புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2014





வுலிவாக்கத்தில், 28-ந் தேதி சனிக்கிழமை மாலை, 11 மாடிக் கட்டிடம் இடிந்த விபத் தில் 61 அப்பாவித் தொழிலாளர்கள் பலியான சோகம் மறைவதற்குள், அடுத்த ஏழாம் நாள் இரவே, சென்னை செங்குன்றம் அருகே இருக்கும் அலமாதி எடப்பாளையத்தில் குடோன் சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் துடிதுடித்து உயிரிழந்திருக் கிறார்கள். 

6-ந் தேதி காலை 7.30 மணியளவில் நம் காதுக்கு இந்த நெருப்புத் தகவல் வந்து சேர, உடனடியாக எடப்பாளையம் நோக்கி விரைந்தோம். ஆம்புலன்ஸுகளும் காவல் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் அந்த ஊரை நோக்கி விரைந்தபடியே இருந்ததைப் பார்க்கமுடிந்தது. எடப்பாளையம் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது. 


"அடப் பாவிகளா. ஆபத்தான கட்டிடங்களைக் கட்டி, அப்பாவிகளின் உயிரை வாங்கறீங்களேடா? நீங்கள் லாம் உருப்படுவீங்களா?' என பொதுமக்கள் பலரும், பதட்டமும் பரபரப்புமாக அழுது அரற்றிக் கொண்டிருந்தனர். ஸ்பாட்டுக்கு முண்டியடித்தவர்களை ‘"ஓடுங்க ஓடுங்க.... வேலைக்கு இடைஞ்சலா வந்துக் கிட்டு..'’என்றபடி போலீஸ் டீம் துரத்தியடித்தபடியே இருந்தது. கலெக்டர் வீரராகவராவ், கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் போன்ற அதிகாரிகள் ஸ்பாட்டில் ஆஜராகியிருந்தனர். 16 அடி உயர முள்ள குடோன் சுவரின் ஒரு பகுதி, இடிந்து விழுந்து அதன் அருகே இருந்த குடிசைகளை அப்படியே சமாதி பண்ணியிருந்தன. மோப்ப நாய்கள் மனித உடல்கள் இருக்கும் பகுதியை ஸ்மெல் செய்து, குரைப் பின் மூலம் அடை யாளம் காட்ட, அந்தப் பகுதியின் இடிபாடுகளை பொக் லைன்கள் மூலம் அகற்றியபடியே இருந் தனர். தோண்டத் தோண்ட சடலங் களாக வந்தன. அவற்றை மீட்டு சாலையிலேயே வரிசை யாகக் கிடத்தினர். அப்போது இடிபாடுகளுக்குள் இருந்து திடீரென ஒரு கை வெளியே குபுக்கென நீள, அங்கே மீட்புப் பணியினர் ஓடி, இடிபாடு களை நீக்கினர். அங்கே ஒரு இளைஞர் அரை மயக்கத்தில் முனகிக்கொண்டிருந்தார். அவரை அப்படியே தூக்கி ஆம்புலன்ஸுக்குக் கொண்டு வந்தனர். குளுக்கோஸ் ஏற்றி, முதலுதவி செய்ததும்..... 

""என் பெயர் நாகராஜ். எங்க அப்பா பாண்டியோடு இங்க வேலை பார்த் துக்கிட்டிருந்தேன்.  எங்களுக்கு சொந்த ஊர் ஆந்திரமாநில ஸ்ரீகாகுளம் கொல்லி வாசி கிராமம். சனிக் கிழமை சம்பள நாள். அதனால் நானும் எங்க அப்பாவும் சிக்கன் ஃப்ரைடு ரைஸ் சாப் பிட்டுட்டு தூங்கப் போனோம். திடீர்ன்னு மழை பெய்தது. கூரையில் இருந்து என் முகத்தின் மீது மழை தண்ணி சொட்டுச்சு. அதனால் ஒரு துண்டை முகத்தில் போட்டுக்கிட்டு தூங்கினேன். அப்ப திடீர்ன்னு எங்க குடிசையின் கூரை அப்படியே சரிஞ்சி விழுந்தது. உடனே எங்கப்பா, என்னைக் கூரை அமுக்காமல் இருக்க, என் மீது கவுந்து, முதுகால் கூரையைத் தாங்கிக்கிட்டார். பயப்படாதப்பான்னு எனக்கு தைரியம் சொன்னார். அப்பதான் டொமீர்ன்னு  சுவர் இடிஞ்சி எங்க கூரைமேல் விழுந்துச்சி. எங்கப்பா என்மேல் அப்படியே படுத்துட்டார். எப்படியாவது தப்பிச்சிட லாம்ன்னு கை, காலை உதறிப்பார்த்தேன். முடியலை. ஒரே இருட்டா இருந்தது. உடம்பெல்லாம் வலி. அப்படியே மயங்கிட்டேன். என் அப்பா எங்கே? அவரைப் பார்க்கணும். நானும் அவரும் ஊருக்கு போகணும். சுவரில் நாங்க சிக்கியது தெரிஞ்சா எங்க அம்மா பயப்படுவாங்க. அங்க எங்களுக்கு விவசாய நிலம் இருக்கு. ஆனா சரியா விளைச்சல் இல்லை. அங்க கூலியும் அதிகம் கிடைக்காது. அதனாலதான் இங்க வேலைக்கு வந்தோம்'' என்றார் நாகராஜ் பீதியோடு. அவரது அப்பா பாண்டி, சடலமாக மீட்கப்பட்டதை அப்போது அவரிடம் யாரும் தெரிவிக்கவில்லை. அவரை மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

இடிபாடுகளை முழுதும் நீக்கியதில் 4 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 11 பேர் சடல மாகக் கிடந்தனர். உடல்களை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பியவர்கள், அந்தக் குடிசைகளின் சிதிலங்களையும் கட்டிட இடிபாடுகளையும் அப்படியே வழித்து லாரிகளில் ஏற்றி அனுப்பிவிட்டார்கள். அதன்பின் அங்கே அந்த குடிசைகள் இருந்ததற்கான சுவடுகளே இல்லை. 

ஸ்பாட்டில் இருந்த செங்குன்றம் 11வது வார்டு கவுன்சிலர் திருநாவுக்கரசு நம்மிடம் ""இந்த குடோனை 9.3 ஏக்கரில் பிரமாண்ட மாகக் கட்டியிருக்காங்க. அதைச் சுற்றிதான் 16 அடி உயரத்தில் பெரிய மதில்சுவர் எழுப்பியிருக்காங்க. இந்த குடோன், ’கட்ட’ பாலா என்பவருக்குச் சொந்தமானது. இந்த குடோனுக்கு எதிர்புறம் அவரோட அண்ணன் மோகன், ஒரு குடோனைக் கட்டிக்கிட்டு இருக்கார். அவரோட கட்டு மானப் பணிக்கு வந்த ஆந்திரா மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளிகள்தான், பாலா குடோனின் சுவரோரம் குடிசை போட்டுத் தங்கியிருந்திருக்காங்க. 7 குடிசை யில் மொத்தம் 30 பேர் தங்கியிருந்தாங் களாம். அன்னைக்கு சம்பளம் வாங்கிய சிலர், சொந்த ஊர் போனதால் அவங்கள் லாம் உயிர் தப் பிச்சிருக்காங்க. எந்த பாவமும் அறியாத 11 தொழிலாளர்கள் பலியானது ரொம்பக் கொடு மைங்க''’என்றவர்,


""இந்தப் பகுதியில் நூற் றுக்கணக்கான குடோன்கள் இருக்கு. அதில் அனுமதி பெறாத குடோன்கள் அதிகம். இங்கே ஏன் குடோன்கள் அதிகம்ன்னா, இந்தப் பகுதி, வடமாநிலங்களில் இருந்து வர்றவங்களுக்கு நுழைவு வாயில். வட மாநிலங்கள்ல இருந்து வர்ற வெங் காயம், உருளை, மற்றும் மெடிசன்ஸ் போன்றவை இந்த குடோன்கள்ல வைக்கப்பட்டு, இங்கே இருந்து வெளியே போகும். அதேபோல் வட மாநிலங்களில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக சென்னை ஹார்ப ருக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வரும்போது, அதையும் கப்பல் வரும்வரை இங்கே ஸ்டாக் வைப்பாங்க. இப்படி வடநாட்டுக்காரங்களின் குடோன்கள் தேவையை தெரிஞ்சிக் கிட்ட பண முதலைகள் பலரும், இடத்தை இந்தப் பகுதியில் வாங்கிப் போட்டு, அதை குடோன்களா ஆக்கிடறாங்க. கட்ட பாலாவின் குடோனுக்கு மட்டும் மாதவாடகை 30 லட்சம்ன்னா குடோன்களின் வரு மானத்தைப் பாருங்க. இதில் ஒரு நெருடலான விசயம் என்னன்னா, குடோன்களுக்குள் என்ன பொருட்கள் இறங்குதுன்னு வெளியில் உள்ளவங்க பார்க்கமுடியாதபடி மிக உயரமான சுவர்களை குடோன்களைச் சுத்தி எழுப்பிடறாங்க. இப்படி பொருட்களை மறைக்கவேண்டிய அவசியம் என்ன? சட்ட விரோதப் பொருட்களும் இந்தப் பகுதிகளில் இருக்கும்  குடோன்களில் பதுக்கப்படறதாவும் பேச்சு உண்டு'' என்றார் அழுத்தமாய்.

இந்த நிலையில் இடிந்த கட்டிட சுவருக்கு சொந்தக்காரரான பாலா, போலீஸில் சரணடைந்து விட்டார். கட்டுமானப் பணியின் போது தொழிலாளர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால், தொழிலாளர் சட்டப்படி, அக்கட்டிடத்தின் உரிமையாளர், பொறியாளர், தொழிலாளர்களைக் கொண்டு வரும் ஏஜெண்ட், மேஸ்த்திரி என அனைவருமே பொறுப்பானவர்கள். எனவே புதிய கட்டிடத்தின் பொறியாளர் முருகேசன், மேஸ்த்திரி தேவேந்திரன் போன்றவர்களைக் கைது செய்த போலீஸ், புதுக்கட்டிடத்தின் உரிமையாளர் மோகனைத் தேடிக் கொண்டிருப்பதாக பாவனை பண்ணிக் கொண்டி ருக்கிறது. 

அலமாதி ஊராட்சித் தலைவர் சசிகலாவின் கணவர் அலமாதி சேகர் நம்மிடம், ""இந்த குடோன்கள்ல செம் மரக்கட்டை மாதிரி யான பொருட்களை கடத்திவந்து பதுக்குற காரியங்களெல்லாம் நடக்கத்தான் செய்யுது. சமீபத்தில் கூட ரெய்டு பண்ணி இந்த ஏரியா வில் செம்மரக் கட்டை களைப் பறிமுதல் செய் தாங்க. இதில் இன் னொரு முக்கியமான ரகசியம் ஒண்ணு இருக்கு. இப்ப இடிஞ்சி விழுந்து 11 பேரின் உயிரைக் குடிச்ச குடோன்சுவர் இருக்கே, இதைக் கட்டிய காண்ட்ராக்டர் யாரு தெரியுமா? தேவனேரி மாரி. இவர் சோழவரம் ஒன்றிய துணைத் தலைவர். அதோட இவர் பால்வளத்துறை மந்திரி இருக்காரே மாதவரம் மூர்த்தி, அவரோட சம்பந்தி.  அதனாலதான் பாலா, புதிய கட்டிடத்தின் பொறியாளர் முருகேசன், மேஸ்த்திரி தேவேந்திரன் போன்றவர்களைக் கைது செய்த போலீஸ், கொலைச்சுவரைக் கட்டிய மந்திரி சம்பந்தி தேவனேரி மாரியை மட்டும் கண்டும் காணாத மாதிரி இருக்கு'' என்றார் எரிச்சலாய்.

’சார் என் பெயரோ படமோ வேண்டாம் ’ என்று பேசத்தொடங்கிய அந்த ஏரியாப் பிரமுகர் ஒருவர் ""புதுக் கட்டிடத்தைக் கட்டி வரும் மோகன் இருக்காரே அவர் ஒரு மந்திரிக்கு மிகவும் நெருக்கமானவர். பினாமின்னு கூட பேச்சு உண்டு. அவருக்கும் அவர் தம்பி பாலாவுக்கும் சில மனஸ்த்தாபங்கள் உண்டு. அதனால் தனது காம்பவுண்ட் சுவருக்கு பக்கத்தில் தொழிலாளர் களை குடிசை போட்டு தன் அண் ணன் மோகன் தங்க வைத்த போது, "உங்க இடத்தில் அவங்களை தங்க வச்சிக்கங்க. என் குடோனுக்கு வர்ற வண்டிகளை நிறுத்த இந்தக் குடி சைகள் இடைஞ்சலா இருக்கு'ன்னு அடிக்கடி நச்சரித்து வந்தார். ஆனா அதை மோகன் கண்டுக்கவே இல்லை. அவங்களை வேற இடத் துக்கு மாத்தியிருந்தா இந்த உயிர்ப் பலி நடந்தே இருக்காது'' என்றார்.

அன்று சோழவரம் பகுதியில் ஆவின்பால் பூத்தை திறந்து வைக்க இருந்த அமைச்சர் மாதவரம் மூர்த்தி, சம்பவத்தைக் கேட்டு, விழாவை ரத்து செய்துவிட்டு, ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார்.  அவரை நெருங்கிய நாம், "இடிந்த சுவரைக் கட்டியவர் உங்க சம்பந்தி தேவனேரி மாரியாமே?' என்றோம். இதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டு நகர்ந்தார் அமைச்சர்.

இந்த கொடூரம் குறித்து தமிழக கட்டிடத் தொழிலாளர் சங்கத் தலைவர் பொன்.குமாரிடம் கேட்டபோது ‘""தமிழகத் தொழிலாளர் களுக்கு தமிழகத்தில் அதிக சம்பளம் கொடுக்கவேண்டும் என்று நினைத்து, பலரும் ஆந்திரா மற்றும் வடநாட்டு தொழிலாளர்களைக் கொண்டுவந்து, குறைந்த சம்பளம் கொடுத்து, இரவுபகலாக  அவர்களிடம் வேலை வாங்குகின்றனர். அதனால்தான் கட்டிட விபத்துக்களில் வடமாநிலத்தவர்களே அதிகம் பலியாகின்றனர். தொழிலாளர் பாதுகாப்பு சட்டப்படி, தொழிலாளர்களை கட்டுமானப் பணி நடக்கும் இடங்களில் தங்கவைக்கக் கூடாது. இதைக் கடைபிடித்தாலே உயிர்ப்பலி களை தடுத்துவிடலாம். மவுலிவாக்கம் 11 மாடி இடிந்து விழுந்ததில் பலியா னோருக்கு 2 லட்சம் அறிவித்த ஜெ., சீமாந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திரத் தொழிலாளர்கள் குடும்பங் களுக்கு மேற்கொண்டு 5 லட்சம் என அறிவித்ததும், தானும் தமிழகக் குடும்பங்களுக்கு 5 லட்சத்தை அறி வித்து, அந்த இறப்பிலும் அரசியல் செய்தார்.  கமர்ஷியலுக்காகவோ தொழிற்சாலைகளுக்காகவோ புதிதாகக் கட்டிடங்கள் கட்டப்படும்போது அதை ஆய்வு  செய்வதற்காக கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் தொழிற் சாலை ஆய்வாளர் என்ற அதிகாரி இருக்கிறார்'' என்றார். 

இதுகுறித்து நாம் அந்த அதிகாரியிடம் கேட்டபோது  ""நான்கு மாவட்டத்துக்கு நான் ஒரு அதிகாரி. எப்படி எல்லாவற்றையும் பார்க்க முடியும்? அதேபோல் கட்டிடம் கட்டுபவர்கள் எங்களிடம் ஆர்.சி.பதிவு செய்யவேண்டும். அப்படி செய்திருந் தால் நாங்கள் போய் ஆய்வு நடத்தி யிருப்போம். பலர் இதைச் செய்வ தில்லை. நாங்களாக ஆய்வு செய்திருக்க லாம். அதற்கு அதிகாரம் உண்டு. ஆனால் ஆள் பற்றாக்குறை காரணமாக ஆய்வு செய்யவில்லை''’ என பதில் சொன்னார்.

இனியாவது, கொத்துக்கொத்தாய் உயிர்களை பலிகொள்ளும், கட்டிட விபத்துக்களுக்கு இந்த அரசு முற்றுப் புள்ளி வைக்க முன்வருமா?

ad

ad