புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2014




குற்றாலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த சசிகலாவின் கணவர் எம்.நட ராஜனை மீண்டும் ஒருமுறை கைது செய்திருக்கிறது ஜெயலலிதாவின் காவல்துறை. கராத்தே வீரர் ஹூசைனி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை எடுத்திருக் கிறார்கள். இதன் பின்னணியிலும் ""போயஸ் கார்டன் போனாலும்'' -மிரட்டினார் நடராஜன் - ஹூசைனி பாய்ச்சல்'' என்ற தலைப்பில் ஜூலை 2-4 இதழில் விரிவாக பதிவு செய்திருந்தோம். இந்த கட்டுரையின் முடிவில், "ஹூசைனி கொடுத்த புகார் தொடர்பான மேலிட உத்தரவுக்காக காத்திருக்கிறோம்' என்று போலீஸ் தரப்பு சொன்னதையும் சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த நிலை யில், மேலிட உத்தரவு கொடுக்கப்பட்டதால் நடராஜனை கைது செய்திருக்கிறார் கமிஷனர் ஜார்ஜின் நம்பிக்கைக் குரிய சென்னை மத்திய குற்றப் பிரிவு டி.சி. ஜெயக்குமார்.  

"குற்றாலத்தில் என்ன நடந்தது?' நடராஜனின் வழக்கறிஞரான மகேந்திரவர்மனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, ""நேற்று இரவு (6-ந்தேதி) என்னை தொடர்பு கொண்ட நடராஜன் குற்றாலத்துக்கு வருமாறு சொன்னார். அதன்படி நான் அங்கு போனேன். அவரை பார்த்தபோது தன்னை விசாரிப்பதற்காக சென்னை போ லீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து  6 பேர் கொண்ட டீம் குற்றாலத்திற்கு வந்துள்ளதாக சொன்னார். திங்கள் காலை (7-ந்தேதி) 7.30 மணிக்கு சீருடை இல்லாமல் மப்டி யில் வந்துள்ளார்கள் என, வாட்ச்மேன் வந்து தகவல் சொன்னார். அதற்கு நடராஜன், "காத்திருக்கச் சொல்லுங் கள். குளித்து விட்டு கூப்பிடுகிறேன்'னு சொன்னார். 

போலீஸ் வந்திருப்பதையடுத்து அண்ணன் (நடராஜன்) யார் யாரையோ தொடர்புகொண்டு பேசி னார். யாரிடம் என்ன பேசினார்ங்கிறது எனக்குத் தெரியாது. ஆனா, கோபமா பேசினார். பிறகு குளித்துவிட்டு வந்தார். நேரம் 10.30.ஐ கடக்க, வாட்ச்மேனை தள்ளி நிற்க சொல்லிவிட்டு போர்ட்டிகோ வரை வந்த போலீஸ், "சென் னைக்கு தகவல் சொல்லியாக வேண்டும். இப்பவே மணி 10.30 ஆயிடுச்சு. அவராக உள்ளே கூப்பிடுகிறாரா? இல்லே நாங்கள் உள்ளே போகவா?' என்று வாட்ச்மேனிடம் கறாராக சொல்லிக்கொண்டிருந்தனர். இதனை நடராஜனிடம் வாட்ச் மேன் சொல்ல, "சாப் பிட்டுக்கிட்டிருக்கேன். கூப்பிடுறேன்' என்று நடராஜன் சொன்னார். நேரம் 11.30 ஆனது. போலீஸை உள்ளே கூப்பிட்டார் நடராஜன். அவர்களிடம், "எதற்காக வந்திருக்கீங்க?' என கேட்க, "உங்க மீது கராத்தே ஹூசைனி புகார் கொடுத்திருக்கிறார். விசாரிக்கணும். சென் னைக்கு அழைத்துப் போக வந்திருக்கோம்'னு போலீஸ் சொன்னது. "என்னை அழைச்சிக் கிட்டு வர சொன்ன போலீஸ் அதிகாரி யாரு?'ன்னு நடராஜன் கேட்க, "அதெல்லாம் சொல்ல முடியாது. நீங்க வாங்க. எதுவாக இருந்தாலும் சென்னைக்குப் போய் பேசிக்க லாம்'னு போலீஸார் வலியுறுத்தினர். அதற்கு நடராஜன், "9-ந்தேதி திண்டுக்கல்லிலும், சென்னையிலும் முக்கியமான திருமண நிகழ்வு இருக்கு. இரண்டிலும் நான் கலந்துகொள்ள ணும். இப்போ சம்மன் கொடுத்திட்டுப் போங்க. கல்யாண ஃபங்ஷன்ல கலந்துகிட்டு பிறகு நானே கமிஷனர் அலுவலகத்துக்கு வர்றேன்' என்று விளக்கமளிக்க, அதற்கு போலீஸார் ஒப்புக்கொள்ளவில்லை. விடாப் பிடியாக போலீஸார் வற்புறுத்த, அதனை யடுத்து போலீஸாருடன் கிளம்பினார் நடராஜன். மதுரை உயர்நீதி மன்றத்துக்கு வழக்கறிஞர்களை வரச்சொல்லட்டான்னு அவரிடம் நான் கேட்க, "மதுரைக்கு வேணாம். என்னை சென்னைக்கு அழைச்சிட்டு போறதினால அங்கு பார்த்துக்க லாம்'னு சொல்லிட்டு கிளம்பி போனார் நடராஜன்'' என்று விவரித்தார் மகேந்திரவர்மன்.

நடராஜனை போலீஸார் அழைத்து வரும்போது, "அவனே (ஹூசைனி) ஒரு ஃபிராடு. அவன் கொடுத்த புகாரில் என்னை விசாரிக்கிறீங்களே?' என்று போலீ ஸாரிடம் சொன்ன நடராஜன், "என்னை அடையாறு, சாஸ்திரி நகர்னு எந்த ஸ்டேசனுக்கும் அழைச்சிக்கிட்டுப் போகக்கூடாது. நேரா கமிஷனர் ஆபீஸுக்குத்தான் போகணும். அங்குதான் என்னை விசாரிக்கணும்' என்று சொல்லிக் கொண்டே வந்தாராம் நடராஜன்.

இதற்கிடையே நடராஜனின் கைது விவகாரம் அ.தி.மு.க. தரப்பில் பரவ, அக்கட்சி வட்டாரங்களில் ஏகத்துக்கும் பரபரப்பு. ஹூசைனி யின் புகாரில் நடராஜன் கைது செய்யப்பட்டிருப்பதால், இது குறித்து ஹூசைனியிடம் கேட்ட போது, ""நடராஜன் என்னை மிரட் டிய விவகாரத்தை ஒளிவு மறைவு இல்லாமல் எல்லா உண்மைகளையும் கடந்த முறை நக்கீரன் பேட்டி எடுத்தபோது சொன்னேன். நக்கீரனிலும் உண்மைகளை அப்படியே எழுதியிருந்தீர்கள். அதுவும், "போயஸ்கார்டனில் போய் ஒளிந்து கொண்டாலும் அங்கேயும் வருவேன்னு அவர் மிரட்டியது, கமிஷனர் ஜார்ஜை இங்கே வரவழைக்கவா? என்று சொல்லிக்கிட்டே என்னை அடிக்கப்பாய்ந்தது' எல்லாத்தையும் பதிவு செய்திருந்தீர்கள். அதேபோல, இணை கமிஷனர் ஆபாஷ்குமாரிடம் புகார் கொடுத்த போதும் நடராஜன் எப்படியெல்லாம் என்னை மிரட்டினார்ங்கிறதை முழுமையாக சொன்னேன். நான் கொடுத்த புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை உளவுத்துறை மூலமும்   அரசாங்கம் விசாரித்திருக்கிறது. உண்மை என தெரிந்ததும் நடராஜனை கைது செய்திருக்கிறார்கள். கார்டனுடன் நடராஜன் ராசியாகிவிட்டார் என்று நம்பியவர்களுக்கெல்லாம் இந்த கைது ஒரு ஷாக்காக இருக்கும்'' என்று மகிழ்ச்சியாக விவரித்தார் ஹூசைனி நம்மிடம்.

ஜெயலலிதா ஆட்சி 2011-ல் அமைந்த பிறகு, முள்ளிவாய்க்கால் முற்றத்திற்காக எனது நிலத்தை மிரட்டி வாங்கினார் நடராஜன் என்று அமலபுஷ்பமேரி கொடுத்த புகாரின் பேரில் முதன் முதலாக 2012 பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்  நடராஜன். இதில் ஜாமீனில் வெளியே வர நடராஜன் முயற்சிக்க, ஆல்பர்ட் கொடுத்த நில அபகரிப்பு புகாரிலும், எனது முந்திரிக்காட்டை சேதப்படுத்திவிட்டார் என மகாதேவன் கொடுத்த புகாரிலும் மழைநீர் வரத்துகால்வாயை மறித்துவிட்டார் என்கிற புகாரிலும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட அவர், 80 நாள் சிறை வாசத்துக்குப்பிறகு விடுதலையானார். தற்போது மீண்டும் கைது செய்யப் பட்டிருக்கிறார். இந்த வழக்கிலிருந்து உடனடியாக வெளியே வந்துவிடுவாரா? அல்லது மேலும் மேலும் பல வழக்குகள் ஏதேனும் போடப்படுமா? என்கிற பதட்டம் நடராஜன் உறவினர்கள் மத்தியில் பரவியுள்ளது.

ad

ad