புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2014




""ஹலோ தலைவரே.. . 11 மாடி கட்டடம் நொறுங்கி விழுந்து 60க்கும் அதிகமானவங்க இறந்துபோன கொடுமை மனசைவிட்டு மறையறதுக்குள்ள, குடோன் காம்பவுண்டு இடிஞ்சி 11பேர் பலியாகியிருக்காங்களே..''

""ரொம்பக் கொடுமைப்பா.. சொந்த மண்ணில் பிழைக்க வழியில்லாம இங்கே வந்த வெளிமாநிலத்துக்காரங்களோட உயிர் நம்ம மாநிலத்தில் பறிபோயிடிச்சேங்கிறதில் கூடுதல் வருத்தமா இருக்குது. இதையெல்லாம் கவனிச்சி நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்கம் என்ன செஞ்சிக்கிட்டி ருக்குது?''

""மந்திரிகளை உருட்டி விளையாடும் ஆட்டம் தொடர்ந்துக்கிட்டிருக்குதுங்க தலைவரே.. .. எம்.பி. தேர்தலில் 37 தொகுதி களில் ஜெயிச்சதுக்காக அ.தி.மு.க தலைமை யின் உத்தரவுப்படி வெற்றிவிழா கூட்டங்கள் நடந்துக்கிட்டிருக்குது. அதுபோல ஜூலை 4ந் தேதி மதுரை எம்.பி தொகுதி வெற்றி விழாப் பொதுக்கூட்டத்துக்கு பிரம் மாண்டமா ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சர் செல்லூர் ராஜூ, பகுதிச் செயலா ளர் ராஜலிங்கம் இவங்கதான் இந்த பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சவங்க. அனிதா குப்புசாமிதான் சிறப்பு பேச்சாளர். கூட்டம் தொடங்குறதுக்கு முன்னாடி ஓ.பி.எஸ்ஸூக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்குது. மதுரை பொதுக்கூட்டத்தில் நீங்க கலந்துக்கக் கூடாதுன்னு சொன்னதும் ஓ.பி.எஸ் ஷாக் ஆயிட்டாரு. ஆனாலும், மேலிடத்து உத்தரவாச்சே, அவர் போகலை. அனிதா குப்புசாமி வந்து பேசிட்டும் பாடிட்டும் போயிருக் காரு.''

""எதற்காக ஓ.பி.எஸ்.ஸுக்குத் தடையாம்?''

""மதுரை அ.தி.மு.க நிர்வாகிகளைக் கேட்டால், கூட்டம் நடந்த ஏரியாவில் இஸ்லாமியர்கள் அதிகம்னும், ரம்ஜான் நோன்பு நேரத்தில் அ.தி.மு.ககாரங்க பெரிய பெரிய கட்-அவுட்டுகளை வச்சி, லவுடு ஸ்பீக்கரை அலறவிட்டதில் முஸ்லிம்கள் அதிருப்தியாயிட்டாங்கன்னும் இதை உளவுத்துறை மேலிடத்துக்கு ரிப்போர்ட்டா அனுப்ப, அதனால் தான் ஓ.பி.எஸ்ஸூக்குத் தடை போட்டுட்டாங் கன்னும் சொல்றாங்க.''

""அப்படியிருந்தால் பொதுக்கூட்டத்துக்கே தடை போட்டிருக்கணுமே?''

""அந்த டவுட்டுலதான் அ.தி.மு.க தலைமைக்கழக ஏரியாவில் விசாரிச்சேன். பின்னணி தெரிய வந்தது. இடிஞ்சு விழுந்து உயிர்களைப் பலிவாங்கிய மவுலி வாக்கம் 11மாடி கட்டிடத்தோட உரிமையாளர் மனோகரன், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவுக்கு நெருக்கமானவராம். இதையடுத்தே ஓ.பி.எஸ்.கிட்டேயிருந்த கட்சி தொடர்பான அதி காரம், ஆட்சி சம்பந்தமான செயல்பாடுகள் எல்லாத் தையும் பறிச்சி, நால்வர் அணியில் உள்ள நம் பிக்கையான அமைச்சரான வைத்தியலிங்கத் துக்கிட்டே கொடுத்திருக்காராம்.'' 

""11 மாடி அப்ரூவல் விவகாரமே அமைச்சர் வைத்திலிங்கம் வசமிருக்கும் துறையிலே தானே வருது?''

""தலைவரே.. .. கொடூரம் நடந்த அந்த ஸ்பாட்டுக்கு இதுவரை அமைச் சர் வைத்திலிங்கம் போகலை. ஜெ. விசிட்டடிச் சப்பவும் இவர் இல்லை. ஜெ.தான் அமைச்சர் மேலே உள்ள கோபத்தில் அவரை வரவேணாம்னு சொல்லிட்டாருன்னுகூட தகவல் வந்தது. ஆனா, இந்த 11 மாடி கட்டிட விவகாரத்தில் ஓ.பி.எஸ் தம்பிக்கு உள்ள தொடர்பு பற்றி ரிப்போர்ட் வந்ததும் கோபமெல்லாம் அந்தப் பக்கம் திரும்பி, வைத்திலிங்கம் எஸ்கேப் ஆயிட்டாருன்னு சொல்றாங்க. ஓ.பி.எஸ்.தான் இதுவரை மா.செ.க் களை சந்திச்சி அவங்க சொல் றதையெல்லாம் ரிப்போர்ட்டாக தினமும் ஒப்படைச்சிக்கிட்டி ருந்தாரு. இப்ப அந்த வேலையை வைத்திலிங்கத்துக்கிட்டே கொடுத்திருக்காராம் ஜெ.''

""மவுலிவாக்கம் கட்டடம் இடிந்துவிழுந்ததையடுத்து, சென்னையிலே இருக்கிற கட்ட டங்களையெல்லாம் ஆய்வு செய் யும் பணியை சி.எம்.டிஏ. தொடங்கியிருக்கு தாமே?''

""சி.எம்.டி.ஏ சார்பா 19 குழுக்கள் போடப்பட்டி ருக்குது. ஒவ்வொரு குழுவுக்கும் 10 ஃபைல்கள் ஒதுக்கப் பட்டிருக்குது. இதை ஆராய்ஞ்ச போது, கட்டிடத்துக்கான அப்ரூவல் கிடைப்பதற்கு முன்னாடியே விறுவிறுன்னு பல கட்டிடங்கள் கட்ட ஆரம் பிச்சதைக் கண்டுபிடிச்சிருக்காரு சி.எம்.டி.ஏவோட மெம்பர் செகரட்டரி கார்த்தி. இந்த போஸ்டிங்கில் முன்னாடி இருந்தவங்க தயவில்தான் இதெல்லாம் நடந்திருக்க ணும்ங்கிற கோணத்தில் ஆய்வு கள் தொடருதாம். இப்படி அப்ரூவல் இல்லாமல் கட்டிடம் கட்டுற நிறுவனங்களெல்லாம் சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுக்கெல் லாம் வெயிட்டான ஆஃபர் தருதாம். ஒரு அதிகாரியின் மகளுக்கு பிரபல மெடிக்கல் கல்லூரியில் சீட் வாங்கிக்கொடுத்திருக்குது ஒரு நிறுவனம். இன்னொரு நிறுவனமோ, இன்னொரு அதிகாரி யின் மகன் அமெரிக் காவை சுற்றிப்பார்ப் பதற்கான செலவு களை ஏற்றுக் கொண்டி ருக்குது. இந்த ஆஃபர் களால் விதிமீறல்களை சகஜமா அனு மதிச்சிடுறாங்களாம்.'' 

""ஆட்சி சம்பந்தமாகவும் ஆளுங் கட்சி சம்பந்தமாகவும் நியூஸ் சொல்லிட்டே.. எதிர்க்கட்சி பக்கம் வாப்பா. தி.மு.கவில் அடுத்தடுத்து என்ன நடக்கும்னு பரபரப்பான தலைப்புகளில் செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்குதே, உண்மையில் என்னதான் நடந்துக்கிட்டிருக்குது?''

""மாவட்ட பிரிப்பு, அதற்கேற்றமாதிரி ஒன்றிய- நகரங் கள் பிரிப்புக்கான வேலைகள் ஒருபக்கம் நடக்கிற அதே நேரத்தில், மா.செ. பதவிகளை இழக்கும் வாய்ப்புள்ள சீனியர்கள் மாநில அளவில் தங்களுக்கு என்ன பொறுப்பு கிடைக்கும், அது சரியா இருக்குமா, யார் எந்தப் பதவியில் இருந்தா தங்களுக்கு சாதகமா இருக்கும்னெல்லாம் யோசிச்சிக்கிட்டிருக்காங்க. தலைவர் பொறுப்பில் கலைஞர் இருக்கிறவரைக்கும், பொதுச் செயலாளரா பேராசிரியரும் இருப்பாரு. இந்த இரண்டு பதவிகளிலும் இப்ப மாற்றம் கிடையாது.''


""அது தெரிஞ்சதுதானேப்பா...  தி.மு.க., ஆட்சியில் இருந்த சமயத்தில் மு.க.ஸ்டாலினுக்குப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்க ஒரு முயற்சி எடுக்கப்பட்டப்ப, ஆற்காடு வீராசாமிதான் பேராசிரியர்கிட்டே தூதரா போனாரு. அப்ப பேராசிரியர் அன் பழகன், நான் என் அமைச்சர் பதவியையும் ராஜினாமா பண் ணிடுறேன்னு சொல்லிட்டாரு. அதையடுத்து, தூதரா போன ஆற்காடு வீராசாமிகிட்டே இருந்த பொருளாளர் பதவி ஸ்டாலி னுக்குக் கொடுக்கப்பட்டு, தலைமைநிலைய முதன்மைச் செயலாளரா ஆற்காடு வீராசாமி நியமிக்கப்பட்டாரு.''

""ஞாபகம் இருக்குதுங்க தலைவரே.. இப்ப மா.செக்கள் தரப்பில் என்ன மூவ் நடக்குதுன்னா, மு.க.ஸ்டாலின் துணைத் தலைவராகவோ, செயல் தலைவராகவோ நியமிக்கப் பட்டால், பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் மா.செ. ஐ.பெரியசாமியைக் கொண்டு வரணும்னு ஒரு குரூப் மூவ் பண்ணுது. அவர் வந்திடக்கூடாதுன்னு இன்னொரு குரூப் ஒர்க் பண்ணுது. இதற்கிடையில், துணைப்பொதுச்செயலாளரான துரைமுருகன் தன்னைவிட ஜூனியர்களே பொருளாளர் பதவிக்கு மூவ் பண்ணும்போது, தனக்கு கட்சியில் புரமோஷனா அந்தப் பதவி கிடைக்கணும்னு எதிர்பார்க்கிறார். கட்சியில் சீனியர், மெஜாரிட்டி சமுதாயமான வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர். அதனால அவருக்கு அந்த எதிர்பார்ப்பு இருக்குது. இப்படிப் பலருக்கும் பல எதிர்பார்ப்புகள். எதுவாக இருந்தாலும் செப்டம்பரில் முப்பெரும்விழாவையொட்டி நடக்கும் பொதுக்குழுவில்தான் கட்சியின் மாநிலப் பொறுப்பிலான மாற்றங்கள் நடக்குமாம்.''

""மு.க.ஸ்டாலின் லண்டனுக்குப் போனதால, அங் கேயே கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி யெல்லாம் ப்ளான் பண்ணிட்டதா செய்திகள் கசியுதே?''

""ஸ்டாலின் ரெகுலரா லண்டனுக்குப் போய் உடல்நிலையை செக்கப் பண்ணிக்குறது வழக்கம். அதுபோலத்தான் இந்த முறையும் போனாரு. அவர்கூட அவர் மனைவி, மகன், மருமகன் அப்புறம் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் மகேஷ் பொய்யா மொழி இவங்களெல்லாம் போனாங்க. அந்தப் பயணம் பற்றித்தான் பல செய்திகள் இறக்கைக் கட்டி பறக்க ஆரம்பிச்சிடிச்சி.''

""ஸ்டாலின் லண்டனுக்குப் பறக்க, செய்திகள் தமிழகத்தை நோக்கி பறந்துச்சின்னு சொல்லுப்பா.''

""ஈராக்கில் அரசுக்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிர வாதப்படையினர்கிட்டே சிக்கியிருந்த 40க்கும் அதிக மான நர்ஸ்கள் பத்திரமா சொந்த ஊருக்குத் திரும்பி யிருக்காங்க. பெரும்பாலும் கேரள மாநிலத்து நர்ஸ் கள்தான். தமிழ்நாட்டின் தூத்துக்குடியைச் சேர்ந்த நர்ஸ் மோனிஷாவும் இதில் அடக்கம். தீவிரவாதப் படைகள்கிட்டே சிக்கியிருந்தப்ப, நர்ஸ் மோனிஷா முதலில் தகவல் கொடுத்தது கலைஞர் டி.விக்குத் தானாம். அவங்களும் அது பற்றிய செய்தியை ஒளி பரப்பியிருக்கங்க. தீவிரவாதிகள் தங்களோட முற்றுகையில் இருக்கிற ஆஸ்பத்திரியை வெடிகுண்டு வச்சி தகர்க்கப் போறதாகவும் அதனால எங்களை எப் படியாவது காப்பாத்துங்கன்னும் மோனிஷா மறுபடியும் கலைஞர் டி.விக்குத் தகவல் சொல்ல, டி.வி. நிர்வா கம் உடனே தங்களோட விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கிற பா.ஜ.க பிரமுகர் வானதிசீனிவாசன் மூலமா வெளியுறவு அமைச்சகத்துக்குத் தகவலைக் கொண்டு போக, அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பி.ஏ. மூலமா மத்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு இது தெரியவர, உடனடியாக நடவடிக்கைகள் வேகம் எடுத்திருக்குது. இதற்கிடையில், தீவிரவாதிகளும் நர்ஸ்களை விடுவிக்க, அவங்களை இந்திய விமானம் பத்திரமா கொச்சிக்கு அழைச்சிட்டு வந்திடிச்சி.''


""நல்லது நடக்க ஊடகங்கள் இதுபோல உதவிகரமா இருக்கணும். பாதுகாப்பா வந்து சேர்ந்த நர்ஸ்கள் அளித்த பேட்டியைப் பார்த்தியா? பெண்கள்ங்கிறதால தங்கள் கிட்டே ஐ.எஸ்.ஐ.எஸ். படையினர் ரொம்ப கண்ணியமா நடந்துக்கிட் டாங்கன்னு சொல்லியிருக்காங்க. தமிழீழத்துக்குப் போராடிய விடுதலைப்புலிகளும் கண்ணியத்தோடு நடந்தவங்கதான். மாவோயிஸ்ட்டுகளும் பெண்கள்கிட்டே கண்ணியமா நடந்துக்கிறவங்கதான். ஆனா இவங்களையெல்லாம் தீவிர வாதிகள்னு சொல்றாங்க. அரசாங்கத்துப் படைகளும் ஐ.நா சபை சார்பில் அனுப்பிவைக்கப்படுகிற சர்வதேச சமாதானப் படைகளும்தான் பெண்கள்கிட்டே தப்பா நடந்துக்கிட்டதா அடிக்கடி குற்றச்சாட்டு வருது.'' 

""தலைவரே.. நல்ல விஷயங்களைப் பேசுவோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் கிளைக்கான தலைமை அலுவலகமான வரலாற்று சிறப்புமிக்க பாலன் இல்லம் இப்ப பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் போல 8 மாடி கட்டிடமாகக் கட்டப்பட்டு திங்கட் கிழமையன்னைக்குத் திறக் கப்பட்டிருக்குது. ஒரு தளத்தில் கட்சி ஆபீசும் மற்ற தளங் களை வாடகைக்கு விடவும் தோழர்கள் திட்டமிட்டிருக் காங்க. சென்னை தியாகராய நகர் போக் ரோட்டில் 14 கோடியில் திட்டமிடப் பட்டு 18 கோடி யில் கட்டிமுடிக்கப் பட்டிருக்குது. காங்கிரஸ், தி.மு.க., சி.பி.எம். போன்ற கட்சிகளின் பிரமுகர்கள் திறப்பு விழாவுக்கு வந்திருந்தது ஆச்சரியமா இருந்தது. அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் மிஸ்ஸிங். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து அனுப்பியிருந்தாரு. 49 சென்ட் நிலத்தை கட்சிக்குக் கொடுத்த பிரபல நடனக் கலைஞரான அமலா உதயசங்கர் 91 வயதிலும் விழாவுக்கு வந்து நினைவு பரிசை வாங்கிக்கிட்டாரு.''

""கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஒரு கார்ப்பரேட் ஆபீஸ் போல கட்டப்பட்டிருப்பது ஆச்சரியந்தாம்ப்பா!''

""இதைத்தான் ஆந்திர மாநில கம்யூனிஸ்ட் செயலாளர் நாராயணா சொன்னாரு. நாங்க கட்சி ஆபீசை பிரம்மாண்டமா கட்டிட்டு, எங்க வீடுகளை எளிமையா கட்டிக்குவோம். ஏன்னா, இது ஏழைகளிடம் வாங்கிய நிதியில் கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகம். ஆனா, காங்கிரஸ் போன்ற கட்சிகளோ தங்களுக்கு கொடுக்கப்படும் நிதியை வச்சி அவங்கவங்களுக்கும் பிரம்மாண்ட வீடுகளை கட்டிக்கிறாங்கன்னு சூடா சொன்னாரு. இந்த விழாவின் ஹீரோ, இந்த பிரம்மாண்ட கட்டிடத்தை முனைப்பா இருந்து கட்டி முடித்த தா.பாண்டியன்தான். அவர் பேச்சில் வழக்கமான நையாண்டிக்குப் பஞ்சமில்லை. "என்ன உங்க வசந்தமாளிகையை கட்டி முடிச்சாச்சான்னு சிலர் என்கிட்டே கேட்குறாங்க. இது வசந்தமாளிகை இல்லை. உழைக்கும் மக்களோட உரிமைகளைப் பெறுவதற்கான போராட் டக்களம். இங்கே நானும் தூங்கமாட்டேன். மற்றவங் களைத் தூங்கவிடமாட் டேன்'னு சொன்னவர், அந்த விழாவிலேயே ஒரு சுவாரஸ்யமான போர்க் குரலையும் எழுப்பினார்.''

""அதை நான் சொல்றேன்... தா.பா. தொடர்ந்து பேசுறப்ப, இந்த விழாவுக்கு கர்நாடக மாநில கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரலை. அவர் கிட்டே காவிரித் தண்ணீர் கேட்போம்னு நினைச்சி வரலைன்னு நினைக்கிறேன். கேரள மாநிலச் செயலாளர் திவாகரன் வந்திருக்கிறார். அவரை விடப்போறதில்லை. தயவு செஞ்சி முல்லைப் பெரியாறு அணையைத் திறந்துவிடுங்க. நாங்க காய்கறி விளைவித்து உங்களுக்குத் தர்றோம். மாடுகளை நல்லா வளர்த்து உங்களுக்குத்தானே உணவாத் தரப் போறோம் என்று தா.பா. பேசுனப்ப நல்ல ரெஸ்பான்ஸ். இந்த புதிய கட்டிடம், தா.பாவுக்கு விஸ்வரூப வெற்றின்னு தோழர்கள் சொல்றாங்க.''

ad

ad