புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2014


ராஜ் ராஜரட்ணத்தின் சகோதரர் குற்றவாளியல்ல! ஜூரி தீர்ப்பு
அமெரிக்க உட்சந்தை மோசடியில் கலொன் குழுமத்தின் ஸ்தாபகரான இலங்கையர் ராஜ் ராஜரட்ணத்தின் இளைய சகோதரரான ரெங்கன் ராஜரட்ணம் குற்றவாளியல்ல என்று நியூயோர்க் மாவட்ட ஜூரியால் இனங்காணப்பட்டுள்ளது.
சுமார் 4 மணித்தியாலங்களாக இடம்பெற்ற வாதங்களின் பின்னர் ரெங்கன் உட்சந்தை மோசடி மற்றும் அதற்கு திட்டமிட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றமற்றவர் என்று ஜூரி சபையால் தீர்மானிக்கப்பட்டது.
ரெங்கன், தமது சகோதரர் ராஜ் ராஜரட்ணத்துடன் இணைந்து உட்சந்தை மோசடியில் ஈடுபடவில்லை என்று இதன்போது தெரியவந்துள்ளது.
ரெங்கன், தமது மூத்த சகோதரருடன் கலோன் நிறுவனத்தில் முகாமையாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் மீது 2013 ஆம் ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டது.
அவருக்கு எதிராக 7 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. எனினும் ஒரு வருடத்துக்கு முன்னர் அதில் நான்கு குற்றச்சாட்டுக்களை சட்டத்தரணிகள் விலக்கிக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து நீதிபதி நயோமி ரீஸ் கடந்த வாரத்தில் ரெங்கனுக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்.
மோசடிக்கு திட்டமிட்டமை தொடர்பான குற்றச்சாட்டை ஜூரி சபைக்கு பாரப்படுத்தினார். இந்தநிலையிலேயே அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரெங்கனின் சகோதரராக ராஜ் ராஜரட்ணம் உட்சந்தை மோசடி தொடர்பில் 2011 ஆண்டு முதல் 11 வருட சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் 88 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

ad

ad