப்ப இருக்கிற மா.செ.க்கள் விருப்பப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கலாம்னு ஸ்டாலின் நினைப்பதையும் போனமுறை நாம சொல்லியிருந்தோம். கலைஞரும் கட்சித் தேர்தல் பற்றி சொல்லியிருக்காரே.''…

""நானும் படிச்சேம்ப்பா.. புகாருக்குள்ளானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் வருத்தம் அடையலாம். அவர்களுக்கெல் லாம் ஆறுதலாகத்தான் விரைவில் மாவட்ட, ஒன்றிய, நகரத் தேர்தல்கள் வரவிருக்கின்றன. அந்தத் தேர்தலில் உண்மையி லேயே தவறு செய்தவர்களை, கழகத் தோழர்களே தோற் கடிக்கச் செய்வார்கள். அதையும் மீறி தவறுகள் தொடரு மேயானால், புகார்கள் தொடர்ந்து வருமேயானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்னு கலைஞர் சொல்லி யிருக்காரே!''

""தலைவரே.. ஏற்கனவே கிளைக்கழக அளவில் நடந்து முடிந்துள்ள உள்கட்சித் தேர்தல்களில் இப்போதைய மா.செக்களின் ஆதரவாளர்கள்தான் ஜெயிச்சிருக்காங்க. இனி ஒன்றியம், நகரம், மாவட்ட அளவிலான தேர்தல்கள் நடந்தாலும் இவங்க ஆதரவுதான் அடிப்படை. அதனால தேர்தல் நடந்தா இப்ப இருக்கிற மா.செ.க்கள் அவங்கவங்க மாவட்டத்திலும், புது மாவட்டங்களில் இப்ப இருக்கிற மா.செ.க்கள் சொல்ற ஆட்களும்தான் ஜெயிச்சி பதவிக்கு வருவாங்க. அதனால மா.செக்களெல்லாம் ரொம்ப குஷியா இருக்காங்க. தேர்தல் மூலம்தான் தேர்ந்தெடுக்கணும்னு சொன்ன ஸ்டாலினுக்கு ஜே போடுறாங்க. அதேநேரத்தில், கட்சியில் ரொம்ப காலமா மா.செக்களின் ராஜ்ஜியத்துக்கு எதிரா போராடிக்கிட்டிருக்கவங்களோ, மாவட்ட பிரிப் பால மாற்றங்கள் வரும்னு எதிர்பார்த்து, இப்ப இருக்கிற மா.செக்களை கண்டுக்காம இருந்தோம். மறுபடியும் அவங்க கையேதான் ஓங்கப்போகுதுங்கிறதலா சைலன்ட் ஆயிட்டோம். பழைய மாவட்டத்தில் அதே மா.செக்கு சல்யூட் அடிப்பதோடு, புது மாவட்டத்தில் இந்த மா.செவின் சிபாரிசில் வரும் ஆளுக்கும் சலாம் போடணும்னு சொல்றாங்க.''

""அதிருப்தி குரல்களை தி.மு.க தலைமை எப்படி சமாளிக்கப்போகுதுன்னு பார்க்கலாம். முல்லைவேந் தன் போலவே தி.மு.க ராஜ்யசபா எம்.பி கே.பி.ராம லிங்கமும் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்த்துப் பேசியவர்தான், அவர் மேலே அடுத்த கட்ட நடவடிக்கை எதுவுமில்லையே?''

""முல்லைவேந்தன்போலவே கே.பி.ராமலிங்கத்தையும் நீக்கணும்ங்கிறதுதான் ஸ்டாலினோட நிலை. காந்திசெல்வன், பொன்.முத்துராமலிங்கம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். போன்றவங்களும் ஸ்டாலினை நெருக்குறாங்க. அழகிரியோட வெளிப்படையான ஆதரவாளரான கே.பி.ராமலிங்கத்தோட ராஜ்யசபா பதவிக்காலம் இன்னும் முடியலை. பார்லிமெண்ட்டில் அவர் நல்லா பேசுவதா கலைஞர்கிட்டே கனிமொழி சொன்னாராம். கலைஞரும் ஒரு கணக்கோடுதான் கே.பி.ராமலிங்கம் விஷயத்தில் அவசரப் பட்டு முடிவெடுக்க வேணாம்னு இருந்துட்டாராம். எல்லாவற்றுக்கும் தடாலடி நடவடிக்கைகள் சரியா இருக்காதுங்கிறது அவரோட நிலை. அறிக்கையிலேகூட, கழகம் கண்ணாடிக் குடுவை அல்ல. கண்ணாடி உடைந்தால் ஒட்ட வைக்க முடியாது. கழகம், மாபெரும் நீர்த் தேக்கம்; நீரடித்து நீர் விலகாதுன்னு சொல்லியிருக்காரே!''

""பா.ஜ.க பக்கம் வாப்பா.. தமிழக பா.ஜ.கவுக்கு புதுத் தலைவர் யாருன்னு முடிவாயிடிச்சா?''

""கட்சியோட மேலிடப்பார்வையாளர் முரளிதர்ராவும், தேசிய அளவிலான அமைப்பு பொதுச்செயலாளர் சதீஷும் தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 42 மாவட்ட தலைவர் களையும் மற்ற நிர்வாகிகளையும் சந்திச்சிப் பேசினாங்க. இதில் மாவட்ட தலைவர்களை முரளிதர்ராவ் சந்திச்சாரு. மற்ற நிர்வாகிகளை சதீஷ் சந்திச்சாரு. தனித்தனியா நடந்த இந்த சந்திப்பில், மாநிலத் தலைவரா யாரைத் தேர்ந்தெடுக்கலாம்னு கருத்து கேட்கப்பட்டப்ப பலரும் சிபாரிசு செய்ததில் முதலிடம் பெற்றவர் இப்போதைய மாநில அமைப்பு பொதுச்செயலாளரான மோகன்ராஜூலு. அடுத்ததா சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் மூன்றாவதா தமிழிசை சவுந்திரராஜனுக்கும், நான்காவதா ஹெச்.ராஜாவுக்கும் ஆதரவு கிடைச்சிருக்குது.''

""அப்படின்னா மெஜாரிட்டி முடிவின்படிதான் மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பாங்களா?''

""தலைவரே.. தமிழக பா.ஜ.கவில் ஒரு தலைவர், 8 துணைத் தலைவர்கள், ஒரு பொருளாளர், 1 அமைப்பு பொதுச்செயலாளர் உள்ளிட்ட 4 பொதுச்செயலாளர்கள், 8 செயலாளர்கள்னு 22 மாநில நிர்வாகிகள் பதவி இருக்குது. பா.ஜ.க மேலிடத்தைப் பொறுத்தவரை 35 வருடமா கட்சியில் இருப்பவரும் மாநி லத் துணைத் தலை வர் பொறுப்பில் உள்ளவரும் திரா விடக் கட்சிகளுக்கு கடுமையா பதில் சொல்பவருமான ஹெச்.ராஜாவை மாநிலத் தலைவராக்கினால் தமிழகத் தில் கட்சியை வளர்க்க முடியும்னு நினைக்குது. அதனால ஹெச்.ராஜாவை தலைவராக்கத்தான் அதிக சான்ஸ்.''

""மற்ற பதவிகளுக்கு?''

""போகப் போகத்தான் தெரியும். அமைப்புப் பொதுச்செயலாளர்ங்கிறது பவர்ஃபுல்லான பதவி. தன்னோட 33-வது வயதிலிருந்து கடந்த 13 வருசமா மோகன்ராஜூலு இந்தப் பதவியிலே இருக்காரு. பொன்.ராதாகிருஷ்ணன் தலைவரா இருந்தப்ப அவரும் இவரும் சேர்ந்துதான் மாவட்ட தலைவர்களை நிய மிச்சாங்க. அதனாலதான் மாவட்ட நிர்வாகிகளிடம் இவருக்கு அதிக செல்வாக்கு. ஆனால், தேர்தல் சமயத்தில் கூட்டணிக்கட்சிகளோடு இவரால குழப்பம் உண்டானதால மறுபடியும் அமைப்புப் பொதுச் செயலாளர் பதவி கிடைக்காதுன்னு சொல்லப்படுது. பொதுச்செய லாளரான சரவணப்பெருமாள் உடல்நிலை முடியாமல் இருக்கிற தால அவருக்கும் பதவி இல்லை. வானதிசீனிவாசனை துணைத் தலைவரா நியமிக்கும் எண்ணம் தலைமைக்கு இருக்குதாம். இப்ப இருக்கிற பொதுச்செயலாளர்களின் கருப்பு முருகானந்தம் மட்டும் அதே பதவியில் நீடிப்பார்னு சொல் றாங்க.'' 



""ஜூலை 13-ந் தேதியன்னைக்கு சிங்கப்பூருக்கு மனைவி பிரேமலதாவோடும் மச்சான் சுதீஷோடும் சிங்கப்பூருக்குப் போய் ரஜினியும் கன்னட நடிகர் அம்பரீஷும் சிகிச்சை எடுத்துக்கிட்ட அதே ஆஸ்பிட்டலில்தான் விஜயகாந்த்தும் சிகிச்சை எடுக்கிறார். அவரோட மகன்கள் இரண்டுபேரும் சென்னையில்தான் இருக்காங்க. உடல்நலன் குறித்து அவங்க போன் பண்ணுனப்ப பதில் சொன்ன சுதீஷ், அப்பா நல்லா இருக்காரு. 19ந் தேதி நான் அங்கே வர்றேன். பேசிக்கலாம்னு சொல்லியிருக்காரு. ஆனா, 19-ந் தேதியன்னைக்கு சுதீஷ் வரலை. அதனால குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களும் தொடர்புகொண்டப்பவும் சுதீஷ்தான் பேசியிருக்காரு. ஆஞ்சியோ முடிஞ்சிடிச்சி. பெரியளவில் பிரச்சினை இல்லையாம். சின்னச் சின்ன அடைப்புகள்தான் இருக்குதாம். பைபாஸ் செய்யணு மோன்னு பயந்திருந்தோம். அது தேவையில்லைன்னும் மருந்திலேயே குணப்படுத்திடலாம்னும் டாக்டர்கள் சொல்லிட்டாங்க. சுகர், பிரஷர் இதெல்லாம் இருக்கிற தால மற்ற டெஸ்ட்டுகள் போய்க்கிட்டி ருக்குதுன்னு சொல்லியிருக்காரு. பார்க் கிறதுக்கு வர்றோம்னு சொந்தக்காரங்க சொன்னப்ப, வேண்டாம்னு சுதீஷ் சொல்லிட்டாராம்.''

""கட்சிக்காரங்களும் விஜயகாந்த்தோட உடல்நிலை பற்றி தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்காங்கப்பா!''

""சிங்கப்பூர் போனதிலிருந்து கட்சி நிர்வாகிகள் யார்கிட்டேயும் விஜயகாந்த் பேசலை. அவரை அங்கே பார்த்த முஸ்லிம் நண்பர். நல்லா இருக்காருன்னு இங்கே தகவல் கொடுத்திருக்காரு. அதில் கட்சிக்காரங்களுக்கு சந்தோஷம். விஜயகாந்த்தோட போன் ஷூட்டிங் ஸ்பாட்டில் தொலைஞ்சுபோனதிலிருந்து அவர்கிட்டே போன் இல்லை. டேப் ஆகுதுங்கிறதால போன் பேச்சுகளைத் தவிர்த்திடுறாராம். சீக்கிரமா சென்னைக்குத் திரும்பி, கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்பை மாவட்டவாரியா தொடரப்போறதாகவும், எல்லா நிர்வாகிகளோடும் ஃபோட்டோ எடுக்க ஆர்வமா இருக்கேன்னும் கட்சிக்காரங்களுக்கு தகவல் சொல்லிவிட்டிருக்காரு விஜயகாந்த்.''

""இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்தியமங்கலத்தில் 4 நாட்கள் ஆலோசனை நடந்திருக்குதே..-''

""ஆமாங்க தலைவரே.. மாநில நிர்வாகிகள் குழு, மாநிலக்குழுன்னு பல கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தது. அதற்காக வைக்கப் பட்ட பேனர்களில் இப்போதைய சீனியர் தலைவரான நல்லகண்ணு படமோ, மறைந்த தலைவர்களான கே.டி.கே.தங்கமணி, ப.மாணிக்கம் போன்றவங்க படங்களோ இல்லை. தா.பாண்டியன் படத்துக்குத்தான் முக்கியத்துவமாம். கூட்டத்தில் திருச்சியிலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான தொழிற்சங்க கட்டடத்தை  கட்சி நிர்வாகிகளி டம் ஆலோசிக்காம மாவட்ட நிர்வாகப் பொறுப்பில் இருப்பவரோடு சேர்ந்து குறைந்த விலைக்கு சென்னை பார்ட்டிகிட்டே தா.பா. தன்னிச் சையா விற்ற விவகாரம் லேசுபாசா கிளம்பியிருக்குது. அதில் முறைகேடு எதுவும் நடக்கலைன்னு தீர்மானமே போட்டிருக்குது தா.பா.தரப்பு.'' 

""இதைப் பற்றித் தோழர்கள் யாரும் கேள்வி கேட்கலையா?''

""யாரும் பெரியளவில் எதிர்ப்புக் காட்டலை. ஏன்னு கேட்டா, தா.பா.ங்கிறவர் இப்ப தனி மனிதர் இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர். அவருக்கு எதிராக தீர்மானம் வந்தால் கட்சிக்கு பாதிப்புகள்னு சொல்றாங்க. திருச்சி தொழிற்சங்க கட்டட விவகாரம் பெருசாகலைன்னாலும் சென்னையில் உள்ள கட்சி அலு வலகமான பாலன் இல்லம் தொடர்பா நிறையவே விவாதிச்சிருக்காங்க. 15 கோடி ரூபாய் செலவில் 7 மாடிகளோடு சென்னையில் நம்ம கட்சிக்கு ஒரு கட்டடம்ங்கிறது யாராலும் செய்யமுடியாத சாதனைன்னு பாலன் இல்லம் பற்றி தா.பா. பெருமிதமா சொல்லியிருக்காரு.''

""அது அவரோட விஸ்வரூப வெற்றியாச்சே?''

""தோழர்கள்கிட்டேயிருந்து அது சம்பந்தமா வந்த கேள்விகளும் விஸ்வரூபமாகத்தான் இருந்திருக்குது. சி.பி.எம்முக்கும் சி.பி.ஐக்கும் இந்தியா முழுக்க ஒவ்வொரு ஊரிலும் சொந்தக் கட்டடத்தில் கட்சி அலுவலகம் இருக்குது. அதெல்லாம் அங்குள்ள தோழர்கள் தங்கள் சக்திக்கேற்ப நிதி திரட்டிக் கட்டியது. அதுபோல சென்னையில ஏற்கனவே இருக்கிற அரை ஏக்கர் நிலத்தில் கட்டடம் கட்டுறதுக்காக தோழர்கள் 7 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்திருக்காங்க. ஆனா நீங்க 15 கோடி ரூபாய் பேங்க்குல கடன் வாங்கி கட்டடம் கட்டுனது சாதனையா? ஏன் இவ்வளவு கூடுதலானது? வாங்குன பொருட்கள் என்ன, கூலி எவ்வளவு எல்லாத்துக்கும் கணக்கு கொடுங்கன்னு தோழர்கள் கேட்டிருக்காங்க.''

""சிவப்பு கட்சியில் வெள்ளை அறிக்கையா?''

""சில தகவல்கள் மெதுவாகத்தான் வெளியே வரும். அதுபோல நானும் ஒரு தகவல் சொல்றேன்.. .. சங்கரராமன் கொலை வழக்கில் அப்பீல்னதும் ஆடிப்போன ஜெயேந்திரர் இது பற்றி சுப்ரமணியசாமிகிட்டே பேச, ஜெ. அரசை டிஸ்டர்ப் பண்ண எனக்குத் தெரியும்னு சொன்ன சாமி, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஒரு புகார் அனுப்பினார். விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமா இருந்த சீமான், அங்கிருந்து நிறையபேரை தமிழகத்திற்குக் கொண்டு வந்து தமிழ்த் தீவிரவாதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இவர் ஜெ.வின் ஆதரவாளர்ங்கிறதால தமிழக அரசு சீமானைப் பாது காக்குதுன்னு அதில் சொல்லியிருக்காரு சுப்ரமணியசாமி. இதையடுத்து மத்திய உள் துறையிலிருந்து மாநில உள் துறைக்கு லெட்டர் வர, தமிழ்த் தீவிரவாதிகளும் இங்கே இல்லை, சீமான் போன்றவங் களை நாங்க பாதுகாக்கவு மில்லைன்னு காட்டத்தான் அவரைக் கைது செய்ததா உள்துறை வட்டாரங்களில் சொல்றாங்க. நேரடியா தமிழர் விவகாரத்தைக் காரணம் காட்டினா அது ஜெ.வின் இமேஜை பாதிக்கும்ங்கிறதால தான் டோல்கேட் விவகாரத் தை வச்சி கைது செஞ்சாங் களாம்.'' 


 தி.மு.க.வுக்கு வைகோ தூது!

ம.தி.மு.க பொதுச்செய லாளர் வைகோ சமீபத்தில் சாத்தூரில் இருந்தபோது அவரை கே.கே.எஸ்.எஸ்ஆரும் மதுரை தி.மு.க மா.செ. தளபதி யும் சந்தித்திருக்கிறார்கள். அப்போது வைகோ பொதுவான அரசியல்சூழல்கள் பற்றி அவர்களிடம் பேசிவிட்டு, “தி.மு.க கூட்டணிக்கு வரத்தயார். அதுநடந்தால் சேடப்பட்டியில் தளபதி ஜெயித்துவிடுவார். நீங்கள் சாத்தூரிலோ அருப்புக் கோட்டையிலோ எங்கு நின்றாலும் ஜெயிக்கலாம் என்று கே.கே.எஸ்.எஸ்.ஆரைப் பார்த்து சொல்லியிருக்கிறார். கிரிக்கெட் கிளப்புகளில் வேட்டிக்குத் தடை நீக்கம், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர்மட்டம் உயர்வு ஆகியவற்றுக்காக ஜெ. அரசை வைகோ பாராட்டிய தால் அவர் அ.தி.மு.க பக்கம் போவதாகத்தானே செய்திகள் வருகின்றன என ம.தி.மு.க வட் டாரத்தில் கேட்டபோது, அந்தப் பக்கம் பேசினால்தானே இந்தப் பக்கம் ஈர்க்கும் என அரசியல் சாதுர்யம் பற்றிச் சொன்னவர்கள் இந்த சாத்தூர் சந்திப்புக்குப்பிறகு நடந்த ஒரு இஃப்தார் விருந்தில் கலந்துகொண்ட வைகோ, மது விற்ற பணத்தில் உணவருந்துபவர்கள் என அனைவரும் சபிக்கப் பட்டவர்கள் என்று நபிகள் நாயகம் கூறி இருக்கிறார். மதுவின் கொடுமைக்கு எதிராக, ஏழை பெண்களின் கண்ணீரை துடைப்பதற்காக தமிழகம் முழுவதும் 1,700 கிலோ மீட்டர் தொலைவு நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறேன் எனப் பேசியதையும் கவனிக்கவேண்டும் என்கிறார்கள்.

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம்தான் போட்டியிடவேண்டும் என ஜெ. முடிவெடுத்திருக்கிறார். ஆதரவுக் கட்சியின ரான சரத்குமார், செ.கு.தமிழரசன் போன்றவர் களுக்குப் பிரச்சினையில்லை. அதேநேரத்தில், பார்வார்டு ப்ளாக் கதிரவன் சிங்கம் சின்னத்தில் போட்டியிடுபவர். அவரிடமும் நத்தம் விஸ்வநாதன், இலையில் நிற்பதுபோல பார்த்துக்குங்க என்று சொல்லியிருப்பதால் அ.தி.மு.கவில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடமில்லை என்பது தெரிய வந்துள்ளது. வைகோவிற்கும் இந்தத் தகவல் எட்டியிருப் பதையடுத்துதான் மற்ற வழிகளையும் யோசிக்கத் தொடங்கியுள்ளாராம்.



 லாஸ்ட் புல்லட்!


ad

ad