புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2014




"அதையெல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க. சட்டம்-நீதி இதையெல்லாம் எப்படி சமாளிக்கணும்னு அவங்களுக்குத் தெரியும். இந்தக் கேஸிலும் நல்ல வக்கீல்களை வச்சி சமாளிச்சிடுவாங்க' என்பதுதான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றிய அ.தி.மு.க.வினர் பலரின் பார்வை இருக்கிறது. போயஸ் கார்டனிலோ "இதற்கு நேரெதிரான நிலை' என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். 

அ.தி.மு.க. தொண்டர்கள் அதிக நம்பிக்கை யுடனும், போயஸ் கார்டன் வழக்கத்திற்கு மாறாக பதற்றத்துடனும் இருப்பதற்கான காரணத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டு மென்றால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ. தரப்பில் வைக்கப்பட்ட நடந்த இறுதிவாதங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் முக்கியமானவை.  18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த   வழக்கு இது. கடைசியாக 22 நாட்களில் 65 மணி நேரம்  ஜெ.வின் வழக்கறிஞர் குமார் தனது வாதங் களை எடுத்து வைத்திருக்கிறார். இதிலிருந்துதான் ஜெ. தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியுமே தவிர, இனி புதிதாக எந்த வாதத்தையும் எடுத்து வைக்க முடியாது என்பதுதான் இப்போதைய நிலை.

வழக்கறிஞர் குமார் தன்னுடைய வாதத்தின் தொடக்கத்தில், "இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையிலான வழக்கு' என்றே வாதாடினார். "யுவர் ஹானர்.. இந்த வழக்கிற்காக 7-12-1996 முதல் 12-12-1996 வரை என் கட்சிக்காரர்(ஜெ) சிறையில் இருந்தபோது அவரது வீட்டில் ரெய்டு நடக் கிறது. ஏராளமான பொருட்கள் கைப்பற்றப் பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிறது. அரசியல் ரீதியாக என் கட்சிக்காரரை ஒழித்துக் கட்ட சதி செய்த வழக்கு இது. சட்டப்படி யாகப் பார்த்தாலும் இது தவறான வழக்கு' என முதல் இரண்டு நாட்களும் கடுமையாக வாதாடினார் குமார். 

மூன்றாவது நாளும் இதே கோணத்தில் அவர் தனது வாதங்களை முன்வைத்துக் கொண்டே போனபோது சிறப்பு நீதிமன்ற  நீதிபதி மைக்கேல் டி குன்ஹா குறுக்கிட்டு, ""நீங்கள் உங்கள் கட்சிக்காரருக்காக வாதாட வந்தவர். ஆனால் இந்த நீதிமன்றத்தை அரசியல் மேடை போலாக்கி வாதாடுகிறீர்கள். தி.மு.க தலைவர் கருணாநிதி பற்றியெல்லாம் இங்கே பேசுகிறீர்கள். இப்படிப் பேசுவதற்கான ஆதாரங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் காட்டுங்கள். ஆதாரமில்லாமல் பேசுவது தவறு. உங்கள் கட்சிக்காரரைப் பாதுகாப்பதற்கான உண்மைகளை மட்டும் முன்வைத்து வாதாடுங்கள்'' என்றார். அவர் கேட்ட ஆதாரங்கள் எதையும் ஜெ.வின் வழக்கறிஞர் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் ரீதியாகப் பேசுவதையும் தவிர்த்து, வழக்கு விவரங்களின் அடிப்படையில் வாதாடத் தொடங்கினார் வழக்கறிஞர் குமார்.

வளர்ப்பு மகன் திருமணம் தொடர்பான வாதங் களின்போது வழக்கறிஞர் குமார் முன்வைத்த பாயிண்ட்டுகள் நீதிமன்றத்தில் இருந்தவர்களை ஆச்சரியத்தோடு பார்க்க வைத்தன. "என் கட்சிக் காரருக்கு சசிகலாவோ(ஏ2) இளவரசியோ(ஏ3) உறவினர் அல்ல. அவர்களுடன் என் கட்சிக்கார ருக்கு இவ்வழக்கில் தொடர்பு இல்லை. சுதாகரன் (ஏ4) என் கட்சிக்காரருக்கு வளர்ப்புமகனும் அல்ல. முதல்வர் என்ற முறையில் அவரது திரு மணத்தில் வாழ்த்துவதற்காக என் கட்சிக்காரரை அழைத்தார்கள். அவர் சென்று வந்தார்' என்றபோது குமாரின் முகத்தையே சக வழக்கறிஞர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். 

ஜெ.வின் வழக்கறிஞர் தொடர்ந்து வாதாடு கையில், ""திருமண செலவுகளை யாராலும் துல்லியமாகக் கணக்கிட முடியாது. ஆனால்  இந்த வழக்கில், 1995-ல் நடந்த திருமணத்தின் செலவை 1997-ல் துல்லியமாகக் கணக்கெடுத்து, 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகச் சொல் கிறார்கள். இந்தத் திருமணத்தைப் பொறுத்த வரை கலை இயக்குநர் தோட்டாதரணி, கோபிநாத் போன்றவர்கள் இலவசமாக பந்தல் அலங்காரங்களை செய்து கொடுத்தார்கள். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் ஃப்ரீயாகத் தான் இசைக் கச்சேரி நடத்தினார். வாழைமரம், தோரணம், இலைக்கட்டு போன்றவற்றுக்கு அரசியல் கட்சிக்காரர்கள் செலவு செய்தார்கள். மணமகள் வீட்டார் சார்பில் நடிகர் பிரபு வெளிநாடுகளில் நடந்த படப்பிடிப்பில் சம்பாதித்த பணம் இந்தத் திருமணத்தில் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் அவரது சகோதரர் ராம்குமார் முறையாக கணக்குக் காட்டியிருக்கிறார்'' என்றார். அப்போது நீதிபதி டி குன்ஹா, ""இந்தத் திருமணத்தின்போது நடிகர் சிவாஜி உயிருடன் இருந்தாரா? திருமண செலவு தொடர்பாக அவரிடமும் விசாரணை நடந்ததா?'' எனக் கேட்க, ""சிவாஜி உயிருடன் இருந்தார். திருமண விழாவில் பங்கேற்றார். ஆனால் அவரிடம் விசாரணை எதுவும் நடைபெறவில்லை'' என பதில் தந்தார்.

"அ.தி.மு.க நிர்வாகிகள் பல செலவுகளை ஏற்றுக் கொண்டார்கள்' என வழக்கறிஞர் குமார்  சொன்ன தையடுத்து, "மணமகன் சுதாகரன் கட்சியில் உறுப் பினரா, பொறுப்புகளில் இருந்தாரா?' என நீதிபதி கேட்க, அ.தி.மு.க.வில் சுதாகரன் உறுப்பினராக இருந் தார் என்று மட்டும் வக்கீலிடமிருந்து பதில் வந்தது. தங்க நகைகள் பற்றிய வாதத்தின்போது ஏகப்பட்ட கணக்குகளை எடுத்துக்காட்டினார் வழக்கறிஞர் குமார்.

""போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டபோதே அவர்களிடம் 7 கிலோ 40 கிராம் தங்கம் இருந்தது. 1989-90ல் 12 கிலோ 842 கிராம் தங்கம் இருந்தது. 1991-92ல் இது 21கிலோ 280 கிராமாக ஆனது. கட்சி நிர்வாகிகளான ஜெயக்குமார், அழகு.திருநாவுக்கரசு, கண்ணப்பன் போன்றவர்கள் தங்கத்தட்டு, தங்கப்பேனா, தங்க செங்கோல் ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்திருந்தார்கள். அத்துடன் கடிகாரம், வளையல் போன்றவற்றில் தங்கம், வைரம் ஆகியவை இருந்தன. எல்லாவற்றையும் சேர்த்து 27 கிலோ 580 கிராம் தங்க நகைகள் இருந்ததாக கேஸ் போட்டி ருக்கிறார்கள். சசிகலாவிடமும் 1கிலோ 931 கிராம் தங்கம் இருந்தது. இவையெல்லாமே வருமானவரி கட்டி முறைப்படி சேர்க்கப்பட்டிருந்த சொத்துகள். வருமான வரித் தீர்ப்பாயம்கூட எங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. அதை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார் ஜெ.வின் வழக்கறிஞர் அழுத்தமான குரலில்.

அந்தத் தொனியை நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா ரசிக்கவில்லை. ""தீர்ப்பாயம் தந்த உத்தரவை நீதிமன்றம் ஏற்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. இது எல்லாம் வருமானவரி கட்டி சேர்க்கப்பட்ட சொத்துகள்தான் என்றால், இதெல் லாம் முறையான சொத்துகள் என்று வழக்குப் போட்டு, இந்த சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி அப்போதே ஒரு பெட்டிஷன் போட்டு உங்கள் தரப்பினர் விடுவித்துக் கொண்டி ருக்கலாமே?'' என்று நீதிபதி கேட்டார். ஜெ.வின் வருமான வழிகள் பற்றி தனது அடுத்தடுத்த நாள் வாதங்களில் சொல்லத் தொடங்கினார் வழக்கறிஞர் குமார்.

"சந்தியா நாட்டியப்பள்ளி மூலமாக ஆண்டுக்கு 90 ஆயிரம் ரூபாய் வருமானம்  கிடைத்தது. நமது எம்.ஜி.ஆர் பத்திரிகைக்காக 14 கோடியே 25 லட்ச ரூபாய்  சிறப்பு டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டது. பிரச் சாரத்திற்குப் போனபோது கட்சிக்காரர்கள் அன்பளிப் பாகக் கொடுத்த தங்கத்தின் மதிப்பு 2 கோடி  ரூபாய். இதை யெல்லாம் வருமானவரித் துறையில் காட்டியிருக்கிறோம்' என்றபடி நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கான சிறப்பு டெபாசிட் தொடர்பான ரசீதுகளை காட்டினார் ஜெ.வின் வழக்கறிஞர்.

"இந்த ரசீதுகளின் ஒரி ஜினல்கள் தொலைந்துவிட்ட தாகச் சொல்லி வருமானவரித் துறையில் ஜெராக்ஸ் காப்பி களைத்தான் காட்டியிருக் கிறீர்கள். இப்போது எப்படி ஒரிஜினல்களைக் காட்டுகிறீர் கள்? ஒரு  பத்திரிகை அலு வலகத்தில் ரசீதுகளைக்கூடவா சரியாக மெயின்டெய்ன் செய்ய மாட்டார்கள்' என ஜெ.வின் வக்கீல் சமர்ப்பித்த ரசீதுகள் தொடர்பான நம்பகத் தன்மையை சோதிப்பதுபோல நீதிபதி கேள்வி இருந்ததாக பிற வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

தொடர்ந்து ஒவ்வொரு  நாளும் அவர் முன் வைத்த வாதங்களில், ஜெ. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குறிப்பிடுவதெல்லாம் அவரது வருமானத்தைக் குறைவாக மதிப்பிடுவதால்தான் என்ற வக்கீல் குமார், ஹைதராபாத் திராட்சை தோட்ட வருமானத்தைக் குறைவாக மதிப்பிட்டிருக்கிறார்கள். அங்கு கொய்யா, மாதுளை, பப்பாளி, சீதாப்பழம் ஆகியவை விளைந்து நிறைய வருமானம் கொடுத் துள்ளது. 1991-96ல்  ஹைதராபாத் தோட்டத்திலிருந்து கிடைத்தது 5 லட்சத்து 8 ஆயிரத்து 340 ரூபாய் வரு மானம் வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், அங்கிருந்து கிடைத்த வருமானம் 52 லட்ச ரூபாய்.

அதுபோல, ஜெ.வுக்கு சொந்தமான வீடுகளிலிருந்து கிடைத்த வாடகையும் சரியாக மதிப்பிடப் படவில்லை. சசிகலாவுக்கு கந்தர்வகோட்டை நிலத்தி லிருந்து கிடைத்த வருமானமும் சரியாக மதிப்பிடப் படவில்லை. ஜனாதிபதி பயன்படுத்திய பென்ஸ் காரை 6 லட்சத்து 9 ஆயிரத்துக்கு வாங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது 9 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டது என வாதங்களை அடுக்கிக்கொண்டே போன ஜெ.வின் வக்கீல் குமார், மொத்தமாக 60 கோடி ரூபாய் சொத்துக்கான வருமான வழிவகைகள் பற்றிய கணக்குகளை முன்வைப்பதில் முனைப்பாக இருந்தார்.  "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கம்பெனிகளுக்கும் என் கட்சிக்காரருக்கும் (ஜெ) சம்பந்தமில்லை. அதுபோல என் கட்சிக்காரருக்கும் ஏ2, ஏ3, ஏ4 ஆகியோருக்கும் எந்த சம்பந்தமுமில்லை' என்பதே அவரது முக்கியமான வாதமாகத் தொடர்ந்தது.

நீதிபதி குன்ஹா வணிகப் படிப்பு படித்தவரல்ல என்றபோதும் கம்பெனிகள் சம்பந்தமான விவரங்களை வணிகத்துறை வல்லுநர்களிடம் ஆலோசித்து அது தொடர்பாக நிறைய கேள்விகளை எழுப்பி னார். 

போயஸ்கார்டனிலிருந்து எடுக்கப்பட்ட உடை உள்ளிட்ட பொருட்கள் பற்றிய வாதத்தின்போது, ""ஒருவர் தனது அன்றாட நடைமுறைக்காகப் பயன்படுத்தும் பொருட் களை சொத்துகளின் பட்டியலில் சேர்க்க முடியாது. ஆனால் அரசுத் தரப்பில் 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள நூற்றுக்கணக்கான  புடவைகளையும், 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள 98 வாட்ச்களையும், 386 ஜோடி செருப்புகளையும் வருமானத்திற்கு மீறிய  சொத்துகளின் பட்டியலில் சேர்த்திருக் கிறார்கள். நிறைய பெண்கள் வசிக்கின்ற வீட்டில் இத்தகைய பொருட்களைப் பயன் படுத்தத்தானே செய்வார்கள்? ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, அனுராதா எனப் பலப் பெண்கள் இருந்த வீட்டில் எடுத்த பொருட்களை எப்படி சொத்துகள் பட்டியலில் சேர்க்க முடியும்?'' என வாதாடினார் ஜெ.வின் வக்கீல் குமார்.

அதுவரை ஜெ.வுக்கும் மற்றவர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவர்களுடன் இவரை இவ்வழக்கில் சேர்த்தது தவறு என்ப தாக வாதிட்டு வந்த வக்கீல் குமாரின் இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, "அப்படியென்றால் ஏ1 (ஜெயலலிதா), ஏ2 (சசிகலா), ஏ3 (இளவரசி), ஏ4 (சுதா கரன்) எல்லோரும் ஒரே வீட்டில்தான் வசித்தார்களா?'’என்று கேட்க... "யெஸ்... யுவர் ஹானர்'’என்றார் வக்கீல் குமார். அவரது இந்தப் பதில் வழக்கின்  மிக முக்கியமான பகுதியாகப் பார்க்கப் படுகிறது.

ஜெ. தரப்பின் இறுதிவாதம் முடிந்துள்ள நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட பின், இத்தனை ஆண்டுகாலமாக இழுத் தடிக்கப்பட்டு வந்த இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகும். 

"அதிகபட்சம் 3 வாரங்கள் இதற்கு ஆகலாம்' என்கிறார்கள் சட்டத் துறையினர். தீர்ப்பு பற்றிய யோசனையுடனும் வழக்கின் போக்கில் வேறு என்னென்ன செய்யலாம் என்ற சட்டரீதியான ஆலோசனைகளுடனும் பதட்டமாக இருக்கிறது போயஸ் கார்டன்.

சட்டமன்றக் கூட் டத் தொடர் பரபரப்பாக நடை பெற்றுவரும் இந்த நிலையிலும், கறுப்பு நிற கார் ஒன்றில் சிலர் போயஸ் கார்டனுக்கு வரு கிறார்கள், போகிறார்கள். எதிர்கால சிக்கல்களை எப்படித் தீர்ப்பது, அதற்கு என்ன பரிகாரம் என்று துல்லியமாகக் கணிக்கக்கூடிய ஜோதிடர்கள்தான் காரில் வருபவர்களாம்.

ad

ad