புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2014




ந்தப் போராட்டமும் அது ஏற்படுத்திய தாக்கமும் இன்னமும் பேசப்படுகிறது. டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து ஜனாதிபதி, பிரதமர் என்று நாட்டின் மிகமுக்கிய தலைவர்கள் எல்லாம் இரங்கல் தெரிவித்து கண்டிக்கும் அளவிற்கு இந்தியாவே பொங்கி எழுந்தது தேசிய ஊடகங்கள் முதல் உள்ளூர் பத்திரிகைகள் வரை இது குறித்து விவாதம் செய்தன. தலைநகரில் நடந்தால் மட்டும்தான் பாலியல் வன்முறையா என்ற கேள்வியை எழச் செய்கிறது கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் பாலியல் வன்முறைக் கொடூரங்கள்.

குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளில் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவுகளுக்குள் கடந்த 6 மாதத்தில் 6 தலித் பள்ளி மாணவிகள்  பாலியல் கொடுமைக்குள்ளாகியுள்ளனர். இதில் ஒரு மாணவி தற்கொலையும் இன்னொரு மாணவி கொலையும் செய்யப்பட்டுள்ளார். பதறவைக்கும் இந்தக் கொடூரங்கள் பற்றிய புலனாய்வில் இறங்கினோம்.


கொடூரம் - 1


குளித்தலை தொகுதி நெய்தலூர் இந்திரா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பால்ராஜ் அவரது மனைவி தவமணி  ஆகியோரின் 4 வயது மகள், தன் வீட்டின் எதிரே உள்ள பால்வாடியில் படிக்கச் சென்றார். அங்கே அதே ஊரைச் சேர்ந்த ராமன் மகனான 27 வயது மகேந்திரன், காலை 10.30 மணிக்கு குழந்தைக்கு மிட்டாயை காண்பித்து ஏமாற்றி தூக்கிச் சென்று அந்த கொடுமையைச் செய்திருக்கிறான். 

கொடூரம் - 2


குளித்தலை தொகுதி காவல்காரன்பட்டியில் முடிவெட்டும் தொழில் செய்பவரின் மகள் லோகாம் பாள். அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி. வீட்டின் அருகே உள்ள சந்தைக்கு சென்று வரும் போது அந்த ஏரியா வில் உள்ள விடலைப் பையன்கள் சிலபேர் கிண்டல் செய்து விரட்ட, பயந்துபோய் ஓடிவந்த லோகாம் பாள் தவறி விழ, முகமெல்லாம் காயம். வீட்டுக்கு வந்த மாணவி யிடம் பெற்றோர் சரமாரியாகக் கேள்விகள்கேட்டு, "அங்கே ஏன் போனே' என்று விசாரிக்கவும் திட்டவும் செய்யவே, அடுத்தநாள் காலை அவமானம் தாங்க முடியா மல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் மாணவி லோகாம்பாள்.

கொடூரம்- 3


குளித்தலை தொகுதி தோகை மலைக்கு அருகில் உள்ள பெரியபுத்தூர் கீரையான் பட்டியை சேர்ந்த டிரம்செட் வாசிப்பவர் மூக்கன். இவர் டிரம்செட் வைத்து ஊருக்கு ஊர் சென்று அடிப்பவர். இவருடைய குழுவில் இருந்தான் 27 வயது  தர்மராஜ். கடந்த 1 மாதத்திற்கு முன்பு வீட்டில் தனியாக  இருந்த மூக்கன் மகள் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், "உங்க அப்பா உன்னை கூட்டிகிட்டு வரச் சொன்னாரு'’என்று சொல்லி ஏமாற்றி கூட்டிச் சென்று பாலியல் கொடுமைக்குள் ளாக்கினான். அவனிடம் போராடியதில் காயமடைந்த  மாணவிக்கு 7 தையல் போடப்பட்டுள்ளது. 


கொடூரம் - 4 


குளித்தலை தொகுதியைச் சேர்ந்த லாலாபேட்டை அருகே உள்ள கிராமம் கீழசிந்தாதவடி. இங்கே கடந்த 1 மாதத்திற்கு முன்பு பெரிய மாரியம்மன் கோயிலுக்கு பூச்சொரிதல் விழா இரவு முழுக்க நடந்தது.  ஊரே திருவிழாவில் இருந்தபோது அந்தக் கோயிலின் எதிர்புறத்தில் உள்ள வீட்டில் 7-வது படிக்கும் மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்கிறவன் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியிருக்கிறான்.

கொடூரம் - 5    

குளித்தலையை அடுத்த பரளி என்கிற கிராமத்தில் உள்ளவர் ஜீவனாந்தம். இவருடைய மகள் கோட்டமேட்டு ஆதிதிராவிடர் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மயிலடியை சுடுகாடு அருகே ஒருவன் பாலியல் வன்முறைக்குள்ளாக்க, அவனை கைது செய்ய சொல்லி 3 நாள் போராடியும் அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது காவல்துறை.

நாம் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவியின் தந்தை ஜீவானந்தத்திடம் பேசினோம். மனவேதனைகளைக் கொட்டினார். ""கடந்த 20-ஆம் தேதி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு சைக்கிளில் வந்திருக்கிறாள் எங்கள் மகள்.  கீழமயிலடி சுடுகாட்டு அருகே வயல் இருக்கிறது அங்கே அடைக்கன் என்பவன் தினமும் கட்டில் போட்டு படுத்திருப் பானாம். அன்னைக்கு அவன் வாழைத்தோட்டத்திற்கு அருகே நின்றுகொண்டு சைக்கிளில் வந்த என் மகளிடம், "என்னோட கை உடைஞ்சிருக்கு. இந்த புல்லுக்கட்டை கொஞ்சம் தூக்கிவிடு' என்று சொல்ல, அவளும் பயந்துகிட்டே சைக்கிளை விட்டு இறங்கியிருக்கிறாள். உடனே, வாயைப் பொத்தி தூக்கிட்டுப்போய் நாசம் பண்ணிட்டான். அவ பித்துப்புடித்த மாதிரி வீட்டுக்கு வந்து எங்களிடம் சொன்னவுடன், பதறிப்போய் பள்ளிக்கூடத்தில் சொல்லி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். போலீஸ்காரங்க எம் பொண்ணை காப்பகத்திற்கு அனுப்பிட்டாங்க. இரண்டு நாள் எங்க கண்ணிலே காட்டலை. மருத்துவ பரிசோத னைக்கு அனுப்பியிருக்கிறதா சொல்லி, எங்க மகளை எங்ககிட்டே ஒப்படைக்கலை. நாங்க ஊர்க்காரவுங்க எல்லாம் சேர்ந்து குளித்தலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகை யிட்ட பிறகே என் மகளை எங்களிடம் ஒப்படைத்தார்கள். பாதிக்கப்பட்ட எங்களையே அலைய விடுது மகளிர் போலீஸ்'' என்று குமுறியவர், ""முத்துராஜா ஏரியாவில் உள்ள ஆளுதான் அவன்னு எம்பொண்ணு சொல்லுது. போலீசோ அவன் இல்லை, வேற ஒருத்தன்னு சொல்லுது. இந்த அரசாங்கத்த நம்பித்தானே நாங்க வெளியே புள்ளைங்கள அனுப்புறோம். இந்த கொடுமைக்காரனுக்கு குளித்தலை அ.தி.மு.க. வக்கீல் ஒருவர் சாதகமா இருக்கிறார்'' என்றார் வேதனையுடன்.

கொடூரம்  - 6


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி - நாகவள்ளி தம்பதியரின் மகள் வினிதா (17). இவர் கடந்த 23-ஆம் தேதி பிச்சம்பட்டி சாலையில் உள்ள ஒரு வெற்றிலை கொடிக்கால் வயலில் பாலியல் வன்முறைக் குள்ளாகிக் கொலை செய்யப் பட்டு கிடந்தார். குற்றவாளி களைப் பிடிக்க 13 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய தாழ்த் தப்பட்டோர் ஆணைய உதவி இயக்குனர் ராமசாமி, விசாரணை அதிகாரி இனியன் ஆகியோர் பிச்சம்பட்டிக்கு சென்று, மாணவி கொலை செய்யப்பட்ட இடத்தை பார்வை யிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத் திற்கு 1 லட்சத்து 85 ஆயிரம் நிவாரண நிதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் பிச்சம்பட்டிக்கு சென்ற போது, ஊரே கொந்தளிப்புடன் கலவர பூமி போல காட்சி யளித்தது. காவல்துறையை மக்கள் சபித்துக் கொண்டிருந்தார்கள். வினிதாவின் அம்மா நாகவள்ளி நம்மிடம், தன் மகளின் புகைப்படத்தை காண்பித்து, ""பிளஸ் 2 முடித்துவிட்டு காலேஜ் போறதுக்கு ஃபீஸ் கட்ட பணம் வேணும்னு சொல்லி லீவு நாளைல கொசுவலை கம்பெனிக்கு வேலைக்குப் போனா.  தினம் 160 ரூபாய் சம்பளம். இன்னைக்கு அவளுக்கு காலேஜ் ஆரம்பிச்சுட்டாங்க…. ஆனா அவ இல்ல சார். இந்த ஊரில் இருந்து 5 பேர் வேலைக்குப் போனாங்க. எல் லாரும் ஒன்னாத்தான் பஸ்ஸை விட்டு இறங்கியிருக்காங்க…. இவளுக்கு மட்டும் சைக்கிள் இருந்ததால முன்னாடியே கிளம்பி வந்திருக்கா. அவளை இப்படிப் பண்ணிட்டாங்களே... இவளைக் கொலை செய்ய எப்படித்தான் அந்தப் பாவிகளுக்கு மனசு வந்ததோ?'' என்றபடி தலையில் அடித்துக்கொண்டார்.

வினிதாவின் அப்பா பொன்னுசாமி நம்மிடம், ""இந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஜாதிக்கு ஒவ்வொரு நாள் முறை, அன்னைக்கு முத்துராஜா இனத்து மக்கள் முறை. நைட் எத்தனை மணிக்கு வந்தாலும் அந்த ரோட்டில் ஆள் நடமாட்டம் இருக்கும். அதனால் தான் எல்லோரும் பயம் இல்லாம அனுப்பினோம். அந்த கொடிக்கால் தோட்டத்திலே இருந்துக்கிட்டுத்தான் தினமும் கண் காணிச்சி இதை செய்திருக்காங்க'' என்றார் நம்பிக்கை குறைந்த குரலில். தாழ்த்தப்பட்டோர் ஆணைய உதவி இயக்குனர் ராமசாமி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்த்துவிட்டு நம்மிடம் பேசினார். ""இப்பகுதியில் உள்ள பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் உள்ள அச்ச உணர்வைப் போக்கி, பாதுகாப்பைப் பலப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார். 

குற்றவாளிகளைப் பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி மண்டல டி.ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் நம்மிடம், ""தோழிகளுடன் பஸ்ஸிலிருந்து இறங்கிய வினிதா சைக்கிளில் அவர் களைக் கடந்து சென்றிருக்கிறார். அடுத்த 6 நிமிடங்களில் அவர் கடத்தப் பட்டுள்ளார். அந்த நேரம் இருட்டிவிட்டதால் வினிதாவின் சைக்கிள் பக்கவாட்டில் விழுந்து கிடந்ததைக் கவனிக்காமல் தோழிகள் கடந்து சென்றுவிட்டனர். இந்த தகவல்களை வைத்துப் பார்க்கும்போது வினிதா விற்கு அறிமுகம் ஆன நபர்கள் யாரும் அவரை தடுத்து நிறுத்தினார் களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மற்றபடி செல்போன் பயன்பாடு தொடர்பாக பெரிய அளவில் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. அந்த பகுதியில் மாலை நேரங்களில் சந்தேகத்திற்கிட மாக நடமாடும் நபர்கள் குறித்த பட்டியல் தயார் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தரும் தகவல்களையும் கவனத்தில் கொண்டுள்ளோம்'' என்றார்.

கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் பாலியல் வன்முறைகள் குறித்தும் அதிலும் தலித்  சமூகத்தினரே பாதிக்கப்படுவது குறித்தும் டி.ஜ.ஜி.யிடம் கூறி, "இது சாதி ரீதியான பதட்டத்தை உரு வாக்கியுள்ளதே' என்றோம்.  

""நீங்கள் சொல்லித்தான் மற்ற சம்பவங்கள் பற்றி அறிகிறேன். முழுமையாக விசாரணை செய் வோம். அவசரப்பட்டு எதையும் சொல்ல முடியாது'' என்றார்.

கரூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பெரும்பாலும் வட மாநிலத்தினரே எஸ்.பி. யாக வருகிறார்கள். அதனால் அவருக்குக் கீழே உள்ள அதிகாரி கள்தான் விசாரணைகளைக் கவனிக்கிறார்கள். அவர்களை சரி செய்துவிட்டால், தப்பிவிடலாம் என்ற நம்பிக்கையிலேயே குற்ற வாளிகளின் செயல்பாடுகள் உள்ளன. தோகைமலை, குளித் தலை காவல்நிலையங்களில் வெளி உலகிற்கு தெரிந்து பதியப் பட்டுள்ள பாலியல் வழக்குகளை விட...  வெளியில் தெரியாமல் லோக் கல் உளவு போலீஸ், இன்ஸ்பெக் டர், டி.எஸ்.பி. ஆகியோர் மூலம் பஞ்சாயத்து செய்து வைக்கப் பட்ட பாலியல் வழக்குகள் அதிகம்'' என்கிறார்கள் இப்பகுதிவாசிகள்.

வினிதா கொல்லப்பட்டது தொடர்பாக விசாரிக்கும் போலீ சார், அவருடன் பஸ்ஸிலிருந்து இறங்கிய மற்ற பெண்களை விசா ரணை என்ற பெயரில் அழைத்து,  வினிதா சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையன்தான் அவரை பாலியல் கொடுமை செய்து கொலை செய்தான் எனச் சொல்லும்படி வற்புறுத்துகிறார்களாம்.

இதையடுத்து, அப்பெண்களின் பெற்றோரும் அப்பகுதி மக்களும் தங்களை போலீஸ் டார்ச்சர் செய்வதாக கலெக்டரிடம் மனு அளித்திருப்பது, இவ் விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ad

ad