புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014




வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டி கடந்த 17 நாட்களாக போராடிவருகிறார்கள்  வேலையில்லா இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள். அசைந்து கொடுக்கவில்லை ஜெயலலிதா அரசு. இந்த நிலையில், தமிழரசன், ராமக்கண்ணன் உள்ளிட்ட 16 பேர் தனித்தனியாக தொடர்ந்த வழக்கில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சசிதரன்.

தமிழரசனின் வழக்கறிஞர் கணபதி சுப்ரமணியத்திடம் நாம் பேசியபோது, ""தேசிய கல்வி வாரியம் அமல்படுத்தியுள்ள உத்தரவின்படி ஆசிரியர் பணியிடங் களை நிரப்புவதற்காக டி.இ.டி. என்கிற தகுதித் தேர்வை நடத்துகிறது தமிழக அரசு. தகுதித் தேர்வின் மொத்த மதிப்பெண் 150. இதில் 90 மதிப்பெண்கள் பெறுகிறவர்கள் மட்டுமே தேர்ச்சிப் பெற்றவர்கள். இந்த தகுதித் தேர்வை ஒரு பக்கத்திலும், ஏற்கனவே படித்து முடித்துள்ள கல்வித் தகுதியை மறு பக்கத்திலும் நிறுத்தி இரண்டு பிரிவுக்கும் தனித்தனி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையை (அரசாணை எண்: 71) புகுத்தியுள்ளது தமிழக கல்வித்துறை. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்களில் யார் அதிகம் எடுக்கிறார்களோ அவர்களுக்குத் தான் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில்தான் லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, தகுதித் தேர்வுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் 60 சதவீதமாகவும் கல்வித் தகுதியின் வெயிட்டேஜ் மதிப்பெண் 40 சதவீதமாகவும் பிரித் திருக்கிறது கல்வித்துறை. இதில் கல்வித் தகுதிக்கான 40 சதவீதத்தையும் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருந் தால் 10 சதவீதமும் பட்டப்படிப்பு முடித்திருந்தால்  15 சதவீதமும், பி.எட். முடித்திருந்தால் 15 சதவீதமும் என பிரித்துள்ளனர். இங்குதான் சிக்கலே. 

10 வருடங்களுக்கு முன்பு 1200-க்கு 800, 900 மார்க் எடுப்பதே பெரிய விசயமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு அப்படி இல்லை. 1200-க்கு 1190 எடுக்கிறார்கள். காரணம் பாடத்திட்டம் கடினமில்லை, மதிப்பெண்கள் அதிகமாக எடுக்க பல வழிகளும் வசதிகளும் இருப்பது, தனியார் பள்ளிகள் அதிகரித்தல் என பல முன்னேற்றம் வந்து விட்டதுதான். அதனால், அண்மைக் காலங்களில் பள்ளிக் கல்வியையும் பட்டப் படிப்பையும் முடித்தவர்கள் அதிக மதிப்பெண்களுடன் இருப்பதால் கல்வித் தகுதிக்கான வெயிட்டேஜ் மார்க்கை அதிகம் எடுத்துவிடுகிறார்கள். 

அந்த வகையில், தகுதித் தேர்வில் 60-க்கு 40 வெயிட்டேஜ் மார்க் வாங்கும் பழைய பட்டதாரி ஒருவர்  கல்வித் தகுதியில் குறைந்த மதிப் பெண்ணே வாங்கியிருப்பதால் கல்வித் தகுதிக்கான வெயிட்டேஜ் மார்க் 40-ல் 10-தான் கிடைக்கிறது. அதனடிப்படையில் அந்த பட்டதாரி வாங்கிய மொத்த மதிப்பெண் 50 (40+10). அதுவே அண்மைக்கால பட்டதாரி ஒருவர் தகுதித் தேர்வில் 60-க்கு 25 மார்க் வாங்கியிருக்கிறார் என வைத் துக் கொள்வோம். அவரது கல்வித் தகுதிக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் ணை கணக்கிடும்போது அவர் பனிரெண்டாம் வகுப்பிலும் கல்லூரிப் படிப்பிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பதால் 40-க்கு 30 மார்க் எடுத்துவிடுவார். அந்த வகையில் அவர் எடுத்த மொத்த மதிப்பெண் 55 (25+30). இவருக்குத்தான் ஆசிரியர் வேலை கிடைக்கும். ஆக,  இந்த வெயிட்டேஜ் மதிப்பீடுகளால்  தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத் தவருக்கு வேலையில்லாத நிலையும் குறைவான மார்க் எடுத்தவருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது'' என்கிறார் வழக்கறிஞர் கணபதி சுப்ரமணியம்.

வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யப் போராடி வரும் பட்ட தாரிகளின் ஒருங்கிணைப்பாளரான புனிதாவிடம் பேசியபோது, ""வெயிட்டேஜ் மார்க் மூலம் ஒரு தரப்புக்கு அநீதி தரும் அரசாணை எண்: 71ஐ முற்றிலுமாக நீக்க வேண்டும். இதுபோல, தமிழகத் தை தவிர வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இல்லை. கல்வி அமைச்சரோ கல்வித்துறை அதிகாரிகளோ யாருமே கண்டுகொள்ளவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட எங்களில் 5 பேர் அரசின் பாராமுகத்தால் வெறுத்துப்போய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அப்பவும் அரசுக்கு மனம் இரங் கவே இல்லை'' என் றார் மிக கோபமாக வும் ஆதங்கமாகவும்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ""ஆசிரி யர்கள் சங்கத்தினரும் அரசு ஊழியர்கள் சங் கத்தினரும் கல்வி அமைச்சர் வீரமணி யிடம் முறையிட்டிருக்கிறார்கள். அமைச்சரோ, வெயிட் டேஜ் முறையில் எனக்கும் உடன்பாடில்லைதான் என்றி ருக்கிறார். கல்வித்துறையை பொறுத்தவரை துறையின் செயலாளர் சபீதா கொண்டு வருவதுதான் சட்டம். அத னை யாரும் கேள்வி கேட்க முடியாது. முதல்வர் மற்றும் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் தவிர, துறை யின் தவறுகளை வேறு யார் சுட்டிக்காட்டினாலும் திருத் திக்கொள்ளவேமாட்டார். 10,15 வருடங்களுக்கு முன்பு பட்டதாரி ஆனவர்களெல் லாம் ஆசிரியர் பணிக்கு தகுதி யானவர்களாக இருக்கமாட் டார்கள் என்று இவரே ஒரு முடிவை எடுத்து அவர்களை ஒழித்துக் கட்டத்தான் இந்த வெயிட்டேஜ் முறையைக் கொண்டுவந்து துக்ளக் தர்பாரை நடத்துகிறார் சபீதா'' என்று சுட்டிக்காட்டுகின்ற னர். அதிகாரி சபீதாவின் கருத்தறிய பலமுறை முயன் றும், அவரின் அலுவலக எண் ணில் மணி மட்டும் ஒலித்த படி இருந்தது. செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப்.

ad

ad